பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் ஆபாச படங்கள் மூலம் புதிய வகை ஹேக்கிங் நடவடிக்கையொன்று வேகமாக பயனாளர்களின் பக்கங்களை தாக்கி வருவதாக முறைப்பாடு எழுந்துள்ளது.பேஸ்புக்கின் Newsfeeds இன் ஊடாக அனுப்பப்படும் ஜாவா ஸ்கிரிப்ட் செய்தி ஒன்றை கிளிக் செய்வதன் மூலம் தனிநபர் பேஸ்புக் பக்கங்கள் ஹேக் செய்யப்படுகின்றன.
ஹேக்கிங் செய்யப்பட்ட புரொபைல் பக்கங்களிலிருந்து எடுக்கப்படும் புகைப்படங்கள், ஃமார்பிங் மூலம் ஆபாச புகைப்படங்களாக மாற்றப்பட்டு(Pornographic) அவர்களது நண்பர்களது மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்பப்படுகிறது.
இது தொடர்பில் தமக்கு தொடர்ச்சியாக தொலைபேசி முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் தொடர்பான அரச பிரிவு பேஸ்புக் நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளது.
இது ஒரு ஸ்பாம் நடவடிக்கை எனவும், இதனால் ஏற்பட்ட பாதிப்புக்களை கட்டுக்குள் கொண்டு வர கடுமையாக முயன்றுவருவதாகவும், ஸ்பாம் நடவடிக்கைகளிலிருந்து பாவணையாளர்களை காப்பதே எமது முதன்மையான செயற்பாடு எனவும் பேஸ்புக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சில போலியான Malware மற்றும் சில ஜாவா ஸ்கிரிப்டினால் அனுப்பப்படும் செய்திகளை நம்பி ஏமாறும் பயனாளர்கள் தமது உலாவிகளில் அவற்றை பதிவிறக்கம் செய்துவிடுவதன் விளைவாக, இந்த தாக்குதல் உள்ளடக்கம் விரைவாக பகிரப்படுகிறது என பேஸ்புக் தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்த பிரச்சினை இந்தியாவில் மாத்திரமல்லாது சர்வதேச ரீதியில் பேஸ்புக்கிற்கு சிக்கலை கொடுத்துள்ளது. பெருமளவான ஸ்பாம்கள் இந்த ஆபாச படங்கள் ஊடாக பேஸ்புக் பயனாளர்களின் புரொபைல்களை தாக்க தொடங்கியுள்ளன.
இதனை தடுக்க தனது நிர்வாக கட்டமைப்பில் புதிய பாதுகாப்பு விடயங்களை அறிமுகப்படுத்த வேண்டியுள்ளதாகவும் பேஸ்புக் சுட்டிக்காட்டியுள்ளது.
உலகெங்கிலும் இருந்து சுமார் 800 மில்லியன் பயனாளர்கள், பேஸ்புக்கில் பதியப்படும் இந்த ஆபாசபடங்கள் தொடர்பில் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.
இதுவொரு இனந்தெரியாத நபரின் ஹேக்கிங் நடவடிக்கையாக நிச்சயம் இருக்காது எனவும், யார் அந்த சந்தேக நபர் என்பது பேஸ்புக் நிர்வாகத்திற்கும் தெரிந்திருக்கலாம் எனவும் பிபிசி சுட்டிக்காட்டியுள்ளது.
பயனாளர்களது பேஸ்புக் பக்கத்தில் இந்த புதிய ஹேக்கிங் தாக்குதல் நடைபெறாமல் இருப்பதற்காக சில முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் பேஸ்புக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இனந்தெரியாத கோட்களை, பேஸ்புக்கின் Address Bar இல் ஒரு போதும் Copy, Paste செய்யாதீர்கள். எப்போதும் அப்டேட் செய்யப்பட்ட உலாவியை பயன்படுத்துங்கள்.
ஏதும் வித்தியாசமான, அசாதாரண நடவடிக்கைகள் ஏதும் உங்களது பேஸ்புக் பக்கத்திலோ அல்லது நண்பர்களின் பக்கத்திலோ தோன்றினால் உடனடியாக Flag பட்டன் மூலம் பேஸ்புக்கின் Report Links ற்கு தெரியப்படுத்துங்கள்.
0 comments:
Post a Comment