கூகுள் டாக்ஸ் இன் பயன்படும் சிறப்பம்சங்களும் !

மைக்ரோசாப்ட் ஆபீஸ் தரும் வசதிகளையே பயன்படுத்துபவர்கள் அவ்வளவாக Google Docs பயன்படுத்துவது இல்லை
படங்களைப் பார்க்க, டெக்ஸ்ட் கோப்புகளை இயக்க என எந்தத் தேவை என்றாலும் அதனை மைக்ரோசாப்ட் தரும் ஆபீஸ் அல்லது மற்ற புரோகிராம்கள் மூலம் தான் பார்க்கின்றனர்.
 
ஆனால் கூகுள் தன்னுடைய கூகுள் டாக்ஸ் மூலம் இந்த வசதிகள் அனைத்தையும் தருகிறது. இணையதளங்களைப் பார்க்கையில் அல்லது ஜிமெயில் தளத்தில் எந்த ஒரு கோப்புக்கான லிங்க்கில் கிளிக் செய்தாலும் உடனே கூகுள் டாக்ஸ் செயல்படுத்தப்பட்டு நாம் தேடும் கோப்பு காட்டப்படும்.
 
ஏன் இதனைப் பயன்படுத்த வேண்டும்? என நமக்குள் கேள்வி எழலாம். மேலோட்டமாகப் பார்க்கையில் சில காரணங்களுக்காக இதனைப் பயன்படுத்தலாம் என்று தெரியவரும். அவை:
 
1. இலவசம்: கூகுள் டாக்ஸ் முற்றிலும் இலவசம். எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு போல பணம் செலுத்தி வாங்க வேண்டியதில்லை. கூகுள் டாக்ஸ் அடிப்படையில் ஒரு வெப் பிரவுசர் போலச் செயல்படுகிறது. இதனை உங்கள் கணணியில் நிறுவ வேண்டிய அவசியமில்லை. அனைத்து எடிட்டிங் வேலைகளையும் மேற்கொள்ளலாம்.
 
2. இணைய வெளியில் இயக்கம்: Google Docs இணையத்தில் கிடைக்கும் ஒரு புரோகிராம். கிளவுட் கம்ப்யூட்டிங் வகையில் இயங்குகிறது. இதனால் இன்டர்நெட் இணைப்பு கிடைக்கும் எந்த இடத்திலும் உங்கள் கோப்புகளை ஏற்கனவே அதனை உருவாக்கி இருந்தாலும் எளிதாகப் பெற்று எடிட் செய்திடலாம். உங்களுக்கு வேண்டியதெல்லாம் ஒரு கூகுள் கணக்கு மட்டும் தான்.
 
பெர்சனல் கணணி வழியாக மட்டுமின்றி கைபேசி, நெட்புக், டேப்ளட் பிசி என எதன் வழியாகவும் இதனை இயக்கலாம். இதனைப் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் 1024 எம்.பி இடம், இணைய வெளியில் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தக் கிடைக்கிறது.
 
3. பகிர்ந்து கொள்ளல்: கணணி பயன்படுத்தும் அனைவரும் சமுதாய இணையதளங்கள் தரும் வசதியை முழுமையாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
 
ஏனென்றால் இதன் மூலம் நாம் நம் தகவல்களை, கோப்புகளை, உருவாக்கங்களை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் கூகுள் டாக்ஸ் கிளவுட் கம்ப்யூட்டிங் முறையில் இயங்குவதால் இதுவும் சாத்தியமாகிறது. நீங்கள் உருவாக்கும் கோப்புகளை Public or Private என வகை பிரித்து வைத்துக் கொள்ளலாம்.
 
4. பயன்படுத்த எளிது: மைக்ரோசாப்ட் ஒவ்வொரு முறை தன்னுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் Ms Office புரோகிராம்களைப் புதியதாகக் கொண்டு வருகையில் புதிய தொழில் நுட்ப வசதிகளைத் தருகிறது. இவற்றைப் பயன்படுத்திப் பழக நமக்குச் சில நாட்களாகின்றன.
 
அதுவரை பழைய முறையே நன்றாக இருந்தது என்று சலிப்பாகக் கூறுகிறோம். கூகுள் டாக்ஸ் அவ்வாறு இல்லாமல் பழக எளிமையாக உள்ளது. மைக்ரோசாப்ட் தொகுப்பிலிருந்து கூகுள் டாக்ஸ் மாறுவோருக்கும் எளிதாக உள்ளது.
 
5. இணைவமைவு: எந்த ஓபரேட்டிங் சிஸ்டத்தில் ஒரு கோப்பை உருவாக்கினாலும், எந்த போர்மட்டில் அதனை அமைத்திருந்தாலும், கூகுள் டாக்ஸ் மூலம் அதனைப் பயன்படுத்தலாம். அதற்கேற்ற முறையில் இயக்கும் திறனை கூகுள் டாக்ஸ் பெற்றுள்ளது.

1 comments:

stalin wesley said...

நல்ல தகவல் பிரதர்

பிளாக்கர் விட்ஜெட் - ஐ பேக் அப் எடுத்து வையுங்கள்

Post a Comment