அறிமுகம் ஆகப்போகும் 250CC ஸ்போர்ட்ஸ் பைக்

ரூ.2 லட்சம் முதல் ரூ.2.5 லட்சத்தில் புதிய 250சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை அறிமுகம் செய்ய கார்வேர் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சூப்பர் பைக் தயாரிப்பில் புகழ்பெற்ற கொரியாவை சேர்ந்த கார்வேர் மோட்டார்ஸ் நிறுவனம், புனேவை சேர்ந்த எஸ்டி மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்தது.

ஹயோசங் பிராண்டில் 650சிசி திறன் கொண்ட ஜிடி650ஆர் சூப்பர் பைக்கையும், 700சிசி திறன் கொண்ட எஸ்டி-7 என்ற குரூஸர் பைக்கையும் இந்தியாவில் தற்போது கார்வேர் விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், பைக் விற்பனையை அதிகரிக்கும் வகையிலும், சர்வீஸ் நெட்வொர்க்கை வலுப்படுத்தும் விதத்திலும் புதிய டீலர்களை கார்வேர் நிறுவனம் திறந்து வருகிறது.

இந்த நிலையில், 250சிசி திறன் கொண்ட புதிய ஸ்போர்ட்ஸ் பைக்கை கார்வேர் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கார்வேர் நிறுவனம் தற்போது ரூ.4.75 லட்சம் முதல் ரூ.4.90 லட்சம் வரையில் ஜிடிஆர்650ஆர் சூப்பர் பைக்கையும், ரூ.5.69 லட்சம் விலையில் எஸ்டி-7 குரூஸர் பைக்கையும் விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், ரூ.2 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் விலையில் புதிய ஸ்போர்ட்ஸ் பைக்கை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கார்வேர் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
Korean Super bike maker Garware motors planning to launch new 250cc sports bike in India. The company currently sales the hyosung gt650r and st7 cruiser bikes in India. The new sports bike will come Rs.2 lakh price tag in India.

0 comments:

Post a Comment