ஆம்னி டபிள்யூ, வேவ் 3 மற்றும் கேலக்ஸி வை என்ற புதிய மொபைல்களை களமிறக்கியுள்ளது சாம்சங் நிறுவனம்.
இந்த சாம்சங் ஆம்னி மொபைல் டபிள்யூ விண்டேஸ் 7.5 மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் இயங்குகிறது. 115.3 கிராம் இலகு எடை கொண்டது. பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆம்னி மொபைலில் 512 எம்பி ரேம் வசதியும், 8ஜிபி இன்டர்னல் மெமரியும் வழங்கப்பட்டுள்ளது. அதோடு 3.7 இஞ்ச் டபிள்யூ விஜிஏ சூப்பர் அமோல்டு திரை கொண்டுள்ளது. ஆக்ஸிலரோமீட்டர், மேக்னட்டோமீட்டர், கிரையோஸ்கோப், பிராக்ஸிமிட்டி, ஆம்பியன்ட் லைட் போன்ற வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் 5 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் ஒரு விஜிஏ கேமரா என இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் துல்லியத்திற்கு குறையே இல்லை.
அதோடு புளூடூத் வி 2.1, யூஎஸ்பி 2.0 போர்ட், வைபை போன்ற வசதிகளும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஜிபிஆர்எஸ், எட்ஜ் கேப்பபிலிட்டி போன்ற வசதிகளையும் இதன் மூலம் பெற முடியும். இத்தகைய வசதி கொண்ட இந்த மொபைல் ரூ.19,990 விலை கொண்டது.
சாம்சங்நிறுவனத்தின் இன்னொரு படைப்பான வேவ்-3 ஸ்மார்ட் மொபைலில் 1.4 எம்எச்இசட் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இது 4ஜிபி இன்டர்னல் மெமரி வசதி கொண்டது. இந்த மெமரி வசதியை 32ஜிபி வரை வேண்டுமாலும் விரிவுபடுத்திக் கொள்ளலாம்.
சாம்சங்வேவ்-3 மொபைலிலும் 5 மெகா பிக்ஸல் கேமராவும் மற்றும் விஜிஏ கேமராவும் கொடு்க்கப்பட்டுள்ளது. இதன் வைபை மூலம் நெட் வசதியினைப் பெற முடியும். புளூடூத் வசதி உள்ளதால் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். 1,500 எம்ஏஎச் எல்ஐ-அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த பேட்டரி நீடித்து உழைக்கும் தன்மை கொண்டது. 3.5 மிமீ ஆடியோ ஜேக் வசதி கொண்டது. 122 கிராம் எடை கொண்டது. இதனால் கையாள்வது மிகவும் எளிதான காரியம்.
இந்த வேவ்-3 மொபைல் 4 இஞ்ச் சூப்பர் அமோல்டு டபிள்யூவிஜிஏ திரை கொண்டது. ஆக்ஸிலரோமீட்டர், பிராக்ஸிமிட்டி, லைட் சென்ஸார், எட்ஜ், ஜிபிஆர்எஸ், எச்எஸ்பிஏ காம்ப்பேட்டிபிலிட்டி, ஏ-ஜிபிஎஸ் போன்ற உயர்ந்த தொழில் நுட்பங்கள் கொண்டது. இந்த சாம்சங்வேவ்-3 ஸ்மார்ட்மொபைல் ரூ.19,600 விலையில் கிடைக்கிறது.
சாம்சங்கேலக்லி வை என்ற ஸ்மார்மொபைலும் இதனுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மொபைல் ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரீட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் இயங்குகிறது. அதோடு கூடுதல் வசதி கொண்ட பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
கேலக்ஸி ஸ்மார்ட்போன் 3 இஞ்ச் டிஎப்டி டச் ஸ்கிரீன் வசதி கொண்டது. இதில் 2 மெகா பிக்ஸல் கேமரா வழங்கப்பட்டுள்ளது. புளூடூத், யூஎஸ்பி 2.0 மற்றும் வைபை வசதியையும் பெற்றுள்ளது. இதில் 32 ஜிபி, ஏ-ஜிபிஎஸ், எப்எம் ரேடியோ மற்றும் 3.5 மிமீ ஜேக் வசதி உள்ளது. கேலக்ஸி மொபைல் 1,200 எம்ஏஎச் பேட்டரி கொண்டது.
இந்த மொபைல் மற்ற இரண்டு மொபைல்களையும்விட குறைந்த விலையில் ரூ.7,830 இந்திய சந்தையில் கிடைக்கிறது. மூன்று ஸ்மார்ட்மொபைல்களை சேர்த்துக் வெளியிடுவது என்பது மிகவும் சிறப்பான விஷயம். அந்த வகையில் சாம்சங்நிறுவனம் மூன்று ஸ்மார்ட்மொபைல்களை வாடிக்கையாளர்களுக்கு கொடுத்திருக்கிறது.
0 comments:
Post a Comment