மறந்ததை நினைவுபடுத்தும் இணையதளம் !

செய்ய நினைத்ததை மறந்துவிடாமல் இருக்க உதவும் இணையசேவைகளின் வரிசையில் ரிமின்டர் தளத்தையும் சேர்த்து கொள்ள‌லாம்.பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வேண்டும் என்பதில் துவங்கி அடுத்த வாரம் தொலைபேசி கட்டணம் கட்ட வேண்டும் என்பது வரை செய்ய வேண்டியவை எதுவாக இருந்தாலும் இந்த தளத்தின் மூலம் நமக்கு நாமே நினைவூட்டி கொள்ளலாம்.
இந்த தள‌த்தை பயன்படுத்துவது சிக்கலே இல்லாமல் எளிமையானது. எதை எப்போது எந்த நேரத்தில் நினைவுப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டால் போதும். அதை அப்போது அந்த நேரத்தில் சரியாக நினைவுப்படுத்தி விடுகிறது.அதாவது எந்த விஷயத்தை நினைவூட்ட வேண்டும் என்ற விவர‌த்தை அதற்குறிய கட்டத்தில் தெரிவித்துவிட்டு அதற்கான நாள் மற்றும் நேரத்தை குறிப்பிட்டால் போதும்.
 
உதாரணத்திற்கு மனைவியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என்று தெரிவித்து அந்த தகவலை நினைவூட்டுவதற்கான நாளையும் நேரத்தையும் குறிப்பிடலாம். டிவிட்டர் மூலமோ அல்லது இமெயில் மூலமே நினைவூட்டல் செய்தியை பெறலாம்.
 
செல்போனில் கூட நினைவூட்டல் வசதி இருக்கிறது. அத்தனை எத்தனை பேர் பயன்படுத்துகிறோம் என்று தெரியவில்லை. ஆனால் பெரும்பாலும் இணையம் மற்றும் டிவிட்டர் போன்றவற்றை பலரும் பயன்படுத்துவதால் இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும்.
 


0 comments:

Post a Comment