Online Jobs

புகைப்படங்கள் மூலம் சம்பதிப்பதிப்பது எப்படி? How to Make Money Selling photos?

 கைப்படங்களை விற்று நாலு காசு பார்க்க வேண்டுமா?
கையில் டிஜிட்டல் கேமிராவை வைத்துக்கொண்டு சும்மா ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கிறீகளா? உங்கள் கையில் இருப்பது வெறும் கேமரா மட்டுமன்று, அது எளிதாக நாலு காசு பார்க்க உதவும் கருவி. இணையத்தில் உள்ள காசு பார்க்கும் வழிகளில் இதுவும் ஒரு எளிய வழி. இதோ, நீங்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கான பதில்கள்.


1. இந்த வேலையில் உங்கள் முதலீடு - சைபர் (இது நூற்றுக்குநூறு உண்மை!!)
2. குறைந்தப்பட்ச தகுதி - கேமிராவை போக்கஸ் செய்து படம் எடுக்கத்தெரிந்திருந்தால் போதுமானது. இதை ஒரு சின்னக் குழந்தை கூடச்செய்ய முடியுமே!
3. என்னத்தை போட்டோ எடுப்பது?
சாதாரனமாக நாம் அன்றாட வாழ்கையில் பார்க்கும் பறவைகள் இடங்கள் இயற்கைக் காட்சிகள் மலர்கள் நிகழ்வுகள் மற்றும் நாம் பயன்படுத்தும் பொருட்கள் என பலபலவற்றை போட்டோ எடுக்கலாம். எது மாதிரியான படங்கள் விற்பனைக்கு உள்ளது என்பதற்கு, எடுத்துக்காட்டு படங்கள் சில.
4. எவ்வளவு சம்பாதிக்கலாம்? அது நீங்கள் எத்தனை போட்டோக்கள் எடுக்குகிறீர்கள் என்பதை பொறுத்தது. நிறைய போட்டோ எடுத்தா நிறைய காசு! ஒவ்வொரு போட்டோவிற்கும் ஒவ்வொரு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
5. “யார் நான் எடுத்த போட்டோக்களை வாங்குவது?” என்று கேட்கிறீகளா? உங்கள் போட்டோக்களை வாங்குவதற்கு எத்தனையோ இணையதளங்கள் உள்ளன.
6. எப்படி போட்டோக்களை அனுப்பவது? மிகவும் சிம்பிள்! முதலில் இந்ந பிலாகின் கடைசியில் பகுதியில் வரும் இணையத்தில் சிறந்த போட்டோக்களை விற்கும், வாங்கும் இணையதளங்கள் தேர்தேடுக்கப்பட்டு தரப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்றில் உறுப்பினராக சேரவும். பின்பு நீங்கள் எடுத்த போட்டோக்களை உங்கள் கணிப்பொறியில் இருந்தே அவர்கள் இணையதளத்திற்கு அப்லோட்(Upload) செய்து கொள்ளலாம்.

Make Money Online

7. நீங்கள் எடுத்த போட்டோக்களை ஏன் அவர்கள் வாங்க வேண்டும்?இணையத்தில் எத்தனையோ இணையதளங்கள் பிறரிடம் இருந்து போட்டோக்களை வாங்கி அவை விற்கின்றன.
8. மேலும் கிடைக்ககூடிய பயன்கள்: “பிறரிடம் நானே விற்பதற்கும் இது போன்ற இணையதளத்தில் இட்டு விற்பதற்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்குறது?” என நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது!
) “Stock Images” என்றழைக்கப்படும் புகைப்படங்களை விற்கும் இணையதளங்களில் ஆயிரக்கனக்கான போட்டோக்கள் வெவ்வேறு பிரிவுகளில் வரிசைப் படுத்தப்பட்டு விற்பனைக்கு இருக்கும். இந்ந தளங்களுக்கு போட்டோ வாங்க வரும் வாடிக்கையாளர்களும் அதிகமாக இருப்பார்கள். எனவே நீங்கள் எடுத்த போட்டோ பலரைச் சென்றடைய வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

) ஒருவர் உங்கள் போட்டோவை வாங்கியவுடன் அத்துடன் அந்ந போட்டோ தீர்ந்து விடாது. எடுத்துக்காட்டிற்கு நீங்கள் வற்பனைக்கு வெளிவிட்ட ஒரு போட்டோவை ஒருவர் வாங்கியவுடன்இ மீண்டும் அந்த போட்டோவை வேறோருவர் வாங்கலாம். எனவேஇ ஒவ்வொரு முறையும் உங்களது போட்டோ வாங்கப்படும் போதும் எங்களுக்கு கமிசன் தொகை கிடைக்கும். இது ரொம்ப நல்ல திட்டம் தானே?
) வாழ்கை முழுவதும் பணம் கிடைக்க வாய்பு: போட்டோ எடுப்பதோடு உங்கள் வேலை முடிந்நது! ஒவ்வொரு முறையும் உங்களது போட்டோ வாங்கப்படும் போதும் எங்களுக்கு பணம் கிடைக்கும்.
கடைப்பிடிக்க வேண்டிய சில விதிமுறைகள்:
இங்கே தரப்பட்டிற்கும் விதிமுறைகள் பொதுவாக பெரும்பாலான தளங்களில்எதிர்பார்க்கப்படுபவை. இது ஒவ்வொரு தளங்களுக்கும் வேறுப்படும்.
) நீங்கள் விற்க்கும் போட்டோக்கள் கண்டிப்பாக நீங்கள் எடுத்த அசல் போட்டோக்களாக இருக்க வேண்டும். மேலும் பெரும்பாலான தளங்களில் உள்ள விதிமுறைப்படி நீங்கள் எடுத்திருக்கும் போட்டோவில் இடம்பெற்றிருக்கும் மனிதர்களே அல்லது போட்டோவில் தெரியும் இடத்தின் சொந்தக்கரரோ போட்டோ எடுத்துக்கொள்ள சம்மதம் அளித்த விண்ணப்பத்தை (இதற்கான விண்ணப்ப படிவத்தை அவர்கள் தளத்தில் இருந்து பிரின்ட் எடுத்து கொள்ளலாம்) ஸ்கேன் செய்து, நீங்கள் எடுத்த போட்டோவுடன் அப்லோட் செய்தால் மட்டுமே உங்களது போட்டோ விற்பனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
) ஒரு தளத்தில் விற்பனைக்கு வெளியிட்ட போட்டோவை வேறு தளத்தில் விற்க்கூடாது.
) நீங்கள் எடுக்கும் போட்டோவின் அளவு குறைந்தது 2 எ.ம்பி யாக இருக்க வேண்டும். சாதரனமாக டிஜிட்டல் கேமராவில் எடுக்கும் படங்கள் இந்த அளவு இருக்க வேண்டும்.
இவையனைத்தும் அடிப்படை விதிமுறைகள். மேலும் விபரங்களுக்கு அந்தந்த தளங்களை பார்க்கவும்.கீழே தரப்பட்டிருக்கும் இணையத்தில் சிறந்த போட்டோக்களை விற்கும், வாங்கும் இணையதளங்கள் தேர்தேடுக்கப்பட்டு தரப்பட்டுள்ளது. அவற்றில் உறுப்பினராக சேரவும். பின்பு நீங்கள் எடுத்த போட்டோக்களை உங்கள் கணிப்பொறியில் இருந்தே அவர்கள் இணைதயளத்திற்கு அப்லோட்(upload) செய்து கொள்ளலாம்.
நல்ல போட்டோக்களை எடுங்கள் பணம் உங்களை தேடி வரும். வாழ்த்துக்கள்!

Fotlia - Click to Join