Showing posts with label sports news. Show all posts
Showing posts with label sports news. Show all posts

லண்டனில் தங்கப்பதகதிக்கு குறிவைக்கும் Saina Nehwal !

ஹைதராபாத்: சர்வதேச அளவில் பூப்பந்து (பேட்மிண்டன்) விளையாட்டில் பல சாதனைகளை நிகழ்த்தி வரும் சாய்னா நேவால், அடுத்தாண்டு நடக்க உள்ள லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

பூப்பந்து விளையாட்டில், இந்தியாவிற்கு தொடர்ந்து பெருமை சேர்த்து வருபவர் சாய்னா நேவால். சமீப காலமாக தரவரிசையில் முன்னேற்றம் கண்டு வரும் சாய்னா தற்போது 6 இடத்தில் உள்ளார். கடந்த 2008ம் ஆண்டு நடந்த பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் காலுறுதி வரை முன்னேறிய சாய்னா அங்கு தோல்வி அடைந்து, வெளியேறினார்.

இருப்பினும் ஓலிம்பி்க் போட்டியில் பூப்பந்து விளையாட்டில் காலிறுதி வரை முன்னேறிய முதல் வீராங்கனை என்ற பெயரை பெற்றார். ஹைதராபாத்தை சேர்ந்த சாய்னா, தனது 8 வயது முதல் பூப்பந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார். மேலும், சமீபத்தில் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார். இந்த பட்டத்தை வென்ற முதல் இந்தியரும் இவர் தான்.

இது குறித்து சாய்னா நேவால் கூறியதாவது,

நான் வயதில் சிறியவளாக இருந்தாலும், எப்போதும் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளவே விரும்புகிறேன். எனவே நான் காலிறுதியில் ஆடும் போது, அரையிறுதியை மனதில் வைத்து கொள்வேன். தற்போது அடுத்தாண்டு நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும் என்பதில் குறியாக உள்ளேன்.

நான் அந்த வெற்றிப் பாதையில் தான் இருப்பதாக நினைக்கிறேன். பல போட்டிகளில் நாட்டிற்காக விளையாடி வெற்றிகளை குவித்தாலும், இந்தோனேசிய சூப்பர் சீரிஸ் தொடரில் தங்கம் வென்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

எனது பயிற்சியாளர் கோபிசந்த் மற்றும் பெற்றோர் எனக்கு அளிக்கும் ஊக்கமும் பயிற்சியுமே எனது வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. டென்னிஸ் விளையாட்டிற்கு இணையான வரவேற்பு பூப்பந்து போட்டிற்கு இல்லாவிட்டாலும், வரும் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கமும், உலக பூப்பந்து பட்டியலில் முதலிடத்தை பெறுவதே எனது எதிர் லட்சியமாக கொண்டுள்ளேன்.

இவ்வாறு சாய்னா நேவால் கூறினார்.

English summary
Saina Nehwal said, Although I am young, I always had the feeling that I could reach the finals. So when I played the quarter-finals, I kept thinking of the semi-finals. it is my dream to win the London Olympics, I think I'm on the way.

இங்கிலாந்து இந்தியாவுக்கு வெச்ச ஆப்பு

ஸ்கோர் விபரம்
இங்கிலாந்து 1வது இன்னிங்ஸ்
474/8 ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது (பீட்டர்சென் 202*, ட்ரொட் 71, பிறவீன் 5-106)

2வது இன்னிங்ஸ் 269/6 ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது (மெட் பிரியர் 103*, பிரோட் 74*, இஷாந்த சர்மா 4-59)

இந்தியா
1வது இன்னிங்ஸ் 286/10 (ட்ராவிட் 103*, பிரோட் 4-37, ட்ரம்லட் 3-80)
2வது இன்னிங்ஸ் 261/10 (ரைனா 78, லக்ஸ்மன் 56, அன்டர்ஸன் 5-65, பிரோட் 3-57)
இந்தியா 196 ஓட்டங்களினால் தோல்வி.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4 போட்டிகளைக்கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி லண்டன் லோட்ஸ் மைதானத்தில் இடம்பெற்றது.

முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 8 விக்கட்டுக்ளை இழந்து 474 ஓட்டங்களைப்பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 286 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. பின்னர் 188 ஓட்டங்கள முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 269 ஓட்டங்களைப்பபெற்று தனது 2வது இன்னிங்சை இடைநிறுத்திக்கொண்டது.

458 ஓட்டங்கள என்ற வெற்றி இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆரம்பித்த இந்திய அணி ஆட்டத்தின் இறுதி நாளான இன்று 261 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து 196 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக ரெய்னா(78), லட்சுமணன்(56), டிராவிட்(36), காம்பீர்(22), டோனி(16) ஓட்டங்களை பேற்றுக்கொண்டனர். இங்கிலாந்து அணி சார்பில் அண்டர்சன் 5 விக்கெட்டுக்களையும் பிரோட் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்தின் கெவின் பீட்டசென் தெரிவானார்