Showing posts with label TamilCinema News. Show all posts
Showing posts with label TamilCinema News. Show all posts

மதம் மாறினார் நயன்தாரா!

Nayanthara
பிரபுதேவாவைத் திருமணம் செய்வதற்காக கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறினார் நடிகை நயன்தாரா.

15 ஆண்டுகளுக்கு முன் ரம்லத் என்ற முஸ்லிம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து, 3 குழந்தைகள் பிறந்து, அதில் மூத்த குழந்தை இறந்த நிலையில் விவாகரத்து செய்தார் பிரபு தேவா.

முஸ்லிமாக இருந்த ரம்லத், பிரபுதேவாவுக்காக மதம் மாறி லதா என்று புதுப்பெயர் சூடிக் கொண்டார். ஆனால் நயன்தாரா மீதான காதல் காரணமாக ரம்லத்தை உதறினார் பிரபுதேவா.

சமீபத்தில் தான் ரம்லத் - பிரபுதேவா விவாகரத்தை அறிவித்தது குடும்ப நல நீதிமன்றம். இப்போது பிரபுதேவா அடுத்த கல்யாணத்துக்கு தயாராகிறார். நயன்தாரா தான் இவருக்கு மனைவியாகப் போகிறார். ஆனால் நயன்தாரா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். பிரபுதேவாவுக்காக நயன்தாரா மதம் மாறுவாரா அல்லது நயனுக்காக பிரபுதேவா மதம் மாறுவாரா என்ற கேள்வி எழுந்தது.

இப்போது தனக்காக மனைவியை விவாகரத்து செய்த பிரபுதேவாவுக்காக, மதம் மாறிவிட்டார் நயன்தாரா. நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர் முறைப்படி இந்து மதத்துக்கு மாறினார். நேற்று கொச்சியிலிருந்து சென்னை வந்த நயன்தாரா, ஆரிய சமாஜத்தில் வேத விற்பன்னர்கள் முன்னிலையில் ”சுத்த பரிகாரம்” செய்தார். பி்ன்னர் வேத மந்திரங்களை உச்சரித்தபடி, இந்துவாக மாறினார்.

இந்து மதத்துக்கு மாறுவதை பெருமையாகவும் சந்தோஷமாகவும் உணர்வதாக நயன்தாரா பின்னர் தெரிவித்தார். இந்த மத மாற்றத்துக்கு யார் வற்புறுத்தலும் காரணமல்ல என்றும் இது எனது தனிப்பட்ட விருப்பம், உரிமை என்றும் அவர் தெரிவித்தார்.

நயன்தாராவின் நிஜப் பெயர் டயானா மரியம் குரியன். சினிமாவுக்காக வைக்கப்பட்ட இந்த நயன்தாரா என்ற பெயரையே இனி தன் நிரந்தரப் பெயராக பயன்படுத்தப் போகிறாராம்பிரபுதேவாவைத் திருமணம் செய்வதற்காக கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறினார் நடிகை நயன்தாரா.

15 ஆண்டுகளுக்கு முன் ரம்லத் என்ற முஸ்லிம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து, 3 குழந்தைகள் பிறந்து, அதில் மூத்த குழந்தை இறந்த நிலையில் விவாகரத்து செய்தார் பிரபு தேவா.

முஸ்லிமாக இருந்த ரம்லத், பிரபுதேவாவுக்காக மதம் மாறி லதா என்று புதுப்பெயர் சூடிக் கொண்டார். ஆனால் நயன்தாரா மீதான காதல் காரணமாக ரம்லத்தை உதறினார் பிரபுதேவா.

சமீபத்தில் தான் ரம்லத் - பிரபுதேவா விவாகரத்தை அறிவித்தது குடும்ப நல நீதிமன்றம். இப்போது பிரபுதேவா அடுத்த கல்யாணத்துக்கு தயாராகிறார். நயன்தாரா தான் இவருக்கு மனைவியாகப் போகிறார். ஆனால் நயன்தாரா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். பிரபுதேவாவுக்காக நயன்தாரா மதம் மாறுவாரா அல்லது நயனுக்காக பிரபுதேவா மதம் மாறுவாரா என்ற கேள்வி எழுந்தது.

இப்போது தனக்காக மனைவியை விவாகரத்து செய்த பிரபுதேவாவுக்காக, மதம் மாறிவிட்டார் நயன்தாரா. நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர் முறைப்படி இந்து மதத்துக்கு மாறினார். நேற்று கொச்சியிலிருந்து சென்னை வந்த நயன்தாரா, ஆரிய சமாஜத்தில் வேத விற்பன்னர்கள் முன்னிலையில் ”சுத்த பரிகாரம்” செய்தார். பி்ன்னர் வேத மந்திரங்களை உச்சரித்தபடி, இந்துவாக மாறினார்.

இந்து மதத்துக்கு மாறுவதை பெருமையாகவும் சந்தோஷமாகவும் உணர்வதாக நயன்தாரா பின்னர் தெரிவித்தார். இந்த மத மாற்றத்துக்கு யார் வற்புறுத்தலும் காரணமல்ல என்றும் இது எனது தனிப்பட்ட விருப்பம், உரிமை என்றும் அவர் தெரிவித்தார்.

நயன்தாராவின் நிஜப் பெயர் டயானா மரியம் குரியன். சினிமாவுக்காக வைக்கப்பட்ட இந்த நயன்தாரா என்ற பெயரையே இனி தன் நிரந்தரப் பெயராக பயன்படுத்தப் போகிறாராம்.

மீண்டும் பிரபுதேவா வலையில் - சமீரா ரெட்டி!

டான்ஸ் டைரக்டர் பிரபுதேவாவின் பிரபாகரன் படபிடிப்பு கொல்கத்தாவில் நடந்து வருகிறதாம். இதற்காக நடிகை சமீரா ரெட்டி கொல்கத்தா சென்றுள்ளாராம். இதை அவரே தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பிரபுதேவா இயக்கத்தில் விஷால், சமீரா ரெட்டி நடிக்கும் படம் பிரபாகரன். தெலுங்கில் சூப்பர்ஹிட்டான சவுரியம் படத்தின் ரீமேக் தான் பிரபாகரன்.

இந்த படத்தின் ஒரு பாடல் காட்சி கொல்கத்தாவில் படமாக்கப்பட்டு வருகிறது. இது குறித்து படத்தின் நாயகி சமீரா ரெட்டி டுவிட்டரில் கூறியுள்ளதாவது,

கொல்கத்தாவில் உள்ள ஹவுரா பாலத்தில் பாடல் படபிடிப்பு. அருமையான தட்ப வெட்பம். இயக்குனர் பிரபுதேவாவின் படத்திற்காக டான்ஸ் ஆடுகிறேன் என்றார்.

நல்லா ஆடுங்க!



அஜீத்தின் மங்காத்தா படத்திற்கு சிக்கல்!

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் அஜீத்தின் 50வது படமான "மங்காத்தா" படத்தை வாங்குவதற்கு விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் தயங்கி வருகின்றனர். இதனால் மங்காத்தா படத்திற்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. க்ளவுடு நைன் மூவிஸ் சார்பில், துரை தயாநிதி அழகிரி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், அஜீத், அர்ஜூன், த்ரிஷா, லட்சுமி ராய், அஞ்சலி, வைபவ், பிரேம்ஜி அமரன் என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் படம் "மங்காத்தா". இதுவரை அஜீத்தை பார்த்திராத வித்யாசமான கேரக்டருடனும், வித்யாசமான கதைகளத்துடன் உருவாகி இருக்கும் இப்படம், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் அஜீத்திற்கு இது 50வது படமும் கூட. இதனால் அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகமும், எதிர்பார்ப்பும் இருக்கிறது.

ஆகஸ்ட் மாதம் மங்காத்தா படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், மங்காத்தா படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் ‌எல்லாம் முடிந்து ரிலீஸ் செய்வதற்கான வேலை நடந்து வருகிறது. ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நல்ல விலைக்கு இப்படம் விற்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் இப்படத்தை வாங்க இன்னும் யாரும் முன்வரவில்லை. இதற்கு காரணம், இப்படத்தினை தயாரித்து இருக்கும் துரை தயாநிதியின் தயாரி்ப்பு தான். இவர் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் ஆவார்.

விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் என அனைவருக்குமே நம்பிக்கை தரும் வகையில் இப்படம் அமைந்திருந்தாலும், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உள்ள நிலையில், தயாநிதி அழகிரி பேனரில் படத்தை வாங்குவதற்கும், அதனை ரிலீஸ் செய்வதற்கும் விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் தயங்கி வருவதாக கூறப்படுகிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மங்காத்தா படக்குழு முழித்து கொண்டு இருக்கிறது.

இதுஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் அஜீத்தே தனது சொந்தப் பொறுப்பில் இந்தபடத்தை வெளியிட வேண்டும் என்றும், ஒரு முறை முதல்வர் ஜெயலலிதாவை போய் பார்த்து விட்டு வர‌ வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அஜீத்தோ, நான் அப்படி போய் பார்த்தால் அது சுயநலத்துக்காக செய்த மாதிரி ஆகிவிடும். படத்தை தைரியமாக வெளியிடுங்கள், ஒன்றும் ஆகாது என்று கூறி வருகிறாராம்.

என்னிடம் என்ன இருக்கு? ரசிகர்களுக்கு த்ரிஷா கேள்வி!!

என்னிடம் என்ன இருக்கிறது என்று என்னைப்பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் விரும்புகிறார்கள்? என நடிகை த்ரிஷா, ரசிகர்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். கிசுகிசுவுக்கும், த்ரிஷாவுக்கும் ரொம்பவே நெருக்கம் அதிகம். வாரத்திற்கு ஒரு கிசுகிசுவாவது அம்மணியைப் பற்றி வந்துவிடும். அந்த வகையில் புதிதாக வந்திருக்கும் செய்தி, அம்மணிக்கும், அமெரிக்க தொழிலதிபர் ஒருவருக்கும் திருமணம் நடக்கவிருப்பதாகவும், மாப்பிள்ளையை த்ரிஷாவின் தாயார் உமா தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதுதான். இதனை மறுத்துள்ள த்ரிஷா, வதந்திகளை பரப்புபவர்களையும், ரசிகர்களையும் வசை பாடியிருக்கிறார்.

அவர் அளித்துள்ள பேட்டியில், என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். எந்த ரகசியமும் இல்லை. ஆனாலும் என்னைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன. கற்பனையான செய்திகளை பரப்புகிறார்கள். எனக்கு அமெரிக்க மாப்பிள்ளையை பார்க்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. ஒரு நடிகருடன் திருமணம் நடக்கப் போவதாகவும் வதந்திகள் பரவி உள்ளது. இப்படி என் திருமணத்தை பற்றி விதவிதமான செய்திகள் வந்தபடி உள்ளன. ரசிகர்களுக்கு இதனால் என்ன பயன் என்று எனக்கு புரியவில்லை. நடிகைகளின் சொந்த வாழ்க்கைப்பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் விரும்புவதாகவும் அதனால்தான் இதுபோன்ற செய்திகள் வருவதாகவும் கூறுகின்றனர்.

என்னிடம் என்ன இருக்கிறதென்று ரசிகர்கள் என்னைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள் என தெரியவில்லை. இதைத் தெரிந்து கொண்டு அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்? நான் ரகசிய திருமணம் செய்ய மாட்டேன். எந்த விஷயத்தையும் பகிரங்கமாக அறிவித்து விட்டுதான் செய்வேன். ரசிகர்கள் மற்றும் பெரியவர்களின் ஆசியுடன்தான் எனது திருமணம் நடைபெறும், என்று கூறியுள்ளார்.

சினிமாவிலிருந்து நான் விலக மாட்டேன் - நயன்தாரா


ராம ராஜ்யம் படப்பிடிப்பின் இறுதிநாளில் நான் உணர்ச்சிவசப்பட்டு அழுதது
உண்மைதான். ஆனால் சினிமாவிலிருந்து விலகப்போவதற்காக நான் அழுததாக
அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம், என நயன்தாரா கூறியுள்ளார்.
நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது.
திருமணத்துக்கு பின் நயன்தாரா நடிக்க மாட்டார் என செய்தி பரவி உள்ளது.
தெலுங்கில் நயன்தாரா கடைசியாக நடித்த ராம ராஜ்ஜியம் படத்தின் படப்பிடிப்பு
சில தினங்களுக்கு முன் முடிந்தது. படப்பிடிப்பின் கடைசி நாளில் அவர் கதறி
அழுததும், படக்குழுவினர் அனைவரிடமும் பிரியா விடை பெற்றதும் கடந்த வாரச்
செய்திகள்.
இது அழுகையும் பிரியா விடையும் சினிமாவுக்கும் சேர்த்துதான் என்று கூறப்பட்டது.
அப்போது செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்காமல் இருந்த நயன்தாரா, இப்போது சினிமாவை
நான்விலகமாட்டேன், என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,நான் சினிமாவை விட்டு விலகப்போவதாக வந்த
செய்தியில் உண்மையில்லை. ராம ராஜ்ஜியம் படப்பிடிப்பில் அழுததற்கான காரணமே
வேறு. என்னையும் மீறி என் மன வேதனை கண்ணீராய் வெளிப்பட்டுவிட்டது.
இன்னொரு பக்கம் ராம ராஜ்ஜியம் படப்பிடிப்பு குழுவினர் பாட்டு பாடி என்மேல் பூக்களை தூவி வழியனுப்பினார்கள். என் அழுகைக்கு அதுவும் ஒரு காரணம்.கடந்த ஆண்டு நான்நடித்த எல்லா படங்களும் சூப்பர் ஹிட். நான் எதற்கு விலகப் போகிறேன், என்றார்.
எதுக்கும் பார்த்து பேட்டி கொடுங்க அடுத்த செய்தி பிரபுதேவாவிடமிருந்து நயன் விலகல் என்று வரக்கூடும்!