Showing posts with label World news. Show all posts
Showing posts with label World news. Show all posts

என்ன பெரிய உதடு ! ( படங்கள் இணைப்பு )

உலகின் சாதனை பட்டியலில் பலவிதமானவை உள்வாங்கப்பட்டு வருகின்றது அந்த வகையில் உலகின் மிகவும் பெரிதான உதட்டினை உடைய பெண்ணினை அடையாளம் கண்டுள்ளனர்.

ரஷ்யாவை சேர்ந்த 22 வயதான Kristina Rei உலகில் பெரிய அளவிலான உதட்டினை கொண்ட பெண்யாவர்.

சிலிக்கன் ஊசிகளை செலுத்தியே இவ்வாறு உதட்டினை பெரிதாக்கியுள்ளார். 

இதுவரை 100 ஊசிகளை பாவித்துள்ள இவர், இதற்காக சுமார் 4000 ஸ்ரேலிங் பவுண்டுகளை செலவழித்துள்ளார் இப் பெண்மணி
இது குறித்து Kristina Rei கருத்து தெரிவிக்கையில்,

உலகில் பெரிய உதட்டினை கொண்டிருப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். அசிங்கமாக இருப்பதையிட்டு கவலைப்படவில்லை. 

எனக்கு பிடித்தமான கார்டூன் பாத்திரதின் பின்னணியிலேயே உதட்டினை பெரிதாக விரும்புகின்றேன் என்றார்.

உங்கள் ஜிமெயில் கணக்கை பாதுகாக்க !

மின்னஞ்சல் பயன்பாட்டில் ஜிமெயில் கணக்கு முதல் இடத்தில் உள்ளது. மின்னஞ்சல் வசதியை அடிக்கடி பயன்படுத்தாதவர்களும், எதற்கும் இருக்கட்டுமே என்று ஒரு ஜிமெயில் கணக்கை வைத்திருப்பார்கள்.ஜிமெயில் தளத்தில் இப்போது புதியதொரு வசதி கிடைக்கிறது. இது “Last account activity” என அழைக்கப்படுகிறது. இந்த வசதியை இயக்கிவிட்டால் உங்கள் ஜிமெயில் தளத்தை கடைசியாக யாரெல்லாம் அணுகிப் பார்த்தார்கள் என்ற பட்டியல் காட்டப்படுகிறது.
கணணி பிரவுசர் வழியாகவோ, பி.ஓ.பி மெயில் கிளையண்ட் வழியாகவோ அல்லது கைபேசி மூலமோ எந்த வகையில் உங்கள் ஜிமெயில் பார்க்கப்பட்டிருந்தாலும் அதனை இந்த வசதி பட்டியலிடுகிறது. எந்த ஐ.பி முகவரியிலிருந்து இது பார்க்கப்பட்டது என்று காட்டுகிறது.
 
வழக்கத்திற்கு மாறாக ஏதேனும் ஒரு ஐ.பி முகவரியிலிருந்து உங்கள் ஜிமெயில் தளம் திறக்கப்பட்டிருந்தால் அதனைக் காட்டி எச்சரிக்கை செய்கிறது. எந்த நாள், நேரம் என்பவையும் பட்டியலில் கிடைக்கின்றன.இதனைக் காண உங்கள் ஜிமெயில் தளத்தின் கீழாக, Last account activity என்ற வரிக்கு அருகே Details என்பதில் கிளிக் செய்திடவும். உடன் தகவல்கள் அடங்கிய பட்டியல் கிடைக்கும்.
 
இந்த பட்டியலில் Access type என்பதில், என்ன மாதிரியான வகையில்(பிரவுசர், மொபைல் போன், பி.ஓ.பி. கிளையண்ட் போன்றவை) உங்கள் தளம் அணுகப்பட்டது என்று காட்டப்படுகிறது.இந்த பட்டியலில் நீங்கள் பயன்படுத்தாத வகை எதுவும் காணப்பட்டால், உடனே உங்கள் அக்கவுண்ட் தகவல்களை(பயனர் பெயர், கடவுச்சொல்) யாரோ திருடி இருக்கிறார்கள் என நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
 
எடுத்துக்காட்டாக நீங்கள் கைபேசி வழி இணையத்தைப் பார்க்கும் வழக்கம் இல்லாதவராக இருந்து, பட்டியலில் கைத்தொலைபேசி வழி பார்க்கப்பட்டது காட்டப்பட்டால், உங்கள் கணக்கு திருடு போயுள்ளது என அறியலாம்.அடுத்ததாக Location(IP address) என்ற தலைப்பின் கீழ், உங்கள் ஜிமெயில் கணக்கை அணுகிய பத்து ஐ.பி முகவரிகள் தரப்படுகின்றன. இதில் சந்தேகப்படும்படியான ஐ.பி முகவரிகள் எச்சரிக்கப்பட்டு காட்டப்படுகின்றன. இவ்வாறு ஏதேனும் காட்டப்பட்டால் உடனடியாக உங்கள் ஜிமெயில் கணக்கின் கடவுச்சொல்லினை மாற்றுவது நல்லது.
 
உங்களுடைய ஐ.பி முகவரியும் பட்டியலில் இருக்கும். இது உங்களுடையதுதானா? என்று எப்படி அறியலாம். இணைய இணைப்பு பெறுபவர்களுக்கு ஒவ்வொரு முறையும் ஒரு ஐ.பி முகவரி தரப்படுகிறதே என்ற சந்தேகம் உங்களுக்கு வரும். நீங்கள் பயன்படுத்தும் இணைய இணைப்பின் ஐ.பி. முகவரியின் முதல் இரு எண்கள் எப்போதும் மாறாமல் இருக்கும்.எடுத்துக்காட்டாக 172.16.xx.xx என்ற எண்ணில் இங்கு காட்டப்பட்டுள்ள முதல் இரு எண்களும், நீங்கள் ஒரே இணைய இணைப்பைப் பயன்படுத்தினால் எப்போதும் மாறாமலே இருக்கும்.
 
அதே போல கைபேசி வழியே ஜிமெயில் காண்பவர்களுக்கு, கைபேசி வழங்கும் நிறுவனத்தின் முதல் எண்கள் மாறாமல் இருக்கும். இவற்றிலிருந்து உங்களுடைய ஐ.பி. முகவரியினை அடையாளம் தெரிந்து கொள்ளலாம்.ஒரே நேரத்தில் இருவேறு கணணிகளில் இரு வேறு இணைய இணைப்பு மூலம் ஜிமெயில் கணக்கினை அணுகினால் அவை Concurrent sessions என்பதன் கீழ் தரப்படும்.
 
தகவல்களைத் திருடியவர்களும் இதே போல பட்டியல் பெற்று உஷார் ஆகலாமே? என்று நாம் எண்ணலாம். ஜிமெயில் தளம் மிகக் கவனமாக இதனைக் கையாள்கிறது. வழக்கத்திற்கு மாறான ஐ.பி. முகவரிகளில் இருந்து கணக்கு பார்க்கப்பட்டதாக இருந்தால் அந்த முகவரிகளுக்கு இந்த எச்சரிக்கைப் பட்டியல் காட்டப்படாது.
 
உங்களுடைய கணக்கு தகவல்கள் திருடப்பட்டுவிட்டன என்று உறுதியாக அறிந்தால் கடவுச்சொல்லை மாற்றுவதுடன் கூகுள் http://www.google.com/security/ என்ற முகவரியில் தரப்படும் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றவும்.

Steve jobs இன் வரலாறு மற்றும் சாதனைகள்!

உலகத்தலைவர்கள் பலர் இவரது மறைவிற்கு தங்களது அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக ஒபாமா " அமெரிக்காவின் சிறந்த கண்டுபிடிப்பாளர்களில் இவரும் ஒருவர் எனவும், வித்தியாசமாக யோசிக்கத் தைரியமுள்ளவர் எனவும், தன்னால் உலகை மாற்றமுடியும் என்பதை நம்புபவர் எனவும் அதை செய்து காட்டும் திறமையும் கொண்டவர் என தனது அஞ்சலி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் பல பிரபலங்கள் தங்களது அனுதாபத்தினை வெளியிட்டுள்ள இத்தருணத்தில் அவரின் வாழ்க்கைப்பயணங்களை மீட்டிப் பார்ப்பது சாலப்பொருந்துவதாக அமையும்.


ஸ்டீவ் ஜொப்ஸின் வாழ்நாள் மற்றும் அப்பிள் நிறுவன வரலாற்றில் சில முக்கிய தருணங்கள்


1955: ஸ்டீவன் போல் ஜொப்ஸ் பெப்ரவரி 24 ஆம் திகதி பிறந்தார்.


1972: ஜொப்ஸ் போர்ட்லேண்டில் உள்ள ரீட் கல்லூரியில் இணைந்தார் எனினும் முதல் செமஸ்டரிலேயே அதனை நிறுத்திவிட்டார்.


1976: அப்பிள் கணனியை ஏப்ரல் முதலாம் திகதி உருவாக்கினார். த அப்பிள் I கணனி 666.66 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனைக்கு வருகின்றது.


1977: அப்பிள் நிறுவனம் கூட்டு நிறுவனமாக்கப்படுகின்றது. த அப்பிள் II கணனி அறிமுகப்படுத்தப்படுகின்றது.


1978: ஸ்டீவ் ஜொப்ஸின் மகள் லிஸா பிறந்தார்.


1980: அப்பிள் நிறுவனம் முதல் முறையாக தனது பங்குகளை வெளியிட்டது (Initial public offering). 110 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டிக் கொண்டது.


1982: அப்பிள் நிறுவனத்தின் வருடாந்த வருவாய் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களாய் அதிகரிக்கின்றது.


1983: அப்பிளின் லிசா கணனிகள் விற்பனைக்கு வருகின்றன.


1984: அப்பிளின் மெகிண்டொஸ் கணனிகள் விற்பனைக்கு வருகின்றன.


1985: நிறுவனத்தின் அப்போதைய பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கூலி மற்றும் ஜொப்ஸ் இடையே மோதல், ஜொப்ஸ் மற்றும் வொஸ்னிஹக் ஆகியோர் அப்பிளில் இருந்து பதவி விலகுகின்றனர்.


1986: ஜொப்ஸ் நெக்ஸ்ட் என்ற நிறுவனத்தை ஆரம்பித்ததுடன், உயர் தொழிநுட்பம் கொண்ட கணனிகளை பல்கலைக்கழகங்களுக்கென தயாரிக்கத்தொடங்குகின்றார்.


1989: முதலாவது நெக்ஸ்ட் கணனி விற்பனைக்கு செல்கின்றது. விலை 6,500 அமெரிக்க டொலர்கள்.


1991: அப்பிள் மற்றும் ஐ.பி.எம் நிறுவனங்கள் இணைந்து கணனிகளுக்கான புதிய மைக்ரோபுரசசர்கள் மற்றும் மென்பொருட்களை உருவாக்கவுள்ளதாக அறிவித்தன.


பவர்புக் என்றழைக்கப்படும் காவிச்செல்லக்கூடிய மெக்ஸ் கணனிகளை அறிமுகப்படுத்துகின்றது.


ஜொப்ஸ் லொரன் பவல் என்பவரை சட்டப்படி மணக்கின்றார்.


1996: ஸ்டீவ் ஜொப்ஸ் மற்றும் அவரது குழு இணைந்து உருவாக்கிய நெக்ஸ்ட் நிறுவனத்தின் இயங்குதளத்தினை 430 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்யும் திட்டத்தினை அப்பிள் அறிவிக்கின்றது.


1997: ஜொப்ஸ் அப்பிள் நிறுவனத்தின் இடைக்கால பிரதம நிறைவேற்று அதிகாரியாக பதவியேற்கின்றார்.


2000: ஜொப்ஸ் அப்பிள் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியாக பதவியேற்கின்றார்.


2001: முதல் ஐ பொட் விற்பனைக்கு வருகின்றது. ஐ டியூன்ஸ் மென்பொருளை வெளியிடுகின்றது.


2004: கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஜொப்ஸ் சத்திரசிகிச்சைக்கு முகங்கொடுக்கின்றார்.


2006: ஜொப்ஸ் டிஸ்னி நிறுவனத்தின் அதி கூடிய பங்குகளைக் கொண்ட தனிநபராகின்றார்.


2007: அப்பிள் தனது முதல் கையடக்கத் தொலைபேசியான ஐ போனை வெளியிடுகின்றது.


2009: ஜொப்ஸ் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைக்கு முகங்கொடுக்கின்றார்.


2011 ஜனவரி 17: ஜொப்ஸ் 2 ஆவது முறையாக மருத்துவ விடுமுறையில் செல்வதாக அறிவிக்கின்றார்.


2011 ஓகஸ்ட் 24: ஜொப்ஸ் தான் அப்பிளின் நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலகுவதாக அறிவிக்கின்றார்.


2011 ஒக்டோபர் 5: ஜொப்ஸ் காலமானதாக அறிவிக்கப்படுகின்றது.


இதேவேளை உலகம் பூராகவும் மக்கள் பலர் தங்கள் அஞ்சலிகளை செலுத்திய வண்ணமுள்ளனர். 

 

90 வயது மூதாட்டியை தீயில் இருந்து காப்பாற்றிய Titanic heroine Kate Winslet !

London : தீ பிடித்து எரிந்து கொண்டிருந்த வீட்டில் இருந்து 90 வயது மூதாட்டியை டைட்டானிக் கதாநாயகி கேட் வின்ஸ்லெட் காப்பாற்றினார்.

பிரபல ஹாலிவுட் நடிகை கேட் வின்ஸ்லெட்(35). இங்கிலாந்தைச் சேர்ந்தவர் கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சன்(61). அவருக்கு நெக்கர் தீவில் சொகுசு மாளிகை உள்ளது. அந்த மாளிகையில் விடுமுறையைக் கழிக்க கேட், அவரது காதலர் லூயி டவ்லர், 2 குழந்தைகள் உள்பட 20 பேர் தங்கினர்.

அந்த சொகுசு மாளிக்கைகு அருகில் உள்ள கட்டிடத்தில் பிரான்சன் தன் மனைவி மற்றும் மகன் சாமுடன் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு கேட் தங்கியிருந்த மாளிகையை மின்னல் தாக்கியதால திடீர் என்று தீ பிடித்தது. உடனே மாளிகையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.

அப்போது அங்கிருந்து பிரான்சனின் 90 வயது தாயை கேட் லாவகமாகத் தூக்கிக் கொண்டு வெளியே ஓடினார்.

இது குறித்து பிரான்சன் கூறுகையில்,

நான் கேட் வின்ஸ்லெட்டுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் தான் எனது தாயை மாளிகையில் இருந்து வெளியே கொண்டு வந்தார். என் தாய்க்கு 90 வயது ஆகிறது. அவரால் நடக்க முடியும். இருப்பினும் தீ வேகமாகப் பரவிக் கொண்டிருந்ததால் கேட் அவரை தூக்கிக் கொண்டு வந்துவிட்டார் என்றார்.

எரிந்து போன அந்த மாளிகையை பிரான்சன் தன் 28-வது வயதில் ரூ. 1 கோடியே 35 லட்சத்து 58 ஆயிரத்து 162-க்கு வாங்கினார். விரைவில் மாளிகையைப் புதுப்பிக்கவும் திட்டமிட்டுள்ளார். இந்த பிரான்சன் தான் வெர்ஜின் குரூப்பின் தலைவர் ஆவார்.





English summary
Titanic heroine Kate Winslet has become real life heroine by saving the 90-year old mother of the British business tycoon Richard Branson from fire. Kate and 20 others stayed in a bungalow of Branson in Necker island. Lightning struck the house and it caught fire at 4 am on august 22. While others ran for their life, Kate, who was there with her children, just carried the old woman in her arms.

2013 ஆம் ஆண்டுக்குள் உலகம் அழியும் ஆபத்து !

நாசா வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் 2010, மார்ச் 30 அன்று சூரியனிலிருந்து வெளிப்பட்ட பெரும் வெப்பத்தீற்றலை காட்டுகிறது.

சூரியன் தனது ஆழ்தூக்கத்திலிருந்து விழித்து வருவதாக குறிப்பிடும் ஆராய்ச்சியாளர்கள், வருகிற 2013 ஆம் ஆண்டுக்குள் உலகின் தொலைதொடர்பு மற்றும் மின்சக்தி கட்டமைப்புகளை ஸ்தம்பிக்கச் செய்யும் மிகப்பெரும் வான்வெளி புயல்கள் ஏற்படும் என்று எச்சரித்து உள்ளனர். 

 
சூரிய செயல்பாடுகளில் அதிக மற்றும் குறைந்த விசை கொண்ட ஒரு பதினொரு வருட சுழற்சி முறையில் இயங்கி வரும் நமது சூரியன் தற்போதுதான் அது ஒரு குறிப்பிடத்தகுந்த அமைதியான நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு நகர்வதாக கூறுகின்றனர்.  அதில் கத்ரீனா புயலை விட இருபது மடங்கு பொருளாதார நஷ்டத்தை உருவாக்க வல்ல 100 ஹைட்ரஜன் குண்டுகளின் விளைவை ஏற்படுத்தக்கூடிய ஆக்ரோஷமான பெரும் வெடிப்புகள் சூரியனில் ஏற்படும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

தீவிரமான ஒரு சூரிய (மின்காந்த) புயலில் பெரும் மின்சேமிப்பு காலங்கள், செயற்கைக்கோள் திசையறிதல், விமானப் பயணங்கள், பணப்பரிமாற்றங்கள் மற்றும் அவசர கால் ரேடியோ தொடர்புகள் கூட முழுவதுமாக பாதிக்கப்படும்.


2013ஆம்  ஆண்டு வாக்கில் சூரியனிலிருந்து வர இருக்கும் ஆக்ரோஷமான விசிறல்கள் மற்றும் அதன் பாதிப்புகளிளிருந்தும் பூமியை பாதுகாப்பது பற்றிய சாத்தியங்களை ஆராய வாஷிங்டனில்    சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் கூடி ஆலோசனை செய்தனர். இந்த விண்வெளி மாநாட்டில் விஞ்ஞானிகள், அரசுகளின் கொள்கை வடிவமைப்பாளர்கள் மற்றும் பல ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்.


இந்த நெருக்கடியை எதிர்கொள்ள நாசா பல்வேறு செயற்கை கோள்களை பயன்படுத்தி வருகிறது.


தேசிய அறிவியல் மையம் இரண்டு வருடங்களுக்கு முன்புதான் இத்தகைய பெரும் விண்வெளி நிகழ்வுகள் சமூக பொருளாதார நிலைகளின் மீது தாக்கம் ஏற்படுவதைப் பற்றிய பிரச்சனையை ஆய்வுக்கு கொண்டு வந்தது. ஆனால், இந்த சூரிய புயல் எப்போது நம்மை சமீபிக்கும்  என்று முன்பே அறிய முடிந்தால் பாதிப்புகளை பெருமளவு தவிர்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.


SAFE MODE இல் செயற்கை கோள்களை இருக்க வைப்பது, மின்கலங்களை தொடர்பிலிருந்து அகற்றி வைப்பது போன்றவற்றின் மூலம் மின்தாக்குதல்களை தவிர்க்கலாம் என்று இவர்கள் யோசனை கூறுகின்றனர்.


இவற்றில் மிக முக்கியமான தடுப்பு நடவடிக்கைகள் - அமெரிக்க தேசிய கடல் மற்றும் வான்வெளி கழகத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. இக்கழகம் நாசாவுடன் இணைந்து சேதத்தைத் தவிர்க்கும் முயற்சியில் ஈடுபடும்.

விண்வெளியில் ஹோட்டல் திறக்கும் ரஷ்யா!

மாஸ்கோ: விண்வெளியின் முதல் ஹோட்டலை அமைக்கப்போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. 

இந்த விண்வெளி ஹோட்டலுக்கு தி கமர்ஷியல் ஸ்பேஸ் ஸ்டேஷன் என்று பெயரிட்டுள்ளது ரஷ்யா. இந்த ஹோட்டல் வரும் 2016-ம் ஆண்டு திறக்கப்படும். பூமியில் இருந்து சுமார் 217 மைல் தொலைவில் மிதக்கும் இந்த ஹோட்டலில் 4 அறைகள் இருக்கும். அதில் 7 பேர் வரை தங்கலாம்.

விண்வெளி ஹோட்டலில் இருந்து பூமியைப் பார்க்கும் வகையில் அதில் வசதி செய்யப்படும். இந்த ஹோட்டலில் 5 நாட்கள் தங்க ரூ. 2 கோடியே 61 லட்சத்து 94 ஆயிரத்து 154 செலவாகும்.

இந்த விண்வெளி ஹோட்டலுக்கு சுற்றுலா செல்ல விரும்புபவர்கள் சோயூஸ் ராக்கெட் மூலம் அங்கு செல்ல வேண்டும். இந்த ஹோட்டல் சர்வதேச விண்வெளி மையத்தை விட வசதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் ருசியான, வகை வகையான உணவுப் பொருட்களை எதிர்பார்க்க முடியாது.

பூமியில் இருந்து கொண்டு செல்லப்படும் உணவை மைக்ரோவேவ் ஓவனில் வைத்து சூடு செய்து கொடுக்கப்படும். மது பானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் தவிர சர்வதேச விண்வெளி மையத்தில் பணி புரியும் விஞ்ஞானிகள் தங்கள் அவசரத் தேவைக்கு இந்த ஹோட்டலை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆர்பிடல் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனம் தான் இந்த ஹோட்டலை நிர்மானித்து வருகிறது.

இது குறித்து ஆர்பிடல் டெக்னாலஜீஸின் தலைவர் செர்கீ காஸ்டென்கோ கூறுகையில்,

விண்வெளி ஹோட்டலில் இருந்து பூமியைப் பார்க்கலாம். பணக்காரர்கள் மற்றும் விண்வெளியில் ஆய்வு செய்ய விரும்பும் தனியார் நிறுவன ஊழியர்களை மனதில் வைத்து தான் இந்த ஹோட்டல் அமைக்கப்படுகிறது என்றார்.


English summary
Russia has announced a hotel in space named the commercial space station. It will be opened in 2016 and a 5 day stay costs Rs. 26, 194, 154 only. Orbital Technologies is building this hotel which will be more comfortable than the international space station.

கார் விபத்தில் தெய்வாதீனமாக உயிர்தப்பிய Mr.Bean!

நகைச்சுவையின் மூலமாக உலகையே கட்டிப் போட்டவர் மிஸ்டர் பீன். இவரது இயற்பெயர் ரோவன் அட்கின்ஸன். 56 வயதான இவர் பி.பி.சி.யின் பிளாகேடர் என்னும் தொலைக்காட்சி தொடரில் மிஸ்டர் பீன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.

பிரிட்டனில் உள்ள பீட்டர்போரோ என்னுமிடத்துக்கு அருகேயுள்ள கேம்ப்ரிட்ஜ்ஷயர் என்னுமிடத்தில் இவர் பயணம் செய்த இவரது மாக்லொரேன் சூப்பர் கார் விபத்துக்குள்ளானது.

இதில் லேசான காயங்களுடன் பீன் தப்பித்தார். இவர் ஒரு கார் பிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.பி.சி.யின் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்வதற்காக அவர் சென்று கொண்டிருந்தபோது ஒரு விளக்குக் கம்பத்துக்கும், ஒரு மரத்துக்கும் நடுவில் கார் மோதி தீப்பிடித்தது.
தீப்பிடித்து நொறுங்கிப்போன காரின் இடிபாடுகளிலிருந்து எழுந்து பீன் உயிர் தப்பியமை இங்கே குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து அருகே பயங்கர நில நடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

நியூசிலாந்து நாட்டுக்கு அருகே உள்ள கெர்மடெக் தீவு பகுதியில் இன்று காலை 7 மணிக்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. அந்த தீவு அருகே கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 7.6 என்ற அளவுக்கு பதிவாகி இருந்தது.
 
நில நடுக்கம் காரணமாக கெர்மடெக் தீவு குலுங்கியது. நியூசிலாந்து, டோங்கா நாடுகளிலும் கடும் அதிர்வு ஏற்பட்டது. கட்டிடங்கள் ஆடின. இதையடுத்து மக்கள் அலறியடித்தப்படி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். பல இடங்களில் கட்டிடங்கள் நொறுங்கின. அதில் சிக்கி ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர். ஆனால் உயிரிழப்பு மற்றும் பொருள் சேதம் குறித்து முழுமையான தகவல்கள் வரவில்லை.
 
கடலுக்கு அடியில் 30 மைல் தொலைவுக்குள் நில நடுக்கம் மையம் கொண்டிருந்ததால், சுனாமி பேரலைகள் தாக்கக்கூடும் என்று தகவல் பரவியது. இதையடுத்து கடல் தண்ணீர் போக்கை அளவிட்ட பசிபிக் சுனாமி மைய ஆராய்ச்சியாளர்கள் சுனாமி பேரலைகள் தாக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்தனர். 500 மைல் தொலைவில் உள்ள நியூசிலாந்து, டோங்காவை சுமார் 2 மணி நேரத்துக்குள் சுனாமி தாக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டது.
 
இதைத் தொடர்ந்து கடலோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். ஆனால் 8 மணி அளவில் சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து நியூசிலாந்து, டோங்கா நாட்டு மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

தனது தாயாரின் வைர நகைகளை கேத் மிடில்டனுக்கு வழங்கிய வில்லியம்!!

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்-கேத் மிடில்டன் திருமணம் கடந்த ஏப்ரல் 29ந் திகதி கோலாகலமாக நடந்தது.

இதற்கு முன்னதாக திருமண நிச்சயதார்த்தத்தின் போது மறைந்த தனது தாயார் டயானாவின் மோதிரத்தை கேத்ரீனுக்கு வில்லியம் அணிவித்தார். அந்த மோதிரம் நீலக்கல் மற்றும் வைரம் பதிக்கப்பட்டது. இது உலக மக்களை மிகவும் கவர்ந்தது.

இந்த நிலையில் தற்போது மனைவி இளவரசி கேத்ரீனுக்கு தனது தாயார் டயானாவின் ஒரு ஜோடி வைர கம்மல்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இதுவும் வைரம் மற்றும் நீலக்கல் பதிக்கப்பட்டவை. 

இவை ஏற்கனவே அவர் வழங்கிய நிச்சயதார்த்த மோதிரத்துக்கு இணையாக உள்ளன. மோதிரம் மற்றும் கம்மல்கள் அனைத்தும் 18 காரட் வைரங்களால் ஆனவை. இவை இளவரசி டயானாவுக்கு மிகவும் பிடித்தமானவை. 

கடந்த 1980 முதல் 1990ம் ஆண்டுகளில் பல விதமான கம்மல்களை அவர் அணிந்து மகிழ்ந்தார். சமீபத்தில் கனடா மற்றும் அமெரிக்கா சென்ற போது இளவரசி கேத்ரீன் இந்த கம்மலை அணிந்து தான் சென்று இருந்தார். கடந்த 1983ம் ஆண்டு கனடா சென்ற டயானாவும் இதே கம்மலை தான் அணிந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Channel 4 நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை: கோத்தபாய கோரிக்கை

கொழும்பு, ஜூலை.29: பொறுப்பற்ற விடியோ காட்சிகளை ஒளிபரப்புவது தொடர்பில் பிரிட்டன் அரசு சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சக செயலாளர் கோத்தபாய ராஜபட்ச கோரிக்கை விடுத்துள்ளார்.கடந்த புதன்கிழமை சேனல் 4 தொலைக்காட்சி, இலங்கையில் போர்க்குற்றம் என்ற தலைப்பில் புதிய விடியோ ஒன்றை  ஒளிபரப்பியது.அதில், இறுதிப்போரின் போது சரணடைந்தவர்களை கொல்லுமாறு அப்போதைய வன்னி கட்டளையதிகாரியாக இருந்த சவேந்திர சில்வாவுக்கு கோத்தபாய உத்தரவிட்டதாக காட்சிகள் இருந்தன.

இதற்காக சவேந்திர சில்வாவுடன் பணியில் இருந்த இரண்டு ராணுவ வீரர்களின் பேட்டியை சேனல் 4 ஒளிபரப்பியது.இது முற்றிலும் பொய்யான விடியோ என்று குறிப்பிட்டுள்ள கோத்தபாய, இறுதிப்போரின் போது என்ன நடந்தது என்று சவேந்திர சில்வா அனைவருக்கும் கூறுவார். எதிர்காலத்தில் என்ன செய்யப்போகிறார் என்றும் அவர் தெரிவிப்பார் என்று குறிப்பிட்டார்.
இலங்கையில் அப்போது ஐக்கிய நாடுகளின் உறைவிடப் பிரதிநிதியாக இருந்த நீல் பூஹ்னே, யாரும் சரணடைவது குறித்து தமக்கு அறிவிக்கவில்லை.இந்தநிலையில் போரில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை எவ்வாறு கூறமுடியும் என்றும் கோத்தபாய கேள்வி எழுப்பினார்.

முல்லைத்தீவு அரசு அதிபரின் தகவல்படி 3 லட்சம் பொதுமக்கள் பதிவுசெய்யப்பட்டிருந்தனர்.போர் முடிந்த போது 294 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்திருந்தனர். தமிழீழ விடுதலைப்புலிகளில் பலர் போரின் போது கனடா மற்றும் இந்தியாவுக்கு தப்பிச்சென்றனர்.தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்படைத் தளபதியாகவிருந்த சூசை மற்றும் தமிழ்செல்வனின் குடும்பங்கள் கடல்வழியாகத் தப்பிச்செல்லும் போது கைதுசெய்யப்பட்டனர்.

சூசை பல கடற்படையினரின் கொலைகளுக்கு பொறுப்பு என்ற அடிப்படையில் தாம், அவர்களை கொன்றிருக்கலாம். ஆனால் அவர்களின் குடும்பத்தினரை இலங்கை அரசாங்கம் இன்றும் பாதுகாக்கிறது.பிரபாகரனின் பெற்றோரை இலங்கை அரசாங்கம் உரியமுறையில் பராமரித்தது.சரணடைந்த 11,000 தற்கொலையாளிகள் மற்றும் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டனர்.தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினரான பெண் ஒருவரை, 200,000 பொதுமக்கள் மத்தியில் இருந்து படையினர் காப்பாற்றியதை முந்தைய விடியோ காட்சிகள் நிரூபித்துள்ளதாகவும் கோத்தபாய தெரிவித்தார். 

Source by : Dinamani 

உயிரைப் பறித்த China Mobile

China Phone
குஜராத் மாநிலத்தில், பஞ்ச்மஹால் மாவட்டத்தில் வசித்த தஞ்சி தாமூர் என்ற பெயர் கொண்ட 25 வயது வாலிபர், சீன போன் ஒன்றினால் தன் உயிரை இழந்துள்ளார். மிகவும் மலிவான விலையில் கிடைக்கிறது என்பதற்காகத் தரம் குறைந்த சீனாவில் இருந்து இறக்குமதியான மொபைல் ஒன்றை சார்ஜ் செய்தவாறு பேசுகையில் இந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. அதிக வோல்டேஜ் அளவில் உடம்பில் மின்சாரம் பாய்ந்து உயிரைப் பறித்ததாக, இவரின் உடம்பினைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

போன்களை அடையாளம் காட்டும் தனி எண்கள் இல்லாத மொபைல் போன்களுக்கு இந்திய அரசு தடை விதித்த பின்னரும், மலிவான சீன போன்கள் இன்னும் இந்தியாவில் பல மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பல வசதிகளுடன், மிகக் குறைந்த விலையில் இவை கிடைப்பதால், இவற்றைப் பெரும்பாலான மக்கள், குறிப்பாக கிராமப் புற மக்கள், வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.
எந்த தர அடிப்படைக்கும் ஏற்றதாக இந்த போன்கள் இருப்பதில்லை. 
சீனாவில் ஆயிரக்கணக்கானோர் இது போன்ற போன்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஷான்ஷாய் போன்கள் எனப் பொதுவாக இவற்றை அழைக்கின்றனர். பிரபல நிறுவனங்களின் போன்கள் போல இந்த போன்கள் தயாரிக்கப்படுவதால், ஆங்கிலம் தெரியாத பலர் இதனால் ஏமாற்றப் படுகின்றனர்.
இந்த போன்களைத் தயாரிக்கும் போதே, சில கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்களும் பதிந்தே அனுப்பப் படுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்த போது, சீன அரசு இவற்றிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரிய வில்லை. சென்ற ஆண்டு இதே போல ஒரு பெண், சீன மொபைல் போனால் மின்சாரம் தாக்கி இறந்தது நினைவிருக்கலாம்.

9வது மாடியிலிருந்து தாயின் கையிலிருந்த குழந்தை தவறி விழுந்து பலி

பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பின் 9 வது மாடியில், தாயின் மடியிலிருந்து தவறி விழுந்த குழந்தை பலியானது.

பெங்களூருவில் ஜே.பி.நகர் பகுதியில் உள்ள ஆதர்ஷ் ரிதம் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு 9 வது மாடியில் வசிப்பவர் விஷால் காஷ்யப். மென்பொருள் பொறியாளர். இவரது மனைவி அம்ருதா. இவர்களது மகன் அர்மான் (ஒன்றரை வயது). 

நேற்று காலை அம்ருதா, குழந்தை அர்மானுக்கு உணவு ஊட்டுவதற்காக வராண்டா பகுதிக்கு வந்தார். பால்கனி வழியாக வேடிக்கை காட்டிய வண்ணம் உணவு ஊட்டிய போது, குழந்தை அர்மான் திடீரென குதித்தான். இதில் அம்ருதாவின் கையில் இருந்து தவறிய குழந்தை, 9 வது மாடியில் இருந்து, 8 வது மாடியில் உள்ள வராண்டா சுவரில் மோதியபடி தரையில் வந்து விழுந்து அந்த இடத்திலேயே இறந்தான். 
குழந்தையின் நிலையை கண்ட அம்ருதா மயங்கி விழுந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தையை மீட்ட அக்கம்பக்கத்தினர், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டொக்டர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து ஜே.பி.நகர் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.



உலக போராட்டங்களை அறிய ஒரு இணையதளம்.

உலகம் போராடிக்கொண்டே இருக்கிறது.அதாவது, உலகில் எங்காவது ஒரு மூளையில் ஏதாவது ஒரு காரணத்திற்காக ஏதாவது ஒரு போராட்டம் நடந்து கொண்டு தான் இருக்கிற‌து.
ஆனால் எல்லா போராட்டங்களுமே உலகின் கவனத்தை ஈர்ப்பத்தில்லை.சில இருட்டடிப்பு செய்யப்படுகின்ற‌ன.சில மறைக்கப்படுகின்றன.

பல அலட்சியப்படுத்தப்படுகின்றன.ஆனால் இவற்றை மீறி ஆர்ப்பாட்டம்,பேரணி,பொதுக்கூட்டம்,கிளர்ச்சி என மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து கொண்டு தான் இருக்கின்றன.
நாளிதழ்களும் ,செய்தி தளங்களும் இந்த போராட்டங்களை பதிவு செய்து கொண்டு தான் இருக்கின்றன.போர்க்குணம் கொண்டவர்கள் அதாவ்து போராட்டத்தில் ஆர்வம் உள்ளவர்களும்,போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்க விரும்புகிறவர்களும் போராட்ட செய்திகளை தேடிப்பிடித்து படித்தும் வருகின்றனர்.

ஆனால் போராட்ட செய்திகளை எல்லாம் ஒரே இடத்தில் காணவேண்டும் என நினைத்தால் அதற்கான வழி இது வரை இல்லை.போராட்ட செய்திகளுக்கு முக்கியத்துவம் தரும் தளங்களாக தேடிச்செல்ல வேண்டும்.சினிமா செய்தி,உலக செய்தி ,தொழில்நுட்ப செய்தி என அனைத்து வகையான் செய்திகளையும் ஒரே இடத்தில் தொகுத்து தர பல தளங்கள் இருக்கும் நிலையில் போராட்டங்களுக்கு ஒரு தளம் இல்லாதது பெருங்குறை தான்.

இந்த குறையை போக்கும் வகையில் உலக் போராட்டங்களை ஒரே இடத்தில் தரும் தளமாக வேர்ல்டு அட் புரடஸ்ட் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டங்கள்,பேரணிகள்,கிளர்ச்சிகள் ஆகியவற்றை அறிந்து கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுக்கும் இந்த தளம் உலகில் அதற்கேற்ப உலகில் எங்கெல்லாம் போராட்டம் நடக்கின்றன்னவோ அந்த போராட்ட செய்திகளை தொகுத்தளிக்கிற‌து.

போராட்ட செய்திகளை பலவிதமாக தெரிந்து கொள்ளலாம்.முகப்பு பக்கத்தின் மேலேயே சமீப்பத்திய போராட்ட செய்திகள் செய்தி வரிகளாக ஓடிக்கொண்டே இருக்கின்றன.அதன் கீழே உலக வரைபடம் போராட்ட வரைபடமாக விரிகிறது.வரைபடத்தில் எந்த இடத்தில் கிளிக் செய்தாலும் அந்த நாட்டில் நடைபெற்று கொண்டிருக்கும் போராட்டங்கள் தொடர்பான‌ செய்திகள் வருகின்ற‌ன.
வரைபடத்தில் சில நாடுகள் சிவப்பு வண்ணத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.அதன் பொருள் அந்த நாடுகளில் நடக்கும் போராட்டங்கள் தொடர்பான செய்திகள் அதிக அளவில் உள்ள என்பதாகும்.ஒருவிதத்தில் போராட்டத்தின் தீவிரத்தையும் இவை உணர்த்தக்கூடும்.போராட்டம் தீவிரமாகும் போது செய்திகளும் அதிகமாக வெளியாக வாய்ப்புள்ளது தானே.


வரைபடத்தை சின்னதக்கியும் பெரிதாக்கியும் பார்க்கும் வசதியும் உள்ளது.அதே போல கீழே வந்தால் அங்குள்ல ஸ்லைடர் வசதியை கொண்டு பழைய போராட்டங்க‌ளை தேதிவாரியாக பார்க்கலாம்.


போராட்டத்தில் நாட்டம் கொண்டவர்களுக்கு இந்த தளம் பேரூதவியாக இருக்கும்.ஆய்வு நோக்கிலும் இந்த தளம் பயன்படும்.மனித உரிமை ஆர்வளர்கள் அரசுகள் பொய சொல்கின்ரனவா என்று கன்கானிக்கவும் இந்த தளத்தை பய‌ன்ப‌டுத்த‌லாம்.
இப்போதைக்கு போராட்டங்கள் பற்றி நாளிதழ்களிலும் செய்தி தளங்களிலும் வெளியாகும் செய்திகளே இங்கு தொகுத்தளிக்கப்படுகின்றன.இருட்டடிப்பு செய்யப்படும் போராட்டங்கள் பற்றி அறிய வாய்ப்பில்லை.

எனவே போராட்ட விவரங்களை இணையவாசிகள் சம‌ர்பிக்க வாய்ப்பளித்தால் மேலும் சிற‌ப்பாக இருக்கும்.அதே போல போராட்டங்கள் தொடர்பான் டிவிட்டர் மற்றும் பேஸ்புக் பதிவுகள் கூட தொகுத்தளிக்கப்படலாம்.
எகிப்திலும்,அரபு நாடுகளிலும் நடைபெற்ற மக்கள் கிள‌ர்ச்சி டிவிட்டரிலும் பேஸ்புக்கிலும் தானே உயிர் பெற்றன.

இதே போன்றதொரு போராட்டதளத்தினை இந்தியாவுக்காகவும் தமிழகத்துக்காகவும் ஊட உருவாக்கினால் நன்றாக இருக்கும்.

போராடங்களை அறிய இணைய‌ முகவரி http://worldatprotest.com/