Showing posts with label Website. Show all posts
Showing posts with label Website. Show all posts

மொழி கத்துக்கொடுக்கும் ஓர் அசத்தலான இணையதளம் !

புதிதாக ஒரு மொழியை கற்று கொள்ள முற்படுபவர்களுக்கு கைகொடுக்கும் இணையதளங்களின் வரிசையில் பாலிஸ்பீக்ஸ் இணையதளமும் சேர்ந்திருக்கிறது. 
ஆனால் பாலிஸ்பீகஸ் மொழி பாடம் எல்லாம் நடத்துவதில்லை. அதற்கு பதிலாக கற்று கொள்ள விரும்பும் மொழியில் பயிற்சி பெற உதவுகிற‌து. அதாவது எந்த மொழியை கற்க விரும்புகின்றனறோ அதே மொழியை பேசுபவருடன் இணைய உரையாடலில் ஈடுபட வழி செய்கிற‌து.
புதிதாக மொழியை கற்க முற்படும் போது அந்த மொழியை தாய்மொழியாக கொண்டவரோடு பேசிப்பார்ப்பதை விட சிறந்த வழி வேறு இருக்க முடியாது. இத்தகைய சிறந்த வழியை தான் பாலிஸ்பீக்ஸ் தளம் உண்டாக்கி தந்துள்ளது.
 
இந்த தளத்தில் உறுப்பினரானவுடன் எந்த மொழியில் பேச வேண்டும் என்று கேட்பது போல பல்வேறு மொழி பேசுபவர்களோடு தொடர்பு ஏற்படுத்தி தருகிற‌து. பயனாளிகள் தாங்கள் கற்க விரும்பும் மொழி பேசுபவரோடு இணையத்தில் உரையாட துவங்கி விடலாம்.
 
உதாரனத்திற்கு ஜப்பானிய மொழி கற்று கொள்பவர்கள் இந்த தளம் மூலம் ஜப்பானியரோடு அரட்டை அடித்து அந்த மொழியில் உள்ள பேச்சு நுணுக்கங்களை தெரிந்து கொள்ள‌‌ முற்படலாம். 
இதே போலவே வேற்று மொழி பேசுபவர்களோடு வீடியோ வழியே உரையாடும் வசதியை வெர்ப்லிங் தளம் தருகிறது.
 
ஆனால் பாலிஸ்பீக்ஸ் வீடியோ வசதி இல்லாமல் சாட் செய்வது போலவே இணைய உரையாடலில் ஈடுபட வைக்கிறது.புதிதாக ஒரு மொழியை கற்று கொள்ளும் நிலையில் பேசுவதை விட எழுத்து மூலம் உரையாடுவதே உகந்த‌தாக இருக்கும் என்று நினைத்து இந்த அரட்டை வசதியை தருவதாக பாலிஸ்பீகஸ் தளம் தெரிவிக்கிற‌து.
 
பேஸ்புக் கணக்கை கொண்டே இதில் உறுப்பினராகி வேற்று மொழி பேசுபவருடன் அரட்டையில் ஈடுபட்டு மொழியை வளர்த்து கொள்ளலாம்,நட்பையும் வளர்த்து கொள்ளலாம். ஒரு காலத்தில் சாட் என்று சொல்லப்படும் அரட்டை தளங்கள் இணையத்தில் கொடி கட்டி பறந்தன.அதன் பிறகு அரட்டை தளங்களின் செல்வாக்கு தேய்ந்து போய்விட்டன.
 
அதன் பிறகு சாட்ரவுலட் தளம் மீண்டும் அர‌ட்டை தளங்களுக்கு புதிய மவுசை தேடித்தந்தது. இந்த நிலையில் அரட்டையை மொழி கற்பது உள்ளிட்ட பயனுள்ள வழிகளில் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை பாலிஸ்பீக்ஸ் போன்ற தளங்கள் ஏற்படுத்தி தருகின்ற‌ன.
 

நண்பர்கள்ளுக்கு என்று ஓர் அசத்தலான இணையதளம் !

ஒரு கல்லூரியில் அல்லது ஒரே ஊரில் உள்ள நண்பர்கள் வெளியூரில் இருக்கும் போது அனைவரையும் ஓன்லைன் மூலம் ஒன்று சேர்ப்பதற்கு உதவி புரிகிறது Faster Plan என்ற தளம்.என்ன தான் திட்டமிட்டாலும் சில நேரங்களில் குறிப்பிட்ட தினத்தில் பல நண்பர்கள் ஒன்று சேர முடியாமல் அல்லது குறிப்பிட்ட நண்பர்களின் திருமணத்திற்கு கூட செல்ல முடியாமல் இருக்கிறது.

இப்படி இருக்கும் நண்பர்களின் கூட்டத்திற்கு திட்டமிடுதலைப் பற்றியும் திட்டங்களை எப்படி செயல் வடிவம் கொடுப்பது என்பதைப் பற்றியும் சொல்லி கொடுக்கிறது ஒரு தளம்.நண்பர்களை சந்திக்கலாம் அதுவும் வெகு விரைவில் சாத்தியமே இல்லை என்கிறீர்களா, சாத்தியம் இல்லாததை கூட திட்டமிட்டால் சாத்தியமாக்கலாம் என்கிறது இத்தளம்.
 
இத்தளத்திற்கு சென்று Start என்ற பொத்தானை சொடுக்கி நம் பெயரையும் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்து நாமும் நண்பர்களுடன் சேர திட்டமிட ஆரம்பிக்கலாம்.எப்படி என்றால் Find a Common Date என்பதை சொடுக்கி என்றைய தினத்தில் நம் நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்கின்றனர் என்று எளிதாக அறியலாம், நாமும் அன்றைய தினத்தில் மற்ற வேலைகள் இல்லாது பார்த்துக் கொள்ளலாம்.
 
Add participant என்பதை சொடுக்கி நம் நண்பர்களையும் இந்த Faster Plan-ல் சேர்த்துக் கொள்ளலாம். யார் எப்போது என்ன இத்தளத்தில் பகிர்ந்து கொண்டாலும் அனைத்து நண்பர்களுக்கும் தகவலை உடனுக்கூடன் கொண்டு சேர்க்கும்.
 

உங்கள் ஜிமெயில் கணக்கை பாதுகாக்க !

மின்னஞ்சல் பயன்பாட்டில் ஜிமெயில் கணக்கு முதல் இடத்தில் உள்ளது. மின்னஞ்சல் வசதியை அடிக்கடி பயன்படுத்தாதவர்களும், எதற்கும் இருக்கட்டுமே என்று ஒரு ஜிமெயில் கணக்கை வைத்திருப்பார்கள்.ஜிமெயில் தளத்தில் இப்போது புதியதொரு வசதி கிடைக்கிறது. இது “Last account activity” என அழைக்கப்படுகிறது. இந்த வசதியை இயக்கிவிட்டால் உங்கள் ஜிமெயில் தளத்தை கடைசியாக யாரெல்லாம் அணுகிப் பார்த்தார்கள் என்ற பட்டியல் காட்டப்படுகிறது.
கணணி பிரவுசர் வழியாகவோ, பி.ஓ.பி மெயில் கிளையண்ட் வழியாகவோ அல்லது கைபேசி மூலமோ எந்த வகையில் உங்கள் ஜிமெயில் பார்க்கப்பட்டிருந்தாலும் அதனை இந்த வசதி பட்டியலிடுகிறது. எந்த ஐ.பி முகவரியிலிருந்து இது பார்க்கப்பட்டது என்று காட்டுகிறது.
 
வழக்கத்திற்கு மாறாக ஏதேனும் ஒரு ஐ.பி முகவரியிலிருந்து உங்கள் ஜிமெயில் தளம் திறக்கப்பட்டிருந்தால் அதனைக் காட்டி எச்சரிக்கை செய்கிறது. எந்த நாள், நேரம் என்பவையும் பட்டியலில் கிடைக்கின்றன.இதனைக் காண உங்கள் ஜிமெயில் தளத்தின் கீழாக, Last account activity என்ற வரிக்கு அருகே Details என்பதில் கிளிக் செய்திடவும். உடன் தகவல்கள் அடங்கிய பட்டியல் கிடைக்கும்.
 
இந்த பட்டியலில் Access type என்பதில், என்ன மாதிரியான வகையில்(பிரவுசர், மொபைல் போன், பி.ஓ.பி. கிளையண்ட் போன்றவை) உங்கள் தளம் அணுகப்பட்டது என்று காட்டப்படுகிறது.இந்த பட்டியலில் நீங்கள் பயன்படுத்தாத வகை எதுவும் காணப்பட்டால், உடனே உங்கள் அக்கவுண்ட் தகவல்களை(பயனர் பெயர், கடவுச்சொல்) யாரோ திருடி இருக்கிறார்கள் என நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
 
எடுத்துக்காட்டாக நீங்கள் கைபேசி வழி இணையத்தைப் பார்க்கும் வழக்கம் இல்லாதவராக இருந்து, பட்டியலில் கைத்தொலைபேசி வழி பார்க்கப்பட்டது காட்டப்பட்டால், உங்கள் கணக்கு திருடு போயுள்ளது என அறியலாம்.அடுத்ததாக Location(IP address) என்ற தலைப்பின் கீழ், உங்கள் ஜிமெயில் கணக்கை அணுகிய பத்து ஐ.பி முகவரிகள் தரப்படுகின்றன. இதில் சந்தேகப்படும்படியான ஐ.பி முகவரிகள் எச்சரிக்கப்பட்டு காட்டப்படுகின்றன. இவ்வாறு ஏதேனும் காட்டப்பட்டால் உடனடியாக உங்கள் ஜிமெயில் கணக்கின் கடவுச்சொல்லினை மாற்றுவது நல்லது.
 
உங்களுடைய ஐ.பி முகவரியும் பட்டியலில் இருக்கும். இது உங்களுடையதுதானா? என்று எப்படி அறியலாம். இணைய இணைப்பு பெறுபவர்களுக்கு ஒவ்வொரு முறையும் ஒரு ஐ.பி முகவரி தரப்படுகிறதே என்ற சந்தேகம் உங்களுக்கு வரும். நீங்கள் பயன்படுத்தும் இணைய இணைப்பின் ஐ.பி. முகவரியின் முதல் இரு எண்கள் எப்போதும் மாறாமல் இருக்கும்.எடுத்துக்காட்டாக 172.16.xx.xx என்ற எண்ணில் இங்கு காட்டப்பட்டுள்ள முதல் இரு எண்களும், நீங்கள் ஒரே இணைய இணைப்பைப் பயன்படுத்தினால் எப்போதும் மாறாமலே இருக்கும்.
 
அதே போல கைபேசி வழியே ஜிமெயில் காண்பவர்களுக்கு, கைபேசி வழங்கும் நிறுவனத்தின் முதல் எண்கள் மாறாமல் இருக்கும். இவற்றிலிருந்து உங்களுடைய ஐ.பி. முகவரியினை அடையாளம் தெரிந்து கொள்ளலாம்.ஒரே நேரத்தில் இருவேறு கணணிகளில் இரு வேறு இணைய இணைப்பு மூலம் ஜிமெயில் கணக்கினை அணுகினால் அவை Concurrent sessions என்பதன் கீழ் தரப்படும்.
 
தகவல்களைத் திருடியவர்களும் இதே போல பட்டியல் பெற்று உஷார் ஆகலாமே? என்று நாம் எண்ணலாம். ஜிமெயில் தளம் மிகக் கவனமாக இதனைக் கையாள்கிறது. வழக்கத்திற்கு மாறான ஐ.பி. முகவரிகளில் இருந்து கணக்கு பார்க்கப்பட்டதாக இருந்தால் அந்த முகவரிகளுக்கு இந்த எச்சரிக்கைப் பட்டியல் காட்டப்படாது.
 
உங்களுடைய கணக்கு தகவல்கள் திருடப்பட்டுவிட்டன என்று உறுதியாக அறிந்தால் கடவுச்சொல்லை மாற்றுவதுடன் கூகுள் http://www.google.com/security/ என்ற முகவரியில் தரப்படும் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றவும்.

இலவசமாக ஆங்கிலம் கற்க ஓர் சிறந்த இணையத்தளம் !

ஆங்கிலம் கற்க கைகொடுக்கும் தளங்களில் கிளாஸ்பைட்ஸ் தளத்தை விஷேசமானது என சொல்லலாம்.
காரணம் மிகவும் எளிமையான அதே நேரத்தில் சுவாரஸ்யமான முறையில் பாடங்களை கற்று கொள்ள கிளாஸ்பைட்ஸ் வழி செய்வது தான்.
என்ன தான் ஆங்கிலம் கற்க வேண்டும்,ஆங்கிலத்தில் சரளமாக பேச வேண்டும்,ஆங்கிலத்தில் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் மணிக்கணக்கில் பாடங்களை கேட்கவே ,இலக்கணத்தை அறிந்து கொள்ளவோ பலருக்கும் பொறுமை இருக்காது.
முதல் பாடத்தை புரிந்து கொண்டு மனதில் பதிய வைப்பதற்குள் அடுத்த பாடம் ஆரம்பமாகிவிட்டால் மிரண்டு போய் விடுவார்கள்.ஆசிரியர் எளிதாக சொல்லி கொடுத்தாலும் கூட கவனிப்பதில் சிக்கல் ஏற்படலாம்.

ஆர்வம் இருந்தும் கூட பலர் இந்த தடைகளை தாண்டி ஆங்கில மொழியை கற்பதற்கு தேவையான உத்வேகத்தை பெற முடியாமல் போய்விடுகிறது.
இந்த பிரச்சனைக்கு தான் கிளாஸ்பைட்ஸ் குறும்பாடங்கள் மூலம் அழகாக தீர்வு காண்கிறது.விடியோ வடிவிலான குறும்பாடங்கள்.

கல்வி உலகில் இப்போது குறும்பாடங்களை தான் நிபுணர்கள் கற்பதற்கான எளிய வழியாக முன்வைக்கின்றனர்.குறும்பாடங்கள் என்றால் பாடங்களை சின்ன சின்னதாக பிரித்து ஒரே நேரத்தில் ஒரு அம்சத்தை மட்டும் கற்றுத்தருதல் என புரிந்து கொள்ளலாம்.அதிக நேரம் தேவைப்படாமல் குறிகிய கால அளவில் பயிற்றுவிப்பதை இந்த பாடங்கள் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளன.

குறுங்கல்வி (மைக்ரோ லேர்னிங்)என்று சொல்லப்படும் இந்த வகை பயிற்றுவிக்கும் முறை இணையம் வழி கல்வி கற்பிப்பதிலேயே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
கிளாஸ்பைட்ஸ் தளத்தில் காணகூடிய குறும்பாட வீடியோக்கள்ள எல்லாமே 2 நிமிடம் முதல் அதிக பட்சமாக 10 நிமிடம் வரை மட்டுமே ஓட்டக்கூடியவை .சராசரியாக பார்த்தால் 5 நிமிடங்கள் ஒடக்கூடியவை.எதையுமே வீடியோ கிளிப்பாக சிக நிமிடஙக்ள் பார்த்து ரசித்து பகிர்ந்து கொள்ளும் யூடியூப் தலைமுறைக்கு இந்த குறும் வீடியோக்கள் ஏற்றவை தான் இல்லையா?

மாணவர்கள் யூடியூப் வீடியாவை பார்த்து ரசிக்கும் உணர்விலேயே இந்த பாடங்களையும் பார்த்து மனதில் நிறுத்தி கொள்ளலாம்.
ஒவ்வொரு பாடத்திலும் ஏதாவது ஒரு அம்சத்தில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டிருக்கும்.வார்த்தை உச்சரிப்பு ,இலக்கண பயன்பாடு,கேள்வி கேட்கும் போது பயன்படுத்த வேண்டிய சொற்கள் என ஏதாவது ஒரு அம்சம் மட்டுமே ரத்தின சுருக்கமாக கற்றுத்தரப்படும்.

மாணவர்களுக்கு நிச்சயம் இந்த கிளிப்கள் சுமையாக இருக்காது.ஆனால் சுவையாக இருக்கும். அதோடு குறிப்பிட்ட நேரத்தில் தான் பாடம் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.எப்போது விருப்பமோ அப்போது படித்து கொள்ளலாம்.எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்து கொள்ளலாம்.ஒரு பாடம் முடிந்த பின் அடுத்த குறும்பாடத்துக்கு போகலாம்.

உறுப்பினராக சேரும் போதே மாணவர்கள் ஆங்கிலத்தில் சின்னதாக ஒரு தேர்வில் பங்கேற்க வேண்டும்.இது கூட மாணவர்களுக்கு எந்த நிலையிலான பாடஙக்ள் தேவை என்று பரிந்துறைப்பதற்காக தான்.அதன் பிறகு மாணவர்கள எந்த நிபந்தனையும் இல்லாமல் இஷ்டம் போல கற்கலாம்.
கிளாஸ்பைட்சின் சிறப்பு இத்தோடு முடிந்துவிடவில்லை.ஒரு விதத்தில் இது இணைய வகுப்பறை போல தான்.அதாவது இங்கு மாணவர்கள் நண்பர்களை தேடி கொள்ளலாம்.அவர்களோடு தொடர்பு கொண்டு பாடம் தொடர்பான குறிப்பு மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம்.

அந்த வகையில் இதனை கற்பதற்கான பேஸ்புக் என்றும் சொல்லலாம்.
உறுப்பினராக சேரும் போதே மாணவர்கள் தங்களை பற்றிய விவரங்களை சமர்பித்து தங்களுக்கான பக்கத்தை உருவாக்கி கொள்ளலாம்.பேஸ்புக்கில் உள்ளது போலவே இந்த பக்கத்திலும் சுவர் உண்டு.இதில் மாணவர்கள் தங்கள் மனதில் உள்ளவரை பகிர்ந்து கொள்ளலாம்.இதை பார்த்து சக மாணவர்கள் கருத்து தெரிவிக்கலாம்.இவர்களும் மற்ற மாணவர்களின் சுவரில் உள்ளவரை படித்து உறையாடலாம்.

பாடங்கள் தொடர்பான கருத்து பரிமாற்றம் என்பதால் படிப்பதிலும் ஒரு ஈடுபாடு ஏற்படும்.சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.கொஞ்சம் சோர்ந்து போனால் கூட மற்றவர்கள் ஊக்கபடுத்தலாம்.புதிய பாடங்களை சுட்டிக்காட்டலாம்.
பாடம் படிக்கும் உணர்வே இல்லாமல் ஏதோ இணைய நண்பர்களோடு உறையாடும் மகிழ்ச்சியான சூழலில் ஆங்கில அறிவை வளர்த்து கொள்ளலாம்.

கூரும்பாடங்களை படிக்க துவங்கிய பின் மானவர்கள் தங்கள் முன்னேற்றத்தை தெரிந்து கொள்லவும் சுவையான வழிகள் இருக்கின்றன்.உதாரணத்திற்கு ஆங்கிலத்தில் பேசி வீடியோவில் பதிவு செய்து அதனை இங்கு சமர்பித்தால் ஆசிரியர்களும் மாணவர்களும் அதை பார்த்து திருத்தங்களை சொல்வார்கள்.இலக்கண பிழை உச்சரிப்பு போன்ற்வற்றை இப்படி பட்டை தீட்டி கொள்ளலாம்.வாசிப்பு திறனை வளர்த்து கொள்ள வலைபதிவு பக்கங்களை படித்து கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.வலைப்பதிவு எழுதியும் சமர்பிக்கலாம்.தேர்வு எழுதியும் சோதித்து பார்க்கலாம்.

இதைவிட இனிய வழி ஆங்கிலம் கறக இருக முடியுமா என்ன
இந்த தளத்தில் இன்னுமொரு சிறப்பம்சம் நம்மவர்கள் இதில் அதிக பேர் உறுப்பினராக உள்ளனர்.

இணையதள முகவரி: http://classbites.com/

உங்களுக்கு வேலை வேண்டுமா இதோ ஓர் அசத்தலான இணையதளம்!

வேலை தேடுபவர்களுக்கு பயோ டேட்டாவின் முக்கியத்துவம் நன்றாகவே தெரியும்.நல்ல வேலை கிடைப்பது நல்ல பயோடேட்டாவை சார்ந்தே இருக்கிறது. பயோ டேட்டா பளிச் என்று பக்காவாக இருந்தால் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்பதும் வேலை தேடும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.
ஆனால் பலருக்கும் தெரியாத விஷயம் பக்காவான பயோடேட்டாவை தயாரிப்பது எப்படி என்பது தான்!
அதிலும் புதிதாக வேலை தேடுபவர்களுக்கு இந்த குழப்பம் அதிகமாகவே இருக்கும்.

நல்ல பயோடேட்டாவிக்கு என்று எழுதப்படாத விதிகள் எதுவும் இல்லாவிட்டாலும் பலவித குறிப்புகளும் ஆலோசனைகளும் கொட்டிக்கிடக்கின்றன.இவை மேலும் குழப்பலாம்.
பயோடேட்டா விரிவாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுவதை தவறாக புரிந்து கொண்டு பக்கம் பக்கமாக பயோடேட்டாவை தயார் செய்தால் அது எதிர்பார்த்த பலனை தர வாய்ப்பில்லை.அதே போல கூடுதல் அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதற்காக ,குணா பட கமல் பாட்டு போல கொஞ்சம் மானே தேனே போட்டு கொள்ளுங்கள் என்று எதையாவது சேர்த்து கொண்டால் பயோடேட்டா பயோடேட்டாவாக இருக்காது.

பயோடேட்டா நிறுவன அதிகாரியை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக அதில் அலங்காரங்க‌ளையும் பொய்யான தகவல்களையும் இடம்பெற வைக்க வேண்டியதில்லை.
நிற்க இந்த பதிவு நல்ல பயோடட்டாவை உருவாக்குவது எப்படி என்று வழிகாட்டுவடதற்கானது அல்ல;அதற்காக என்றே உருவாக்கப்பட்டுள்ள இணையதளமான ரெஸ்யும் பேக்கிங்கை அறிமுகம் செய்வதற்கானது.

பக்காவான ,செயல்திறன் மிக்க பயோடேட்டாவை உருவாக்கி கொள்ள உதவுவதாக கூறும் இந்த தளம் மிக அழகாக அதனை செய்தும் த‌ருகிற‌து.அதையும் சுலபமாக,உடனடியாக செய்து தருகிறது.

இந்த தள‌த்திற்கு வந்த பின் ஒரு ந‌ல்ல பயோடேட்டா எப்படி இருக்க வேண்டும் என்ற கவலையோ குழப்பமோ தேவையில்லை.அதை இந்த தளம் பார்த்து கொள்கிறது.
வேலை தேடுபவரின் நோக்கம் ,கல்வி தகுதி,பணி அனுபவம் போன்ற‌ விவரங்களை சமர்பித்தால் போதும் அதை கொண்டு அழகான பயோடேட்டா ரெடியாகி விடுகிற‌து.பயோடேட்டாக்களுக்கு என்று நாலைந்து வகையான பொதுவான டெம்ப்லேட்கள் இருக்கின்ற‌ன.அவற்றில் விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளலாம்.
அதற்கு முன்பாக பாயோடேட்டாக்களின் மாதிரியை பார்த்து கொள்ள்லாம்.துறைவாரியாக சம்பிக்கப்பட்ட பயோடேட்டாக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.எல்லாமே ஒரே பக்கம் மட்டுமே இருக்கின்றன.ஆனால் மூர்த்தி தான சிறியதே தவிர கீர்த்தி பெரிது தான்.அந்த ஒரு பக்கத்திலேயே வேலைக்கு விண்ணபிப்பவர் பற்றி தெரியவேண்டிய அனைத்து விவரங்களும் வந்து விடுகின்ற‌ன.

பயோடேட்டா என்பது வேலை தேடுபவரின் அறிமுக அட்டை என்றால் இந்த தளம் உருவாக்கி த‌ருபவை அதை கச்சிதமாக நிறைவேற்றுகின்றன.
ஆக பக்காவான பயோடேட்டாவை வெகு சுலபமாக இந்த தளத்தின் மூலம் உருவாக்கி கொண்டு விடலாம்.இது முதல் படி தான்.இந்த பக்காவான பயோடேட்டாவை அப்படியே அச்சிட்டு கொள்ளலாம்.பிடிஎப் கோப்பாக மாற்றிக்கொள்ள‌லாம்.இணையத்தின் மூலம் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் தள‌ங்கள் மூலம் பகிர்ந்து கொள்ள‌லாம்.‌

ப‌யோடேட்டாக்கள் நிறுவனங்களால் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளன போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ள‌லாம்.வேலை வாய்ப்புக்கான பயனுள்ள குறிப்புகளும் வழங்கப்படும்.பொருத்தமான வேலை வாய்ப்பு பற்றிய தகவலும் தெரிவிக்கும் வசதியும் இருக்கிற‌து.
 
வேலை தேடுபவர்களுக்கு கைகொடுக்க கூடிய தளம் என்ப‌தில் சந்தேகமில்லை.
இணையதள முகவரி: http://www.resumebaking.com/

மறந்ததை நினைவுபடுத்தும் இணையதளம் !

செய்ய நினைத்ததை மறந்துவிடாமல் இருக்க உதவும் இணையசேவைகளின் வரிசையில் ரிமின்டர் தளத்தையும் சேர்த்து கொள்ள‌லாம்.பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வேண்டும் என்பதில் துவங்கி அடுத்த வாரம் தொலைபேசி கட்டணம் கட்ட வேண்டும் என்பது வரை செய்ய வேண்டியவை எதுவாக இருந்தாலும் இந்த தளத்தின் மூலம் நமக்கு நாமே நினைவூட்டி கொள்ளலாம்.
இந்த தள‌த்தை பயன்படுத்துவது சிக்கலே இல்லாமல் எளிமையானது. எதை எப்போது எந்த நேரத்தில் நினைவுப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டால் போதும். அதை அப்போது அந்த நேரத்தில் சரியாக நினைவுப்படுத்தி விடுகிறது.அதாவது எந்த விஷயத்தை நினைவூட்ட வேண்டும் என்ற விவர‌த்தை அதற்குறிய கட்டத்தில் தெரிவித்துவிட்டு அதற்கான நாள் மற்றும் நேரத்தை குறிப்பிட்டால் போதும்.
 
உதாரணத்திற்கு மனைவியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என்று தெரிவித்து அந்த தகவலை நினைவூட்டுவதற்கான நாளையும் நேரத்தையும் குறிப்பிடலாம். டிவிட்டர் மூலமோ அல்லது இமெயில் மூலமே நினைவூட்டல் செய்தியை பெறலாம்.
 
செல்போனில் கூட நினைவூட்டல் வசதி இருக்கிறது. அத்தனை எத்தனை பேர் பயன்படுத்துகிறோம் என்று தெரியவில்லை. ஆனால் பெரும்பாலும் இணையம் மற்றும் டிவிட்டர் போன்றவற்றை பலரும் பயன்படுத்துவதால் இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும்.
 


உங்களை பிரதிபலிக்கும் ஓர் அசத்தலான இணையதளம்

எல்லோருக்குமே மற்றவர்கள் தங்களை பற்றி என்ன நினைக்கின்றனர் என்பதை அறிவதில் ஆர்வம் இருக்கும். சிலர் வெளிப்படையாகவே கேட்டு விடுவார்கள்.இன்னும் சிலர் மற்றவர்கள் நினைக்காததை எல்லாம் நினைப்பதாக நினைத்து கொண்டு கவலைப்பட்டு கொண்டிருப்பார்கள்.

மற்றவர்கள் நினைப்பது பற்றி அலட்டிக்கொள்ளாதவர்களும் இருக்கவே செய்கின்றனர். இவை ஒருபுறம் இருக்க, உங்களை பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியென்றால் அதற்காக என்றே ஒரு இணையதளம் இருக்கிறது.ஜட்ஜ்.மீ என்னும் அந்த தளம் சக இணையவாசிகள் உங்களை பற்றி என்ன நினைக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள வழி செய்கிறது.

மற்றவர்களின் எண்ணங்களை அறிய நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த தளத்தில் உங்கள் புகைப்படத்தை இடம்பெற செய்வது மட்டும் தான். அதன் பிறகு உறுப்பினர்கள் உங்களை பற்றிய அபிப்ராயத்தை தெரிவிப்பார்கள்.
பர்ஸ்ட் இம்ப்ரஷன் ஈஸ் தி பெஸ்ட் இம்ப்ரஷன் என்று ஆங்கிலத்தில் ஒரு சொல் வழக்கு உண்டல்லவா? அதே போலவே உங்களை பார்த்ததும் தோன்றக்கூடிய சித்திரத்தை இந்த தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
 
ஒவ்வொருவருக்கும் உங்களை பார்க்கும் போது எத்தகைய எண்ணம் ஏற்படுகிறது என்பதை அவர்கள் உங்கள் புகைப்படத்தை பார்த்ததும் தெரிவிக்கும் கருத்துக்கள் வழியே அறிந்து கொள்ளலாம்.எப்படியும் தினந்தோறும் நம்மை எத்தனையோ பேர் பார்க்கின்றனர். அவர்களுக்கு எல்லாம் நம்மைப்பற்றி ஒரு அபிப்ராயம் தோன்றும். அந்த அபிப்ராயங்களை தெரிந்து கொள்ள இந்த தளம் உதவுகிறது.

அபிப்ராயம் என்பதும் பக்கமாக கருத்துக்களோ அல்லது விமர்சனங்களோ கிடையாது. அபிப்ராயங்கள் அழகாக வரைபடத்தின் வாயிலாக உணர்த்தப்படுகின்றன.ஒவ்வொரு புகைப்படத்தின் அருகிலும் இந்த வரைபடம் தோன்றுகிறது. சகஜமாக பேசக்கூடியவர், கூச்ச சுபாவம் உள்ளவர், புத்திசாலியானவர், அழுத்தமானவர் என நான்கு காரணிகளின் அடிப்படையில் வரைப்படத்தில் ஒருவரை பற்றிய மதிப்பீடு காட்டப்படுகிறது.

புகைப்படத்தை பார்த்ததும் தோன்றக்கூடிய எண்ணங்களை இனையவாசிகள் வரைபடத்தின் மீது கிளிக் செய்து உணர்த்தலாம். இணையவாசிகளின் அபிப்ராயம் சேர வரைபடத்தில் அவற்றின் முடிவுகளையும் அழகாக காணலாம்.தேர்தல் போன்ற நேரங்களில் கட்சிகளின் செல்வாக்கு அலசி ஆராயப்பட்டு வரைபடத்தின் மீது காட்டப்படுவது போல நீங்களும் உங்களைப்பற்றிய அலசலை வரைபடமாக காணலாம்.

ஆர்வம் உள்ளவர்கள் இந்த தளத்தில் புகைப்படத்தை சமர்பித்து மற்றவர்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளலாம். அதே போல இந்த தளத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள மற்றவர்களின் புகைப்படங்களையும் பார்த்து தங்களுக்கு தோன்றும் முதல் எண்ணத்தை தெரிவிக்கலாம்.இந்த மதிப்பீட்டு தளத்தை பார்க்கும் போது மற்ற மதிப்பீட்டு தளங்களுக்கு எல்லாம முன்னோடியாக கருத்தப்படும் ‘ஹாட் ஆர் நாட்’ தளத்தின் நினைவு வரலாம்.

ஹாட் ஆர் நாட் தளம் ஒருவர் அழகாக இருக்கிறாரா இல்லையா என்பதை தெரிந்து கொள்வதற்காக அவர்களின் புகைப்படத்தை பார்த்து மற்றவர்கள் மதிப்பெண்கள் அளிப்பதை அடிப்படையாக கொண்டது. இந்த தளம் சுவாரஸ்யமானது என்றாலும் இதன் மீது பல்வேறு விமர்சனங்கள் உண்டு.
 
ஆனால் ஜட்ஜ்.மீ தளம் அவ்வாறு இல்லாமல் எவருக்குமே ஆர்வம் இருக்ககூடிய தங்களைப்பற்றிய மற்றவர்களின் முதல எண்ணங்களை அறிய உதவுகிறது. இதன் அடிப்படையில் ஒருவர் பொதுவாக தங்களைப்பற்றி அறிந்து கொண்டு தேவை என்றால் தங்களை மாற்றி கொள்ளவும் முற்படலாம்.