எச்டிசி அறிமுகப்படுத்தும் புதிய அசத்தலான மொபைல் போன் !

மொபைல் உலகின் நட்சத்திர நிறுவனமாக திகழ்ந்து கொண்டிருக்கும் எச்டிசி நிறுவனம் தற்போது ஹீரோ அம்சங்கள் பொருந்திய புதிய மொபைலை அறிமுகப்படுத்தி உள்ளது.

ஆம், இதற்காகவே இந்த மொபைலின் பெயரையும் ஹீரோ என்று வைத்துள்ளது எச்டிசி. எச்டிசி ஹீரோ எஸ் என்ற குறியீட்டு பெயரில் வந்துள்ள இந்த புதிய மொபைல் ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரீட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும்.

இந்த இயங்குதளம் எளிதாக இயங்குவதற்கு 1.2 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் துணை புரிகிறது. 4 இஞ்ச் திரை கொண்ட இந்த மொபைல் கியூஎச்டி எஸ்-எல்சிடி கெப்பாசிட்டிவ் டச் திரை தொழில் நுட்பத்தை கொண்டுள்ளது.

5 மெகா பிக்ஸல் கேமராவினையும், 1.3 பிக்ஸல் கொண்ட முகப்பு கேமராவினையும் கொண்டிருக்கிறது. இது 1280 X 720 பிக்ஸல் துல்லியத்தை கொடுக்கும். இந்த மொபைலில் 720பி வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் பெற முடியும்.

ஹீரோ எஸ் மொபைலில் 3.0 வெர்ஷன் புளூடூத் உள்ளது. அனைத்து வசதிகளை அள்ளித் தர இருக்கும் இந்த மொபைல் 130 கிராம் எடையை கொண்டு ஜொலிக்கிறது.

இந்த மொபைலில் உள்ள வைபை தொழில் நுட்பத்தின் மூலம் நெட் வசதியினை எளிதாக பெறலாம். இதில் 1,520 எம்ஏஎச் லத்தியம் அயான் பேட்டரி உள்ளதால் 7.25 மணி நேரம் டாக் டைமும் மற்றும் 456 மணிநேரம் ஸ்டான்-பை டைமும் கொடுக்கிறது.

இந்த ஹீரோ மொபைலின் விலை பட்டியல் விவரம் பற்றி தகவல்கள் கூறவில்லை.

2 comments:

தமிழ்கிழம் said...

எல்லாம் நல்லாத்தான் இருக்கு...

பிரீயா கொடுத்த தேவல....

gautham said...

5 varusham wait pannuga....

Post a Comment