லண்டனில் தங்கப்பதகதிக்கு குறிவைக்கும் Saina Nehwal !

ஹைதராபாத்: சர்வதேச அளவில் பூப்பந்து (பேட்மிண்டன்) விளையாட்டில் பல சாதனைகளை நிகழ்த்தி வரும் சாய்னா நேவால், அடுத்தாண்டு நடக்க உள்ள லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

பூப்பந்து விளையாட்டில், இந்தியாவிற்கு தொடர்ந்து பெருமை சேர்த்து வருபவர் சாய்னா நேவால். சமீப காலமாக தரவரிசையில் முன்னேற்றம் கண்டு வரும் சாய்னா தற்போது 6 இடத்தில் உள்ளார். கடந்த 2008ம் ஆண்டு நடந்த பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் காலுறுதி வரை முன்னேறிய சாய்னா அங்கு தோல்வி அடைந்து, வெளியேறினார்.

இருப்பினும் ஓலிம்பி்க் போட்டியில் பூப்பந்து விளையாட்டில் காலிறுதி வரை முன்னேறிய முதல் வீராங்கனை என்ற பெயரை பெற்றார். ஹைதராபாத்தை சேர்ந்த சாய்னா, தனது 8 வயது முதல் பூப்பந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார். மேலும், சமீபத்தில் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார். இந்த பட்டத்தை வென்ற முதல் இந்தியரும் இவர் தான்.

இது குறித்து சாய்னா நேவால் கூறியதாவது,

நான் வயதில் சிறியவளாக இருந்தாலும், எப்போதும் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளவே விரும்புகிறேன். எனவே நான் காலிறுதியில் ஆடும் போது, அரையிறுதியை மனதில் வைத்து கொள்வேன். தற்போது அடுத்தாண்டு நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும் என்பதில் குறியாக உள்ளேன்.

நான் அந்த வெற்றிப் பாதையில் தான் இருப்பதாக நினைக்கிறேன். பல போட்டிகளில் நாட்டிற்காக விளையாடி வெற்றிகளை குவித்தாலும், இந்தோனேசிய சூப்பர் சீரிஸ் தொடரில் தங்கம் வென்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

எனது பயிற்சியாளர் கோபிசந்த் மற்றும் பெற்றோர் எனக்கு அளிக்கும் ஊக்கமும் பயிற்சியுமே எனது வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. டென்னிஸ் விளையாட்டிற்கு இணையான வரவேற்பு பூப்பந்து போட்டிற்கு இல்லாவிட்டாலும், வரும் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கமும், உலக பூப்பந்து பட்டியலில் முதலிடத்தை பெறுவதே எனது எதிர் லட்சியமாக கொண்டுள்ளேன்.

இவ்வாறு சாய்னா நேவால் கூறினார்.

English summary
Saina Nehwal said, Although I am young, I always had the feeling that I could reach the finals. So when I played the quarter-finals, I kept thinking of the semi-finals. it is my dream to win the London Olympics, I think I'm on the way.

0 comments:

Post a Comment