தேடல் மூலம் பரிசுகள் வெல்லும் வாய்ப்பு !

இந்த இணைய தளத்தில் தேடுவதன் மூலம் பணப்பருசுகள் , கணனிகள் , மொபைல் போன்கள் போன்றவேர்ரை நீங்கள் வெல்ல முடியும் .

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது தான் இந்த தேடல் 

பொறியில் தேடுவதும் வரும் முடிவை கிளிக் செய்வதும் தான்,

இது ஒரு அரிய சந்தர்ப்பம் பயன்படுத்துங்கள் !

இனையதள முகவரி

இணையத்தில் இலவசமாக கோப்புக்களை சேமித்து வைக்கலாம்!

இணையத்தில் கோப்புகளை சேமிப்பதற்கு பல தளங்கள் உதவி புரிகின்றன. அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் தளத்தில் 5GB கொள்ளளவு உள்ள தகவல்களை இலவசமாக சேமித்து வைக்கலாம்.கணினியில் தகவல்களை சேமித்தால் சில நேரங்களில் ஏதாவது வைரஸ் தாக்குதலினால் தகவல்களை மீட்க முடியாமல் போகலாம், ஓன்லைன் மூலம் நம்மிடம் இருக்கும் ஒளிப்படங்கள் மற்றும் பல தகவல்களை இலவசமாக சேமித்து வைக்கலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.

இத்தளத்திற்கு சென்று Sign in என்பதை சொடுக்கி நாம் புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கி கொண்டு நம் தகவல்களை பதிவேற்றலாம், தனித்தனியாக கோப்பறை அமைத்து வகைப்படுத்தி பதிவேற்றலாம்.
 
ஓடியோ, வீடியோ, பிடிஎப் என அனைத்து வகையான கோப்புகளையும் சேமிக்கலாம். எந்த நாட்டிற்கு சென்றாலும் கையில் தகவல்களை எடுக்காமல் போனாலும் கவலை இல்லாமல் இத்தளத்திற்கு சென்று நம் பயனாளர் கணக்கை கொடுத்து எங்கிருந்து வேண்டுமானாலும் நம் தகவல்களை எடுக்கலாம்.
 
ஆண்டிராய்டு போனில் இருந்தும் பதிவேற்றலாம், பதிவிறக்கும் வசதியும், மேலும் பல கூடுதல் வசதிகளும் உள்ளது. 5GB வரை சேமிப்பதற்கு இடம் கொடுக்கும் இந்தத்தளம் தகவல்களை ஓன்லைனில் சேமிக்க உதவும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
 

என்ன பெரிய உதடு ! ( படங்கள் இணைப்பு )

உலகின் சாதனை பட்டியலில் பலவிதமானவை உள்வாங்கப்பட்டு வருகின்றது அந்த வகையில் உலகின் மிகவும் பெரிதான உதட்டினை உடைய பெண்ணினை அடையாளம் கண்டுள்ளனர்.

ரஷ்யாவை சேர்ந்த 22 வயதான Kristina Rei உலகில் பெரிய அளவிலான உதட்டினை கொண்ட பெண்யாவர்.

சிலிக்கன் ஊசிகளை செலுத்தியே இவ்வாறு உதட்டினை பெரிதாக்கியுள்ளார். 

இதுவரை 100 ஊசிகளை பாவித்துள்ள இவர், இதற்காக சுமார் 4000 ஸ்ரேலிங் பவுண்டுகளை செலவழித்துள்ளார் இப் பெண்மணி
இது குறித்து Kristina Rei கருத்து தெரிவிக்கையில்,

உலகில் பெரிய உதட்டினை கொண்டிருப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். அசிங்கமாக இருப்பதையிட்டு கவலைப்படவில்லை. 

எனக்கு பிடித்தமான கார்டூன் பாத்திரதின் பின்னணியிலேயே உதட்டினை பெரிதாக விரும்புகின்றேன் என்றார்.

பென்டிரைவ் ஐ இப்படியும் பயன்படுத்தலாம் !

நமது கணணிகளில் சில வேலை போதுமான அளவு RAM காணப்படாமல் இருக்கலாம். 

மேலதிகமாக RAM ஒன்றை பொறுத்துவதனால் அவற்றின் விலை மிக அதிகமானதாகவே இருக்கின்றன. 

அதேவேளைபென்டிரைவ்களின் விலை குறைவானதே.முதலில் Windows Xp யில் எவ்வாறு பென்டிரைவ் ஒன்றை RAM ஆக பயன்படுத்தி கணணியின் performanceயை அதிகரிக்கலாம்.

முதலில் பென்டிரைவ் ஒன்றை(குறைந்தது 1GB) USB port வழியாக பொறுத்துங்கள்.

 
1. பின் My Computer ல் Right Click செய்து Properties தெரிவு செய்யுங்கள்.
 
2. அதிலுள்ள Advanced பகுதியில் Performance இல் உள்ள Settings பொத்தானை அழுத்துங்கள்.
 
3. அதன் பின் தோன்றும் வின்டோவில் Advanced பகுதியில் Change பொத்தானை Click செய்து பென்டிரைவ்வை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
 
4. பின் Custom Size என்பதை Click செய்து பயன்படுத்த வேண்டிய அளவை டைப் செய்யுங்கள். (Initial மற்றும் Max எனும் இரு பிரிவிலும் ஒரே அளவை வழங்குங்கள்).
 
5. பின்னர் Set செய்து உங்கள் கணணியை Restart செய்யுங்கள் அல்லது ReadyBoost அல்லது eboostr மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பின் பென்டிரைவ்வை பொறுத்தி eboostr control pannel இல் பென்டிரைவ்வை add செய்து பயன்படுத்தலாம். (Restart செய்தல் கட்டாயமானதே)
 
6. Windows 7 யில்  பென்டிரைவ் ஒன்றை RAM ஆக பயன்படுத்தலாம். உங்கள் கணணி 256GB RAM கொண்டிருந்தால் 8 ReadyBoost Devices களை ஒவ்வொன்றும் 32GB கொள்ளவை உடை பென்டிரைவ்களாக பயன்படுத்தலாம். எனவே Windows 7 இல் மொத்தமாக 256GB RAM வரைக்கும் பயன்படுத்தலாம்.
 
உங்கள் பென்டிரைவ்வில் Right Click செய்து Properties தெரிவு செய்யுங்கள்.
 
அதில் ReadyBoost பகுதியில் Use This Device ஐ தெரிவு செய்யுங்கள்.
 
Space to reserve for system speed என்ற இடத்தில் கூட்டி விடவும்.
 
இப்போது Apply செய்து விடுங்கள், உங்கள் பென்டிரைவ்வின் Performance உயர்ந்துவிடும்.

இணையத்தில் வீடியோ கோப்புகளை இலவசமாக தரவிறக்கம் செய்ய !

வீடியோ கோப்புகளை பதிவிறக்கம் செய்ய எத்தனையோ மென்பொருள்கள் இணையத்தில் கிடைக்கின்றன.

1 எம்.பிக்கும் குறைவான இந்த மென்பொருளினை பதிவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும். 

இதில் மேல்புறம் உங்களுக்கு On-Off என சின்ன விண்டோ இருக்கும். அதை கிளிக் செய்தால் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் எங்கு பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்களோ அந்த தேவையான இடத்தை செட் செய்துகொள்ளலாம்.
 
நீங்கள் பதிவிறக்கம் செய்யும் கோப்பு எந்த வகையில் பதிவிறக்கம் ஆக வேண்டுமோ அதனையும் நீங்கள் செட் செய்து கொள்ளலாம்.
 
நீங்கள் பார்க்கும் வீடியோவின் இணையதள முகவரியை URL கொப்பி செய்து இதில் பேஸ்ட் செய்தால் போதுமானது. பதிவிறக்கம் ஆகிவிடும்.
 
ஆபாச இணையதள முகவரிகளையும் இதில் பதிவிறக்க முடியாமல் தடைசெய்யலாம் என்பது இதில் கூடுதல் வசதியாகும்.
 

எச்டிசி அறிமுகப்படுத்தும் புதிய அசத்தலான மொபைல் போன் !

மொபைல் உலகின் நட்சத்திர நிறுவனமாக திகழ்ந்து கொண்டிருக்கும் எச்டிசி நிறுவனம் தற்போது ஹீரோ அம்சங்கள் பொருந்திய புதிய மொபைலை அறிமுகப்படுத்தி உள்ளது.

ஆம், இதற்காகவே இந்த மொபைலின் பெயரையும் ஹீரோ என்று வைத்துள்ளது எச்டிசி. எச்டிசி ஹீரோ எஸ் என்ற குறியீட்டு பெயரில் வந்துள்ள இந்த புதிய மொபைல் ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரீட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும்.

இந்த இயங்குதளம் எளிதாக இயங்குவதற்கு 1.2 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் துணை புரிகிறது. 4 இஞ்ச் திரை கொண்ட இந்த மொபைல் கியூஎச்டி எஸ்-எல்சிடி கெப்பாசிட்டிவ் டச் திரை தொழில் நுட்பத்தை கொண்டுள்ளது.

5 மெகா பிக்ஸல் கேமராவினையும், 1.3 பிக்ஸல் கொண்ட முகப்பு கேமராவினையும் கொண்டிருக்கிறது. இது 1280 X 720 பிக்ஸல் துல்லியத்தை கொடுக்கும். இந்த மொபைலில் 720பி வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் பெற முடியும்.

ஹீரோ எஸ் மொபைலில் 3.0 வெர்ஷன் புளூடூத் உள்ளது. அனைத்து வசதிகளை அள்ளித் தர இருக்கும் இந்த மொபைல் 130 கிராம் எடையை கொண்டு ஜொலிக்கிறது.

இந்த மொபைலில் உள்ள வைபை தொழில் நுட்பத்தின் மூலம் நெட் வசதியினை எளிதாக பெறலாம். இதில் 1,520 எம்ஏஎச் லத்தியம் அயான் பேட்டரி உள்ளதால் 7.25 மணி நேரம் டாக் டைமும் மற்றும் 456 மணிநேரம் ஸ்டான்-பை டைமும் கொடுக்கிறது.

இந்த ஹீரோ மொபைலின் விலை பட்டியல் விவரம் பற்றி தகவல்கள் கூறவில்லை.

உங்கள் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு!

நம்மில் பலரும் விண்டோஸ் இயங்குதளம் தான் அதிகமாக பயன்படுத்துகிறோம். ஆனால் நம்மில் பலருக்கும் ஆப்பிள் கணணி மீது அதிக ஆர்வம் இருக்கும்அதை எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையும் இருக்கும். அதில் உள்ள கிராபிக்ஸ் மற்றும் அதன் அனிமேஷன் இதற்கு முக்கியமான காரணமாக இருக்கலாம்.
நாம் விண்டோசின் இயல்பான தோற்றத்தை மிகவும் எளிதாக ஆப்பிளை போல மாற்றலாம். இதற்கு நாம் ஒரு மென்பொருளை நிறுவவேண்டும்.பின்னர் கணணியை மறுத்தொடக்கம் செய்ய வேண்டும் அவ்வளவு தான். இந்த மென்பொருள் நம் கணணியை அப்படியே ஆப்பிள் கணணி போல தோற்றத்தில் மாற்றுகிறது மற்றும் MAC இல் உள்ள அனிமேஷனோடு வருகிறது.
 
குறிப்பிட்ட சுட்டியில் உள்ள மென்பொருளை பதிவிறக்கி கொள்ளுங்கள். இதனை நாம் சாதரணமாக மற்ற மென்பொருள்கள் நிறுவுவது போல நிறுவுங்கள்.பின்னர் உங்கள் கணணியை பாருங்கள். இதில் 4 வகையான தீம் இருக்கிறது. அதில் நீங்கள் உங்கள் விருப்பதை போல் தேர்வு செய்யுங்கள்.
 
இதனை பெறுவதற்கு உங்கள் டெஸ்க்டொப்பில் வலது கிளிக் செய்து அதில் PERSONALIZE என்பதை தேர்வு செய்யுங்கள். அதில் INSTALLED THEMES என்ற பிரிவில் உங்களுக்கு பிடித்த தீம்சை தேர்வு செய்யுங்கள்.