பத்து நிமிடத்தில் உங்கள் புகைப்படங்களுக்கு குரல் வடிவம் குடுக்க ஒரு இணையதளம் !

உங்கள் படங்களுக்கு ஓர் வண்ணமயமான பின்னணி சேர்த்து உங்கள் இனிமையான குரலினை படங்களுக்கு சேர்த்து உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள உதவுகிறது Fotobabble என்ற தளம்.

முதலில் இந்த தளத்திற்கு சென்று Get started என்பதை கிளிக் செய்து உங்கள் முகநூல் கணக்கில் இந்த செயலியினை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த தளத்திலும் ஒரு கணக்கினை திறந்து கொள்ளவும்.

இப்போது உருவாகும் Create a fotobabble என்ற பக்கத்தில் உங்கள் கணணியில் இருந்தோ அல்லது முகபக்கத்தில் இருந்தோ அல்லது இணையத்தில் இருந்தோ படத்தினை தரவிறக்கம் செய்து கொண்டு Create என்பதை கிளிக் செய்யவும்.
 
இப்போது நீங்கள் தரவிறக்கம் செய்த புகைப்படமும் அதற்கு இணைக்கப்பட வேண்டிய பின்னணியும் தோன்றும். பின்னணியை தெரிவு செய்து பின்னணி படத்தில் சேர்த்ததும் படத்தின் கீழே Record என்பதை கிளிக் செய்ததும் பதிவு செய்ய தொடங்கியதும் உங்கள் குரலினை பதிவு செய்துகொண்டு கீழே save என்பதை கிளிக் செய்து சேமித்து கொள்ளவும்.
 
இப்போது உங்கள் குரல் பதிவு செய்யப்பட்ட படத்தினை தளத்தில் கொடுக்கப்பட்ட சமூகவலைத்தள இணைப்புகள் மூலம் பகிர்ந்து கொள்ள முடியும். அத்துடன் உங்கள் இமெயில் மூலம் அனுப்புவதற்கான கோடிங் மற்றும் வலைத்தளங்களில் பகிர்வதற்கான கோடிங் என்பனவும் தரப்பட்டுள்ளது.
 

என்னக்கொடும சரவணா !

தனது காதலனுக்கு 65,000 தடவைகள் தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்திய காதலி ஒருவர் பற்றிய சுவாரசியமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இவர் நாளொன்றிற்கு 178 அழைப்புக்களை மேற்கொண்டுள்ளார். சென்ற வருடம் மட்டும் 65000 தடவைகள் தனது காதலனுக்கு அழைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

அப்பெண்ணிடமிருந்து தான் செய்திகளையும் மின்னஞ்சல்களையும் தொடர்ச்சியாகப் பெற்று வந்ததாக அம்மனிதன் காவற்றுறைக்கு முறையிட்டிருந்தார். இவ்வாறு காதலனுக்கு இம்சை கொடுத்த பெண்ணிற்கு 42 வயது எனவும் அவரது காதலனுக்கு 62 வயது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இவர் தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

இப்பெண்ணின் வீட்டில் அதிரடியாக நுழைந்த காவற்றுறையினர் அங்கு பல கைத்தொலைபேசிகளையும் பல கணினிகளையும் கைப்பற்றியிருந்தனர்.

நீதிமன்றத் தீர்ப்பில் அந்த ஆணை தனியே எந்தவிதத் தொந்தரவுமில்லாமல் விடவேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் இப்பெண் தற்போது தடுத்தும் வைக்கப்பட்டுள்ளார்.

அதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லதாம்

இரவில் முன் கூட்டியே தூங்க சென்று அதிகாலையில் கண் விழிப்பது உடல் நலத்துக்கு நல்லது.
அவர்கள் சொல்வாக்கு மற்றும் செல்வாக்குடன் திகழ்வார்கள் என கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்னரே பெஞ்சமின் பிராங்க்ளின் என்ற அறிஞர் தெரிவித்து இருந்தார். அது முற்றிலும் உண்மை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இங்கிலாந்தில் உள்ள ரோம்ப்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதற்காக சுமார் 1100 ஆண்கள் மற்றும் பெண்களை தேர்ந்தெடுத்தனர்.
அவர்களில் அதிகாலையிலேயே எழுபவர்கள் ஒல்லியாகவும், நல்ல உடல் நலத்துடனும் இருந்தனர். இதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.
அதே நேரத்தில் ஆந்தை போன்று இரவு முழுவதும் கண் விழித்து விட்டு மிகவும் தாமதமாக படுக்கையை விட்டு எழுபவர்கள் உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும் தொலைத்தவர்களாக இருந்தனர்.
எனவே அதிகாலையிலேயே எழுந்து வழக்கமான தங்கள் பணிகளை தொடங்குபவர்கள் உடல் நலத்துடன் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இலவசமாக ஆங்கிலம் படிக்க ஓர் இணையதளம் !

நம‌க்கொரு வெர்ப்லிங் வேணுமடா!
மொழி பயிற்றுவிப்பு தளங்களில் புதிய சேவையாக அறிமுகமாகியிருக்கும் வெர்ப்லிங்கை பயன்ப‌டுத்த முற்படும் போது இப்படி தான் ஏக்கத்தோடு பாடத்தோன்றும்.அதாவது உலக மொழிகளை கற்றுக்கொள்ள உதவும் நோக்கத்தோடு உதய‌மாகியுள்ள இணையதளமான வெர்ப்லிங்க் போலவே இந்திய மொழிகளை கற்று கொள்ள கைகொடுக்க கூடிய இணையதளம் உருவாக்கப்பட்டால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கத்தோன்றும்.

புதிய மொழியை கற்று கொள்ள விரும்பினால் அதற்கு உதவக்கூடிய இணையதளங்கள் பல இருக்கவே செய்கின்றன.வலைப்பின்னல் தன்மையோடு மேம்ப்பட்ட பயிற்றுவிப்பு சேவைகளை அளிக்கும் தளங்களும் இருக்கின்றன.

எனவே மொழி கற்பதற்கான இணையதளங்களை புதுமையானது என்று சொல்வதற்கில்லை.இருப்பினும் வெர்ப்லிங்கை மொழி கற்பிக்கும் தளங்களில் புதுமையானது என்று சொல்லலாம்.புதுமையானது மட்டும் அல்ல எளிமையாது.

முதல் விஷயம் வெர்ப்லிங் வீடியோ வழியே புதிய மொழியை கற்க‌ வைக்கிற‌து. வீடியோ வழியே என்றதும் யாரோ எப்போதோ நடத்திய பாடத்தின் வீடியோ தொகுப்பாக இருக்கும் என்று நினைத்து விடக்கூடாது.இது நம‌க்காகவே நடத்தபடும் உயிரோட்டமான உடனடி பாடம்.
சொல்லப்போனால் இதனை பாடம் என்று கூட சொல்ல முடியாது.பயிற்சி என்று சொல்லலாம்.உரையாடல் மூலமான உடனடி பயிற்சி.

அதாவது எந்த மொழியை கற்க‌ விரும்புகிறோமோ அந்த மொழி பேசுபவருடன் வீடியோ வழியெ உரையாடலில் ஈடுபட்டு அந்த மொழியின் பேச்சு வழக்கு போன்ற நுணுக்கங்களை நேரடியாக கற்று கொள்ள வைப்பதே வெர்ப்லிங்கின் தனித்தனமையாக இருக்கிறது.

ஆம்,வெர்ப்லிங் புதிய மொழியை கற்று கொள்ள நினைப்பவரை அந்த மொழி பேசுபவரோடு பேசி அந்த உரையாடல் வழியே மொழியை கற்றுக்கொள்ள வழி செய்கிற‌து.

உதாரணமாக பிரெஞ்சு மொழியை கற்று கொள்ள விரும்பினால் இந்த தளம் வழியே பிரெஞ்சு மொழி பேசுபவரோடு உரையாடிப்பார்த்து அந்த மொழியை பயிலலாம்.
அட,சுவார்ஸ்ய‌மான வழியாக் இருக்கிறதே என்று நினைக்கலாம்.உண்மை தான்.இது சுவாரஸ்யமான வழி மட்டும் அல்ல;நடைமுறையில் பயன் மிக்கது.

யோசித்து பாருங்கள்,புதிய மொழியை கற்று கொள்ள எத்தனையோ வழிகள் இருந்தாலும் அந்த மொழி பேசுபவரோடு உரையாடுவது போன்ற சிறந்த வழி வேறு எதுவும் இல்லை தானே!
புத்தகங்களை பார்த்தோ அல்லது மொழி வகுப்புகளுக்கு சென்றோ கறு கொண்டாலும் புதிய மொழியில் வார்த்தைகள்,அர்த்தங்கள்,இலக்கனம் போன்றவை அத்துபடியாகுமே தவிர அந்த மொழியில் சரளமாக பேச திண்டாடவேண்டியிருக்கும்.அந்த மொழி பேசுபவரோடு பேசும் போது தான் அதில் உள்ள வார்த்தைகளின் பயன்பாட்டை அறிய முடியும்.

அதே நேரத்தில் மொழி தெரியாத ஒரு ஊருக்கு மாற்றலாகி சென்றால் எந்த வகுபிலும் சேரமால்,புத்தகத்தை படிக்காமல் அங்குள்ளவர்களோடு உரையாடுவதன் மூலமே தட்டுத்தடுமாறி புதிய மொழியை கற்று கொண்டுவிடலாம்.
நீச்சம் கறு கொள்ள வேண்டும் என்றால் தண்ணீரில் குதிப்பதே சிறந்த‌ வழி என்பது போல புதிய மொழி கற்க அந்த மொழிகாரர்களிடம் பேசி பழகுவதை தவிர வேறு சிறந்த வழியில்லை.ஆனால் நாம் கற்று கொள்ள விரும்பும் மொழி பேசுபவர்களை தேடிச்செல்வது எப்படி?
இந்த இடத்தில் தான் வெர்ப்லிங் வருகிற‌து.

வெர்ப்லிங் வேற்று மொழி பேசுபவரோடு அந்த மொழியை கற்றுக்கொள்ள விரும்புகிற‌வர்களை சேர்த்து வைக்கிற‌து.இருவரும் வீடியோ வழியே உரையாடிக்கொள்ளலாம்.
புதிய மொழி கற்று கொள்ள விரும்புகிற‌வர்கள் இந்த‌ தளத்தில் உறுப்பினரானதும் ,அவர் கற்க விரும்பும் மொழி பேசும் நபரோடு தொடர்பு ஏற்படுத்தி தருகிறது.அவரோடு பேசிப்பழக துவங்க வேண்டியது தான்.உச்சரிப்பும்,வார்த்தைகளுக்கான அர்த்தம்,பயன்பாடு போன்ற விஷயங்களை அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.அப்படியே நாள‌டைவில் அந்த மொழியில் பேசும் திறன் பெறுவிடலாம்.

இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் வெர்ப்லிங் சரியாக பொருத்தம் பார்த்தே சேர்த்து வைக்கிறது என்பதே.அதாவது ஒரு மொழி பேசுபவரை அதனை கற்று கொள்ள விரும்புகிற‌வர்களோடே சேர்த்து வைக்கிற‌து.எப்படி என்றால் ஒருவர் ஸ்பானிய மொழி கற்க விரும்புவதாக வைத்து கொள்வோம்.அவர் சொந்த மொழி ஆங்கிலமாக‌ இருக்கிறது.

அப்போது ஆங்கிலம் ஓரளவு அறிந்த ஸ்பானிஷ் மொழி பேசுபவருடன் தொடர்பை ஏற்படுத்தி த‌ருகிற‌து.

மறுமுனையில் இருப்பவருக்கு ஆங்கிலம் ஒரளவு தெரியும் என்பதால் ஸ்பானிஷ் மொழியில் உரையாடலை எளிதாக துவக்கலாம்.அதே நேரத்தில் அந்த ஸ்பானிஷ்காரரும் தன்னுடைய ஆங்கில மொழி அறிவை இவரோடு பேசி பட்டை தீட்டி கொள்ளலாம்.

ஆக கிப் அன்டு டேக் பாலிசியை போல இருவருமே ஒருஇவருக்கு மறொருவர் தங்கள் மொழியில் பேச கற்று கொடுத்து உதவலாம்.அதற்கேற்பவே வீடியோ உரையாடல் வசதியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதல் பாதியில் இந்த மொழியில் உரையாடினால் அடுத்த பாதியில் அந்த மொழியில் உரையாட வேண்டும்.ஒரு முறை உரையாடிய பின் திருப்தி இருந்தால் மீண்டும் அவரோடே உரையாடலாம்.இப்படி படிப்படியாக‌ பேசி மொழி கற்கலாம். கற்பவர்களின் தன்மைக்கேற்ப உறுப்பினர்களின் மொழி அறிவு மூன்று நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.அந்த அந்த நிலையில் இருப்பவ‌ர்கள் தங்களுக்குள் உரையாடிக்கொள்ளலாம்.

புதிய மொழி கற்க அருமையான வழி என்றாலும் இப்போதைக்கு உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் நினைத்த நேரத்தில் இந்த தளத்தை பயன்படுத்த முடியாது.ஒவ்வொரு நாளும் வகுப்பு போல குறிப்பிட்ட நேரத்திற்கே உரையாடும் வசதி இருக்கிறது.முதலிலேயே பதிவு செய்து கொண்டு அந்த குறிப்பிட்ட நேரத்தில் உரையாடி கொள்ள‌லாம். 

இந்த தளம் பிரபலமாகி உறுப்பினர்களின் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்தால் இன்னும் சரளமாக பயன்ப‌டுத்தி கொள்ளலாம்.

இதே போல இந்தய மொழிகளுக்காக என்றே ஒரு தளம் துவக்கப்பட்டால் எப்படி இருக்கும்?இந்தியாவில் தான் எத்தனை மொழி பேசுபவர்கள் உள்ளனர்.இந்திய வெர்ப்லிங் மூலம் நாமும் பிற இந்திய மொழிகளை கற்று கொள்ளலாம் அல்லவா?
இ8ணையதள முகவரி : http://verbling.com/

லண்டனில் தங்கப்பதகதிக்கு குறிவைக்கும் Saina Nehwal !

ஹைதராபாத்: சர்வதேச அளவில் பூப்பந்து (பேட்மிண்டன்) விளையாட்டில் பல சாதனைகளை நிகழ்த்தி வரும் சாய்னா நேவால், அடுத்தாண்டு நடக்க உள்ள லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

பூப்பந்து விளையாட்டில், இந்தியாவிற்கு தொடர்ந்து பெருமை சேர்த்து வருபவர் சாய்னா நேவால். சமீப காலமாக தரவரிசையில் முன்னேற்றம் கண்டு வரும் சாய்னா தற்போது 6 இடத்தில் உள்ளார். கடந்த 2008ம் ஆண்டு நடந்த பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் காலுறுதி வரை முன்னேறிய சாய்னா அங்கு தோல்வி அடைந்து, வெளியேறினார்.

இருப்பினும் ஓலிம்பி்க் போட்டியில் பூப்பந்து விளையாட்டில் காலிறுதி வரை முன்னேறிய முதல் வீராங்கனை என்ற பெயரை பெற்றார். ஹைதராபாத்தை சேர்ந்த சாய்னா, தனது 8 வயது முதல் பூப்பந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார். மேலும், சமீபத்தில் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார். இந்த பட்டத்தை வென்ற முதல் இந்தியரும் இவர் தான்.

இது குறித்து சாய்னா நேவால் கூறியதாவது,

நான் வயதில் சிறியவளாக இருந்தாலும், எப்போதும் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளவே விரும்புகிறேன். எனவே நான் காலிறுதியில் ஆடும் போது, அரையிறுதியை மனதில் வைத்து கொள்வேன். தற்போது அடுத்தாண்டு நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும் என்பதில் குறியாக உள்ளேன்.

நான் அந்த வெற்றிப் பாதையில் தான் இருப்பதாக நினைக்கிறேன். பல போட்டிகளில் நாட்டிற்காக விளையாடி வெற்றிகளை குவித்தாலும், இந்தோனேசிய சூப்பர் சீரிஸ் தொடரில் தங்கம் வென்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

எனது பயிற்சியாளர் கோபிசந்த் மற்றும் பெற்றோர் எனக்கு அளிக்கும் ஊக்கமும் பயிற்சியுமே எனது வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. டென்னிஸ் விளையாட்டிற்கு இணையான வரவேற்பு பூப்பந்து போட்டிற்கு இல்லாவிட்டாலும், வரும் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கமும், உலக பூப்பந்து பட்டியலில் முதலிடத்தை பெறுவதே எனது எதிர் லட்சியமாக கொண்டுள்ளேன்.

இவ்வாறு சாய்னா நேவால் கூறினார்.

English summary
Saina Nehwal said, Although I am young, I always had the feeling that I could reach the finals. So when I played the quarter-finals, I kept thinking of the semi-finals. it is my dream to win the London Olympics, I think I'm on the way.

உலகத்தை மதிமயக்கும் HP Laptop !

எச்பி நிறுவனம் என்வி லேப்டாப்பை அறிமுகப்படுத்திய போது அதனுடைய ஸ்டைலுக்காகவும், நவீன தொழில்நுட்பத்திற்காகவும் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆனால் காலப்போக்கில் அந்த லேப்டாப் அப்க்ரேட் செய்யப்படாததால் வாடிக்கையைளர்களிடமிருந்து மெல்ல விலகியது.

ஆனால், அந்த நிலைமை தற்போது மாற்ற எச்பி நிறுவனம் தனது என்வி லேப்டாப்பை அப்கிரேடு செய்து அறிமுகம் செய்கிறது. அதனால் மீண்டும் என்வி லேப்டாப் மற்ற டாப் வேரியண்ட் லேப்டாப்களுக்கு கடும் போட்டியை கொடுக்க வருகிறது. ஆப்பிளின் மாக் புக் ப்ரோ லேப்டாப்போடு போட்டி போடக்கூடிய அளவிற்கு புதிய எச்பி என்வி அப்கிரேடு செய்யப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட புதிய எச்பி என்வி தமது முந்தைய லேப்டாப்களின் கான்பிகரேஷனை கொண்டிருந்தாலும் மற்ற அனைத்தும் புதியதாக இருக்கும். இதன் ப்ராஸஸர் 2ஜி இன்டல் கோர் ஐ5 ஆகும். இதில் க்ராபிக்ஸ் வசதி மற்றும் பவர் மேனேஜ்மென்ட் உள்ளதால் சந்தையில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டுவரும் என நம்பலாம்.

தொழில் நுட்பம் பக்கம் பார்த்தாலும் எச்பி என்வி மிக பக்காவாக இருக்கிறது. ஏற்கனவே கூறியது போல் இதன் ப்ராசஸர் 2.4ஜிஹச்ஸட் வினாடி ஜெனரேஷன் இன்டல்®கோர் ஐ5 - 2410எம் ஆகும். இதன் ஓஎஸ் விண்டோஸ் 7 அதாவது ஹோம் ப்ரீமியம் (64-பிட்) ஆகும்.

இது 14.5 இன்ச் அளவுடன் எச்பி ப்ரைட்வீயு ஹச்டி எல்இடி டிஸ்ப்ளையைக் கொண்டிருக்கிறது. க்ராபிக்ஸ் வசதியைப் பார்த்தால் இது எஎம்டி ரேடியோன் 6630 மற்றும் இன்டல் ஹச்டி க்ராபிக்ஸைக் கொண்டுள்ளது. மெமரி சேமிப்புக்காக என்வி மயக்கும் அளவிற்கு 1333எம்ஹச்ஸட் வேகத்தில் இயங்கும் அளவிற்கு 6ஜிபி டிடிஆர்3 ராமைக் கொண்டுள்ளது. மேலும் இதன் ஹார்ட் ட்ரைவ் 500ஜிபி யுனிட் சேமிப்பைக் கொண்டுள்ளது.

என்வி மல்டிமீடியாவிற்காக ஹை பீட்டாஸ் ஆடியோ, எச்பி ட்ரூவிஷன் வெப்காம் கொண்டுள்ளது. இதன் வைபை 802.11 பி/ஜி/ என் ஆகும். மேலும் இதன் ப்ளூடூத் தகவல் பரிமாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும்.

மேலும் சினிக்ரோனைசேஷனுக்காக எக்ஸ்டர்னல் ஹார்டவேருடன் 3 யுஎஸ்பி போர்ட்டும் என்வி கொண்டுள்ளது. இதில் ஒன்று இஎஸ்எடிஎ ஆகும். அடுத்ததாக ஒரு ஹச்டிஎம்ஐ போர்ட்டும் இந்த லேப்டாப்பில் உள்ளது. இது ஒரு மினி டிஸ்ப்ளே மற்றும் ஆர்ஜே-45 மூலமாக சப்போர்ட் செய்கிறது.

இதன் இன்புட் டிவைஸ்களைப் பார்த்தால் இது ஆப்டிக்கல் ட்ரைவ், முழு அளவிலான கீபோர்ட், மற்றும் டச்பேட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் பாதுகாப்பிற்காக மைக்ரோசாப்ட் செக்கியூரிட்டி எஸ்ஸென்சியல்களைக் கொண்டிருக்கிறது.

என்வியின் மொத்த எடை என்று பார்த்தால் அது 5.6 பவுண்டுகள் ஆகும். மேலும் இதன் மின்திறந் 90 டபுள்யு எசி ஆகும். அதனால் 5 மணி நேரம் மின் திரனைக் கொண்டிருக்கும்.

எச்பி என்வியின் 14 இன்ச் 999 அமெரிக்க டாலருக்கு கிடைக்கிறது. அதன் புதுப்பிக்கப்பட்ட லேப்டாப் 640 ஜிபி ராமுடன் ரூ.48,555க்கும் 750 ஜிபி ராமுடன் ரூ.59,895க்கும் கிடைக்கிறது.

English summary
HP is back to regain its lost title of its old hero, the HP Envy. The updated HP Envy will imitate its predecessor in the configuration, but this time, in a much more updated manner. The unit will sport the high efficient 2nd generation Intel Core i5 processors. The technical specification of the new HP Envy is Awesome and brilliantly decided. The processors as said will be a 2.4 GHz Second Generation Intel® Core i5 – 2410m processor. The multimedia in the laptop is a most desirable one with the system featuring a High Betas Audio, HP TrueVision Webcam etc. The WiFi device in the unit is a most updated one which is an 802.11 b/g/n. The input devices in the laptop can be listed starting from an Optical Drive, a full size keyboard, a Touchpad, etc. The power management is excellent with its 90 W AC configuration giving up to 5 hours of battery life. The entire laptop weighs just 5.6 pounds. The basic HP Envy with a 14 inch is available at a pricing of $999. The improved versions will have a price tag of Rs. 48,555, Rs. 59,895 for 750 and 640 GB RAM respectively.

Nokia வழங்கும் புதிய Windows Smartphone

நோக்கியாவின் புதிய நோக்கியா 703 ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் இணையதளங்களில் பரவலாக வந்து கொண்டிருக்கின்றன. அதன் சிறப்புகளும் வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக நோக்கியா 703 பட்ஜட் போனாகவோ அல்லது விலை உயர்ந்த போனாகவோ இல்லாமல் நடுத்தர விலையில் இருக்கும். நோக்கியா 703 நோக்கியாவின் சீ ரே போனைப் போல் 3.9 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது.

இணையதள் தகவல்களின் படி நோக்கியா 7.3 1ஜிபிஹச் ப்ராஸஸரைக் கொண்டிருக்கிறது. மேலும் இது 512எம்பி ராமை கொண்டிருப்பதால் நீண்ட நாள் உழைக்கும். இதன் ஓஎஸ் விண்டோஸ் 7 ஆகும்.

இதன் தொடுதிரை 3.7 இன்ச் டிஸ்ப்ளே ஆகும். மேலும் இதில் ஐபிஎஸ் பேனல் உள்ளது. இதன் திரையில் காட்சிகள் மற்றும் படங்கள் 480X800 ரிசலூசனில் இருக்கும். இதன் எல்சிடி திரையில் விண்டோஸ் அவுட்லுக் மிக தெளிவாக இருக்கும். மேலும் இதன் கேமரா 5 மெகா பிக்ஸல் ஆகும். இதன் மூலம் சிறப்பான படங்களை எடுக்க முடியும். இதில் எடிட்டிங் வசதியும் உள்ளது. மேலும் இந்த கேமராவில் ஆட்டோ போக்கஸ் மற்றும் எல்இடி ப்ளாஷ் உள்ளதால் தரமான தெளிவான படங்களை சேமிக்க முடியும். மேலும் இந்த கேமரா 720பி ஹச்டி வீடியோவை சப்போர்ட் செய்கிறது.

நோக்கியா 703 8ஜிபி சேமிப்பு வசதியுடன் தனியாக மெமரி கார்டையும் வழங்குகிறது. மேலும் இண்டர்னல் சேமிப்புக்கான போர்டும் இந்த மொபைலில் உள்ளது. தகவல் பரிமாற்றத்துக்காக தரமான வைபை மற்றும் ப்ளூடூத் வசதிகளும் உள்ளன. நெட்வொர்க் தொடர்புக்காக 3ஜி வசதி, பிஜிஆர்எஸ் மற்றும் எட்ஜ் தொழில்நுட்பமும் உள்ளன. மேலும் ஜிபிஎஸ் வசதி மற்றும் ஓவிஐ மேப்ஸ் ஆகியவை இந்த மொபைலுக்கு கூடுதல் மதிப்பெண்களை வழங்குகிறது. மேலும் இதில் எளிய ஸின்க்ரோனைஸேஷன் செய்ய மைக்ரோயுஎஸ்பி போர்ட்டும் உள்ளது. இதன் விலையைப் பற்றிய தகவல்கள் இன்னும் வரவில்லையென்றாலும் இது சிறந்த ஒரு போனாக இருக்கும் என நம்பலாம்.

English summary
An image speculated to be that of the new Nokia 703 is released on some websites. The specifications leaked out from the image published under the name Nokia 703 somehow points to the same fact. A Windows 7 smart phone, if it is, as rumored by the web sites, then it’s supposed to come with a very powerful and highly operational 1 GHz processor. To run along without much effort would be a 512 MB RAM giving the device faster stimuli. The operating system is definitely a Windows 7 in that case. The first look reveals a well polished LCD screen display giving the phone its real Windows outlook. The camera has support for 720p HD video capturing too. Nokia 703 has a built in WiFi and Bluetooth devices. The network accessibility in the phone is much improved with the 3G compatibility, GPRS with EDGE technology. A GPS utility with OVI maps is an added advantage of Nokia 703.It will also have a microUSB port for easy synchronization of the device with other supported external hardware. The price for the phone is still unclear.