என்னக்கொடும சரவணா !

தனது காதலனுக்கு 65,000 தடவைகள் தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்திய காதலி ஒருவர் பற்றிய சுவாரசியமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இவர் நாளொன்றிற்கு 178 அழைப்புக்களை மேற்கொண்டுள்ளார். சென்ற வருடம் மட்டும் 65000 தடவைகள் தனது காதலனுக்கு அழைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

அப்பெண்ணிடமிருந்து தான் செய்திகளையும் மின்னஞ்சல்களையும் தொடர்ச்சியாகப் பெற்று வந்ததாக அம்மனிதன் காவற்றுறைக்கு முறையிட்டிருந்தார். இவ்வாறு காதலனுக்கு இம்சை கொடுத்த பெண்ணிற்கு 42 வயது எனவும் அவரது காதலனுக்கு 62 வயது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இவர் தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

இப்பெண்ணின் வீட்டில் அதிரடியாக நுழைந்த காவற்றுறையினர் அங்கு பல கைத்தொலைபேசிகளையும் பல கணினிகளையும் கைப்பற்றியிருந்தனர்.

நீதிமன்றத் தீர்ப்பில் அந்த ஆணை தனியே எந்தவிதத் தொந்தரவுமில்லாமல் விடவேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் இப்பெண் தற்போது தடுத்தும் வைக்கப்பட்டுள்ளார்.

0 comments:

Post a Comment