நீங்கள் வீடியோ எடிட்டிங் செய்பவரா இதோ உங்களுக்கு ஒரு அசத்தலான மென்பொருள் !

வீடியோ எடிட்டிங் செய்யும் நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி  அதாவது நம் வீடியோவை எடிட் செய்து ஹாலிவுட் தரத்தில் காட்ட ஒரு இலவச மென்பொருள் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

வீடியோ எடிட்டிங் செய்ய பல மென்பொருட்கள் வந்தாலும் சில மென்பொருட்கள்  நம்மை அறியாமலே அந்த மென்பொருள் பக்கம் நம் கவனத்தை ஈர்த்து சென்று விடும் அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் வீடியோ எடிட்டிங் இலவச மென்பொருள் பயன்படுத்துவதற்கு மட்டுமல்ல அள்ளி கொடுக்கும் சேவையிலும் நமக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
மென்பொருள் தறவிரக்க முகவரி : http://www.lightworksbeta.com
இத்தளத்திற்கு சென்று Download now என்ற பொத்தானை சொடுக்கி இந்த வீடியோ எடிட்டிங் மென்பொருளை இலவசமாக தறவிரக்கலாம். இலவசமாக வீடியோ எடிட்டிங் சேவை கொடுக்கும் மென்பொருளைக் காட்டிலும் பத்துமடங்கு சேவையை நாம் இந்த மென்பொருள் மூலம் பெறமுடியும் , இந்த மென்பொருள் ஓபன் சோர்ஸ் தான் தங்கள் தேவைக்கு தகுந்தபடியும் மாற்றியமைக்கலாம். 

ஹாலிவுட் தரத்திற்கு இணையான மென்பொருளை வாங்கி பயன்படுத்தும் அளவிற்கு நமக்கு தேவை இருக்காது என்றாலும் சில நேரங்களில் ஹாலிவுட் காட்சிகளில் வருவதுபோல் நம் வீடியோவை எடிட் செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு இந்த மென்பொருள் ஒரு வரப்பிரசாதம் தான். பலவிதமான நுனுக்கமான சேவைகள் பயன்படுத்துவதற்கு எளிமையாகவே இருக்கின்றது ஒருமுறை நாம் பயன்படுத்திவிட்டால் அது கொடுக்கும் சேவையால் மேலும் நம்மை  ஈர்க்கிறது. 

வீடியோ எடிட்டிங் செய்ய தெரியாது என்று சொல்லும் நண்பர்களுக்குக் கூட எப்படி வீடியோ எடிட் செய்யலாம் என்று அழகாக சொல்லியும் கொடுக்கிறது. வீடியோ எடிட் செய்ய விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

அறிமுகம் ஆகிவிட்டது மதிமயக்கும் சொனி லேப்டாப் !

சந்தையில் டெப்லட் கணனிகளுக்கான கேள்வியை தொழிநுட்ப நிறுவனங்கள் நன்கு அறிந்துவைத்துள்ளன.
இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் நிறுவனங்கள் பல்வேறு வசதிகளுடன் கூடிய டெப்லட் கணனிகளை நாளுக்கு நாள் அறிமுகப்படுத்தி வருகின்றன.
Apple, Sam Sung, HP, Blackberry  என பல்வேறு நிறுவனங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
தற்போது அவ்வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளது ‘Sony’.சொனி நேற்று இரண்டு டெப்லட் கணனிகளை அறிமுகப்படுத்தியது.
டெப்லட் பி மற்றும் டெப்லட் எஸ் என அவை பெயரிடப்பட்டுள்ளன. இவை இரண்டும் கூகுளின் அண்ட்ரோய்டின் புதிய வேர்ஷனான ‘ஹனிகோம்’ ஐ அடிப்படையாகக் கொண்டு இயங்குபவை.
இதில் ‘பி’ இன் வடிவம் டெப்லட் சந்தைக்கு புதியது.

இது இரண்டு திரைகளைக் கொண்டுள்ளதுடன் மடித்து வைத்துக் கொள்ள முடிவதனால் எடுத்துச் செல்ல இலகுவாக இருக்குமென சொனி தெரிவிக்கின்றது.

கணணி கோப்புக்களை ரகசியமாக மறைத்து வைப்பதற்கு

ரகசியத்தை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தனிப்பட்ட விவரங்களை வைத்திருப்போம்.
 கணக்குவிவரம், தொலைபேசி எண்கள், கடவுச்சொற்கள், புகைப்படங்கள் என ரகசியங்கள் பலவகைகளில் இருக்கும்.

 அதை எல்லாம் மொத்தமாக ஒரு கோப்பறையில் போட்டு அந்த கோப்பறையை தனியே மறைத்து விடலாம். 400 கே.பி அளவுள்ள இந்த சின்ன மென்பொருளினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.
 இதனை நிறுவியதும் உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்களுடைய கடவுச்சொல் ஏதாவது தட்டச்சு செய்யுங்கள். உடன் உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லினை நினைவுகொள்ளும் குறிப்புகளையும் தட்டச்சு செய்யுங்கள.
 
அதன் பின் ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள ADD பட்டனை கிளிக் செய்தோ அல்லது கோப்பறையை இழுத்து வந்தோ இந்த விண்டோவின் உள்ளே விட்டு விடுங்கள். இதில் உள்ள Secure கிளிக் செய்து விடுங்கள். உங்கள் கோப்பறையானது மறைந்து விடுவதை கவனியுங்கள்.
 
இப்போது உங்களுக்கு மீண்டும் உங்களுடைய கோப்பறை தேவையென்றால் இந்த மென்பொருளினை கிளிக் செய்யுங்கள். மீண்டும் ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் உங்கள் கடவுச்சொல்லினை தட்டச்சு செய்யுங்கள். வரும் விண்டோவில் நீங்கள் எந்த கோப்பறையை பார்க்க விரும்புகின்றீர்களோ அந்த கோப்பறையை தேர்வு செய்து Unsecured செய்து விடுங்கள்.
 
இப்போது உங்கள் டிரைவில் சென்று பார்த்தீர்களேயானால் உங்களது கோப்பறை இருக்கும். இதில் நிறைய கோப்பறையை போடும் வசதி உள்ளதால் நீங்கள் எதை எதை மறைக்க விரும்புகின்றீர்களோ அதை எல்லாம் இதில் போட்டு மறைத்து விடுங்கள்.

இணையத்தில் இவரிடம் இலவசமாக எதையும் கேட்கலாம்.

இனி நீங்கள் தனியே முடிவெடுக்க வேண்டியதில்லை, மாறாக உங்கள் கூட்டத்திடம் ஆலோசனை கேட்டு கூட்டு முடிவெடுங்கள் என்று அழைப்பு விடுக்கிறது என்கிறது ஆஸ்க் மை மாப்.இதுவும் டிரைசைடர் போல முடிவெடுக்க ஆலோசனை கேட்கும் இணையதளம் தான். 

வடிவமைப்பு தவிர நோக்கத்திலும் உள்ளடக்கத்திலும் டிரைசைடருக்கு இதற்கும் அடிப்படையில் பெரிய வேறுபாடில்லை.

டிரைசைடர் போல இதிலும் ஆலோசனை தேவைப்படும் கேள்வியை டைப் செய்து பேஸ்புக் மற்றும் டிவிட்டர் நண்பர்களை கருத்து சொல்ல அழைக்கலாம். கேள்விகள் சிறு தடுமாற்றத்திலிருந்து மாபெரும் குழப்பம் வரை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
 
என்ன புத்தகம் படிக்கலாம் என்பதில் துவங்கி யாரை கல்யாணம் செய்து கொள்ளலாம் என்னும் வாழ்க்கையை தீர்மானிக்கும் கேள்வியாகவும் இருக்கலாம்.
 
உண்மையிலேயே குழப்பத்தில் தடுமாறி யாராவது சரியான யோசனை சொல்லி வழிகாட்ட மாட்டார்களா என்னும் கேள்வியையும் கேட்கலாம். இல்லை மற்றவர்கள் என்ன தான நினைக்கின்றனர் பார்க்கலாம் என்னும் நோக்கத்திலான கேள்வியையும் கேட்கலாம்.
 
கேள்வியை கேட்டவுடன் அதற்கு நீங்கள் தீர்வாக கருதும் எண்ணங்களையும்(முடிவுகள்)குறிப்பிடலாம். நண்பர்கள் இந்த கேள்வியை படித்து விட்டு தங்களுக்கு எது சரியென படுகிறதோ அதில் வாக்களிப்பார்கள். எந்த முடிவுக்கு அதிக வாக்குகள் கிடைக்கிறதோ அதனை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
 
நண்பர்கள் முடிவுகளுக்கு ஆதரவு தெரிவிப்பதோடு தங்கள் யோசனைகளையும் தெரிவிக்கலாம். இந்த யோசனைகள் திறந்த மனதோடு நண்பர்களோடு ஒரு விஷயம் குறித்து கலந்துரையாடி தெளிவு பெறுவது போலவும் அமையலாம்.
 
சில நேரங்களில் நண்பர்களின் கருத்து முற்றிலும் புதிய கோணத்தை சுட்டிக்காட்டலாம்.புதிய வாசலை திறந்து விடலாம்.
 
ஆனால் நண்பர்களை ஒன்று திரட்டி ஆலோசனை நடத்துவது நடைமுறையில் மிகவும் சிக்கலானது. ஆஸ்க் மை மாப் சேவையோ இருந்த இடத்திலிருந்தே நண்பர்களுடன் கலந்தாலோசனை செய்ய உதவுகிறது.
 
இதுவா அதுவா என முடிவெடுக்க முடியாமல் தடுமாறும் போது, நடுநிலையான கருத்துக்கள் தேவைப்படும் போது, நேர்மையான யோசனைகள் உடனடியாக தேவைப்படும் போது என எப்போது வேண்டுமானாலும் இங்கு ஆலோசனை கேட்கலாம்.
 
டிரைசைடரில் பதிவு செய்யாமலேயே ஆலோசனை கேட்கலாம். இதில் முதலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்து கொண்ட பின் அவருக்கென்று தனி பக்கம் ஒதுக்கப்படும். அதில் கேள்விகளுக்கான ஆலோசனைகளை பார்க்கலாம். வாக்குகளை தெரிந்து கொள்ளலாம்.
 
நண்பர்களிடம் ஆலோசனை கேட்பது போலவே நீங்களும் நண்பர்களின் தடுமாற்றத்திற்கு யோசனை சொல்லலாம். டிவிட்டரில் செய்வது போல உங்களுக்கு ஆர்வம் உள்ள கேள்விகளை பின்தொடரலாம். பின்தொடரப்படும் கேள்விகளுக்கான சமீபத்திய யோசனைகளை உங்கள் பக்கத்திலேயே தெரிந்து கொள்ள முடியும்.
 
உண்மையிலேயே இந்த பின்தொடரல் சுவாரஸ்யமான விஷயம். உங்களை பாதித்த ஒரு கேள்விக்கு மற்றவர்கள் என்ன பதில் சொல்கின்றனர் என்று அறிய முடிவதும், ஈடுப்பாட்டை ஏற்படுத்தும் பிரச்ச்னை எப்படி முடிவுக்கு வருகீறது என்று தெரிந்து கொள்வதும் உயிரோட்டமானது தான்.ஆர்வத்தை உண்டாக்கிய ஒரு கேள்வி எத்தகைய விவாத்தை உண்டாக்கி அதற்கான் தீர்வு எப்படி கருக்கொள்கிறது என்பது புதிய வெளிச்சத்தை பாய்ச்சலாம்.
 
ஆனால் இப்போதைக்கு இத்தகைய தீவிர விவாதம் நடப்பதாக தெரியவில்லை. ஆஸ்க் மை மாபில் கேட்கப்படும் கேள்விகளில் பல விளையாட்டுத்தனமாக இருக்கின்றன. சில வில்லங்கமாகவும் இருக்கின்றன. கேள்விகளை சுற்றி இதயபூர்வமான விவாதம் நடப்பதாகவும் தெரியவில்லை.அறிமுக நிலையில் இருப்பதால் இவ்வாறு இருப்பாதாக கொள்ளலாம். இந்த தளத்திற்கு என்று மனம் திறந்து கேட்கவும் உள்ளன்போடு பதில் சொல்லக்கூடிய ஒரு துடிப்புள்ள சமூகமும் உருவானால் பல அற்புதங்கள் நிகழ வாய்ப்புள்ளது.
 
அதற்கான ஈர்ப்பு இந்த தளத்திடம் உள்ளது.ஆனால் அத்தகைய ஆதரவு கிடைக்கும் வரை இந்த தளம் தாக்குபிடிக்க வேண்டும். இணையதள வடிவில் மட்டும் அல்லாது செல்போன் செயலி வழி வழியிலும் இந்த சேவையை அணுகலாம்.
 

அறிமுகம் ஆகிவிட்டான் Facebook இன் எமன் !

பேஸ்புக்கின் வளர்ச்சியை தடுக்கவும் பேஸ்புக் சவால்களை சமாளிக்கவும் கூகுள் அறிமுகப்படுத்திய தளம் தான் கூகுள் பிளஸ்.இந்த தளம் இது நாள் வரை சோதனை பதிப்பிலேயே இருந்தது. அதனால் வாசகர்கள் இந்த வசதியை நேரடியாக பெற முடியாது. அதில் இருக்கும் யாரேனும் Invite கொடுத்தால் தான் இந்த வசதியை உபயோகிக்கும் நிலை இருந்தது
சுமார் 12 வாரங்களாக இந்த தளம் சோதனை பதிப்பிலேயே இருந்தது.
 
சோதனை பதிப்பில் இருந்தாலும் குறைந்த கால கட்டத்தில் அதிக பயனாளிகளை பெற்ற சமூக இணைய தளம் அந்தஸ்தை பெற்று விட்டதை அனைவரும் அறிந்திருப்போம்.சோதனை தளமாக இருந்ததால் பல வாசகர்கள் இந்த சேவையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்ப்பட்டது. அதனை கருத்தில் கொண்டு கூகுள் பிளஸ் சேவை தற்பொழுது அனைவருக்கும் வெளியிடப்பட்டுள்ளது.
 
உங்களுக்கு யார் invite தேவையில்லை கூகுளில் ஒரு அக்கௌன்ட் இருந்தாலே போதும் நீங்கள் கூகுள் பிளஸ் வசதியை உபயோகிக்க முடியும்.கூகுள் பிளஸ் சேவையை பெற www.google.com/+இந்த தளத்திற்கு செல்லுங்கள்.அங்கு கேட்கப்படும் சில விவரங்களை கொடுத்து கூகுள் தளத்தில் சேர்ந்து நண்பர்களுடன் அரட்டை அடித்தும் உங்களின் தகவல்களையோ அனுபவத்தையோ மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
 
புதிய வசதிகள்:
 
Hangouts: more places, more people, more to do: Hangout எனப்படும் வீடியோ காலிங்கில் மேலும் சில வசதிகளை புகுத்தி உள்ளது கூகுள் நிறுவனம். மொபைலில் ஹாங்கவுட் வசதி ஆனால் Android V2.3 உபயோகிப்பவர்கள் மட்டுமே இந்த வசதியை தற்பொழுது பெற முடியும்.
 
விரைவில் ios மொபைல்களுக்கும் வர இருக்கிறது. மேலும் சில வசதிகளை இந்த Hangout பிரிவில் சேர்த்துள்ளது கூகுள் நிறுவனம்.+Search : Find the people and posts you care about: கூகுள் பிளஸ் தேடியந்திரத்தில் மேலும் சில வசதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது கூகுள் நிறுவனம். உங்களுக்கு எது வேண்டுமோ அதை தேடி கொள்ளலாம்.
 
உதாரணமாக சமையல் பற்றி ஏதாவது டிப்ஸ் வேண்டுமா அந்த பதிவுகளை மட்டும் தனியாக பிரித்து கொடுக்கும் அல்லது ஏதேனும் மருத்துவக்குறிப்பு வேண்டுமா தேடினால் கிடைக்கும்.இப்படி உங்களுக்கு பிடித்த டாப்பிக்கில் சுலபமாக தேடி கொள்ளலாம் மற்றும் இதில் சுவாரஸ்யமான தகவல் என்ன வென்றால் கூகுள் பிளஸ் வெளிவந்து சுமார் 90 நாட்கள் ஆகியுள்ளது. அதற்குள் கூகுள் பிளஸ் 91 புதிய வசதிகளை வாசகர்களுக்கு அளித்துள்ளதாம்.
 
இந்த புதிய வசதிகளை வெளியிட்ட திகதி வாரியாக பார்க்க இந்த லிங்கில் Google New Features  செல்லவும்.

பயர்பொக்சின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை

இணைய உலகில் மக்களால் அதிகளவு பயன்படுத்தப்படும் இன்டர்நெட் பிரவுசராக பயர்பொக்ஸ் இடம் பிடித்து வருகிறது.
இதன் வேகம், அடிக்கடி மேம்படுத்தப்படும் செயல்பாடு, 
 
அதிகமான எண்ணிக்கையில் வேகம் தரும் எளிய ஆட் ஆன் தொகுப்புகள், ஓப்பன் சோர்ஸ் முறை எனப் பல அம்சங்கள் இதனைப் பெரும்பாலான மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளன.
 
 இவை மட்டுமின்றி பயர்பொக்ஸ் பிரவுசரிலேயே பல பயன்தரும் செயல்பாடுகள் தரப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
 
1. தேடல்களை சுருக்குச் சொற்கள் மூலம் மேற்கொள்ள: பயர்பொக்ஸ் பிரவுசரின் அட்ரஸ் கட்டத்திலேயே சொற்களைக் கொடுத்து ஓர் இணைய தளத்தில் அந்த சொல் எங்கிருக்கிறது என்று தேடலாம்.
 
எடுத்துக்காட்டாக அமேஸான் டாட் காம்(Amazon.com) தளத்தில் டச்பேட்(TouchPad) என்ற சொல் எங்கெல்லாம் வருகிறது என்று தேட பயர்பொக்ஸ் பாரில் "amazon touchpad" என டைப் செய்து என்டர் தட்டினால் போதும்.
 
இதற்கான செட்டிங்ஸ் எப்படி அமைப்பது எனப் பார்ப்போம். முதலில் அந்த இணைய தளம் சென்று அதில் உள்ள சர்ச் பாக்ஸைக் கண்டறியவும். பின்னர் அந்த சர்ச் கட்டத்தில் ரைட் கிளிக் செய்திடவும்.
 
கிடைக்கும் மெனுவில் "Add Keyword for this search" என்றிருப்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதற்கான புக்மார்க் மற்றும் கீ வேர்ட் கேட்கப்படும். கீ வேர்ட் உருவாக்கி அதனை ஒரு புதிய போல்டரில் சேவ் செய்திடவும்.
 
இப்போது உங்கள் கீ வேர்ட் தயாராய் உள்ளது. இதனை மேலே கூறியபடி பயர்பொக்ஸ் அட்ரஸ் கட்டத்தில் கொடுத்து என்டர் செய்திட குறிப்பிட்ட தளத்தில் தரப்பட்டுள்ள சொற்கள் தேடிக் காட்டப்படும்.
 
2. பல தளங்களுடன் திறப்பு: வழக்கமாக நாம் அடிக்கடி கட்டாயமாக முதல் தளமாகப் பார்க்க விரும்பும் இணைய தளத்தினை நம் ஹோம் பேஜாக வைத்திருப்போம்.
 
உங்களுக்கு இன்னும் சில தளங்களும், பிரவுசர் திறந்திடும் போதே தேவை எனில் என்ன செய்வீர்கள்? பயர்பொக்ஸ் அதற்கான வழியினைக் கொண்டுள்ளது.
 
பிரவுசரை இயக்கி Options > General எனச் செல்லவும். பின்னர் ஹோம் பேஜ்(home page) பீல்டில் நீங்கள் ஒரே நேரத்தில் திறக்கப்பட வேண்டிய தளங்களின் முகவரிகளை டைப் செய்திடவும். ஒரு முகவரிக்கும் மற்றொன்றுக்கும் இடையே பைப் அடையாளம் டைப் செய்திடவும்.
 
3. ஆர்.எஸ்.எஸ். மேம்படுத்துதல்: நீங்கள் அடிக்கடி இணையதளம் ஒன்றைப் பார்வையிடுபவராக இருந்தால் குறிப்பாக செய்திகளுக்கான தளமாக இருந்தால் இதற்கான ஒரு புக்மார்க் தயார் செய்து அது தானாக செய்திகளை அப்டேட் செய்திடும் வகையில் அமைக்கலாம்.
 
பயர்பொக்ஸ் டூல்பாரில் ரைட் கிளிக் செய்திடவும். "Customize" என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் அந்த ஆர்.எஸ்.எஸ்.லோகோவின் மீது அழுத்தியவாறே இழுத்து வந்து டூல்பாரில் விடவும். இப்போது எந்த தளத்திலிருந்து செய்திகள் கிடைக்க விரும்புகிறீர்களோ, அங்கு செல்லவும். பின்னர் டூல்பாரில் உள்ள பட்டனை கிளிக் செய்திடவும்.
 
இதில் புக்மார்க் செய்த பெயரை என்டர் செய்திடவும். பின்னர் Add என்பதில் கிளிக் செய்திடவும். இனி செய்திகள் தாமாக அப்டேட் செய்யப்பட்டு உங்களுக்குக் கிடைக்கும்.
 
4. விரல் நுனியில் செட்டிங்ஸ்: இணைய உலாவிற்குத் தாங்கள் பயன்படுத்தும் பிரவுசர்களில் அனைவரும் நமக்கான செட்டிங்ஸ் சிலவற்றை ஏற்படுத்தியிருப்போம். இதனால் மற்ற கணணிகளில் பிரவுஸ் செய்திடுகையில் தடுமாற்றம் ஏற்படலாம். புக்மார்க்குகள் இருக்காது; சில தீம் செட்டிங்ஸ் கிடைக்காது.
 
பயர்பொக்ஸ் இதற்கான வழி ஒன்றைத் தருகிறது. இந்த பிரவுசர் செட்டிங்ஸ்களுடன் பயர்பொக்ஸ் பிரவுசரை, ஒரு யு.எஸ்.பி. பிளாஷ்ட்ரைவில் பதிந்து கொள்ளலாம். அந்த ட்ரைவினை புதிய கணணியில் இணைத்து இயக்கலாம். எந்த பிரச்னையுமின்றி வேகமாக பிரவுஸ் செய்திட இது உதவும்.
 
5. கீபோர்ட் ஷார்ட்கட் தொகுப்புகள்: பயர்பொக்ஸ் பிரவுசர் அனைத்து செயல்பாடுகளுக்கும் ஷார்ட்கட் கீ தொகுப்புகளை அனுமதிக்கிறது. இந்த ஷார்ட்கட் கீ தொகுப்புகள் அனைத்தும் முழுமையாக http://support.mozilla.com/en-US/kb/Keyboard%20shortcuts?s=keyboard+shortcuts&r=0&as=s என்ற முகவரியில் மொஸில்லா தந்துள்ளது. இவற்றைப் பதிந்து வைத்துப் படித்துப் பார்த்து பயன்படுத்தவும்.
 
                                                                              

விண்டோஸ் 8 ஒரு பார்வை

மைக்ரோசாப்ட் தன் அடுத்த ஓபரேட்டிங் சிஸ்டம் தயாரிப்பில் மிக வேகமாக ஈடுபட்டு வருகிறது. பல வலைமனைகளில் இதன் கட்டமைப்பு குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Building Windows 8 என்ற வலைமனையில் பல தகவல்கள் கிடைக்கின்றன.

விண்டோஸ் 95 சிஸ்டம் வந்த பின் பெரிய அளவிலான மாறுதல்களுடன் வர இருப்பது இந்த புதிய ஓபரேட்டிங் சிஸ்டமாகும். விண்டோஸ் 95 வெளியான போது டெஸ்க்டொப் கணணி பயன்பாடு தான் உச்சத்தில் இருந்தது.
 
மடிக்கணணிகள் சாதரண மக்கள் வாங்கிப் பயன்படுத்த முடியாத விலையில் அனைத்து நாடுகளிலும் இருந்தன. 
 
இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. நுகர்வோர் தொழில்நுட்ப ரீதியில் சிறப்பான இயக்கத்தினை அனைத்து சாதனங்களிலும் எதிர்பார்க்கின்றனர்.
 
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் மற்றும் ஐபேட் சாதனங்களில் உள்ள வசதிகளை பெர்சனல் கணணிகளிலும் எதிர்பார்க்கின்றனர். அந்த வகையிலான எதிர்பார்ப்புகளைச் சந்திக்கும் வகையில் விண்டோஸ் 8 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
எனவே புதிய தொடுதிரை தொழில்நுட்பம் கொண்டதாகவும், வழக்கமான பயன்பாடும் இணைந்ததாகவும் விண்டோஸ் 8 அமையும். இந்த சிஸ்டம் ஏ.ஆர்.எம். மற்றும் இன்டெல் சிப்கள் என இரண்டு வகை ப்ராசசர்களில் இயங்கும்.
 
தற்போது மைக்ரோசாப்ட் தரும் ஆன்லைன் வசதிகளான ஸ்கை ட்ரைவ், ஆபீஸ் 365 மற்றும் இலவச ஆபீஸ் இணைய அப்ளிகேஷன்களை ஒருங்கிணைப்பதாக அமையும். மற்ற சிறப்பு அம்சங்களாக, யு.எஸ்.பி.3 சப்போர்ட் மற்றும் மாற்றி அமைக்கப்பட்ட விண்டோஸ் எக்ஸ்புளோரர் தொகுப்பினைக் கூறலாம்.
 
தொடுதிரை வசதிக்கென பெரிய அளவிலான பேனல்களை விண்டோஸ் 8 திரையில் காட்டும். இதனை மவுஸ் கொண்டும் இயக்கலாம். வழக்கமான ஸ்டார்ட் பட்டன், டாஸ்க் பார் மற்றும் டெஸ்க்டொப் வகையறாவும் இதில் கிடைக்கும். தொடுதிரை தருவதன் மூலம் இப்போது வரும் டேப்ளட் பிசிக்களுடன், விண்டோஸ் போட்டியிட முடியும்.
 
மேலும் தன்னுடன் ஒப்பந்தம் கொண்டுள்ள சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு, மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 8 சிஸ்டத்தின் கட்டமைப்பினை வழங்கியுள்ளது. அவர்களும் தொடுதிரை அமைப்பில் இயங்கக் கூடிய அப்ளிகேஷன் புரோகிராம்களைத் தயாரித்து வருகின்றன.
 
விண்டோஸ் எக்ஸ்புளோரரின் செயல்பாட்டில் அதிகக் கவனம் விண்டோஸ் 8 தொகுப்பில் காட்டப்படுகிறது. கொப்பி, மூவ், ரீ நேம், டெலீட் எனப் பல செயல்பாடுகளை நாம் அடிக்கடி இதில் மேற்கொள்கிறோம். இந்த ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு விண்டோவினை இதுவரை ஓபரேட்டிங் சிஸ்டம் தந்து வந்தது.
 
விண்டோஸ் 8 தொகுப்பில் இவை அனைத்தும் ஒரே விண்டோவில் இருக்கும். இதன் மூலம் பெரிய கோப்புகள், குறிப்பாக வீடியோ மற்றும் புகைப்பட கோப்புகளை எளிதாக ஒரே இடத்தில் கையாள முடியும். கோப்புகள் கொப்பி செய்யப்படும் போதும், நகர்த்தப்படும் போதும், எவ்வளவு பிட் டேட்டா மாற்றப்பட்டுள்ளது என வரைபடம் மூலம் தெரிய வரும்.
 
விண்டோஸ் விஸ்டாவில் தரப்பட்ட ரிப்பன் இன்டர்பேஸ் இதில் தரப்படுகிறது. இதன் மூலம் கோப்புகளை கையாள்வது எளிதாக இருக்கும் என்று தெரிகிறது. எக்ஸ்புளோரர் விண்டோவில் மூன்று டேப்கள் முக்கியமானதாக இடம் பெறும். அவை ஹோம், ஷேர் மற்றும் வியூ(Home, Share and View) ஆகும். இடது புறம் கோப்பு மெனு கிடைக்கும். ஹோம் டேப்பில், விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் மேற்கொள்ளப்படும் 84% செயல்களுக்கான கட்டளைகள் கிடைக்கும்.
 
ஒரு கோப்பை அதன் டைரக்டரிக்கான வழியுடன் கொப்பி செய்வதற்கு "Copy path" என்னும் கட்டளை இதில் தரப்படுகிறது. இந்த கட்டளையுடன் கோப்பு ஒன்றை இன்னொரு எக்ஸ்புளோரர் விண்டோவில் கொப்பி செய்யப்படுகையில் கோப்பை அணுகுவது எளிதாகிறது.ஷேர் என்னும் டேப்பின் கீழ் மின்னஞ்சல் மற்றும் ஸிப் கட்டளைகள் கிடைக்கின்றன. பர்ன் டு டிஸ்க் (Burn to Disc), பிரிண்ட் மற்றும் பேக்ஸ் ஆகியவையும் இதில் உள்ளன.
 
புதிய கோப்பு மெனு மூலம் கமாண்ட் ப்ராம்ப்ட் கிடைக்கிறது. இன்னொரு எக்ஸ்புளோரர் விண்டோ மூலம், ஹார்ட் ட்ரைவினை பார்மட், ஆப்டிமைஸ், கிளீன் அப் போன்ற செயல்களை மேற்கொள்ளலாம். பிளாஷ் ட்ரைவ் ஒன்றை வெளியில் எடுக்க ஆட்டோ பிளே இயக்க இங்கு கட்டளையிடலாம்.இன்னும் தொடர்ந்து பல புதிய கட்டளைகளையும் வசதிகளையும் உள்ளடக்கியதாக விண்டோஸ் 8 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.