இணையத்தில் இவரிடம் இலவசமாக எதையும் கேட்கலாம்.

இனி நீங்கள் தனியே முடிவெடுக்க வேண்டியதில்லை, மாறாக உங்கள் கூட்டத்திடம் ஆலோசனை கேட்டு கூட்டு முடிவெடுங்கள் என்று அழைப்பு விடுக்கிறது என்கிறது ஆஸ்க் மை மாப்.இதுவும் டிரைசைடர் போல முடிவெடுக்க ஆலோசனை கேட்கும் இணையதளம் தான். 

வடிவமைப்பு தவிர நோக்கத்திலும் உள்ளடக்கத்திலும் டிரைசைடருக்கு இதற்கும் அடிப்படையில் பெரிய வேறுபாடில்லை.

டிரைசைடர் போல இதிலும் ஆலோசனை தேவைப்படும் கேள்வியை டைப் செய்து பேஸ்புக் மற்றும் டிவிட்டர் நண்பர்களை கருத்து சொல்ல அழைக்கலாம். கேள்விகள் சிறு தடுமாற்றத்திலிருந்து மாபெரும் குழப்பம் வரை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
 
என்ன புத்தகம் படிக்கலாம் என்பதில் துவங்கி யாரை கல்யாணம் செய்து கொள்ளலாம் என்னும் வாழ்க்கையை தீர்மானிக்கும் கேள்வியாகவும் இருக்கலாம்.
 
உண்மையிலேயே குழப்பத்தில் தடுமாறி யாராவது சரியான யோசனை சொல்லி வழிகாட்ட மாட்டார்களா என்னும் கேள்வியையும் கேட்கலாம். இல்லை மற்றவர்கள் என்ன தான நினைக்கின்றனர் பார்க்கலாம் என்னும் நோக்கத்திலான கேள்வியையும் கேட்கலாம்.
 
கேள்வியை கேட்டவுடன் அதற்கு நீங்கள் தீர்வாக கருதும் எண்ணங்களையும்(முடிவுகள்)குறிப்பிடலாம். நண்பர்கள் இந்த கேள்வியை படித்து விட்டு தங்களுக்கு எது சரியென படுகிறதோ அதில் வாக்களிப்பார்கள். எந்த முடிவுக்கு அதிக வாக்குகள் கிடைக்கிறதோ அதனை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
 
நண்பர்கள் முடிவுகளுக்கு ஆதரவு தெரிவிப்பதோடு தங்கள் யோசனைகளையும் தெரிவிக்கலாம். இந்த யோசனைகள் திறந்த மனதோடு நண்பர்களோடு ஒரு விஷயம் குறித்து கலந்துரையாடி தெளிவு பெறுவது போலவும் அமையலாம்.
 
சில நேரங்களில் நண்பர்களின் கருத்து முற்றிலும் புதிய கோணத்தை சுட்டிக்காட்டலாம்.புதிய வாசலை திறந்து விடலாம்.
 
ஆனால் நண்பர்களை ஒன்று திரட்டி ஆலோசனை நடத்துவது நடைமுறையில் மிகவும் சிக்கலானது. ஆஸ்க் மை மாப் சேவையோ இருந்த இடத்திலிருந்தே நண்பர்களுடன் கலந்தாலோசனை செய்ய உதவுகிறது.
 
இதுவா அதுவா என முடிவெடுக்க முடியாமல் தடுமாறும் போது, நடுநிலையான கருத்துக்கள் தேவைப்படும் போது, நேர்மையான யோசனைகள் உடனடியாக தேவைப்படும் போது என எப்போது வேண்டுமானாலும் இங்கு ஆலோசனை கேட்கலாம்.
 
டிரைசைடரில் பதிவு செய்யாமலேயே ஆலோசனை கேட்கலாம். இதில் முதலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்து கொண்ட பின் அவருக்கென்று தனி பக்கம் ஒதுக்கப்படும். அதில் கேள்விகளுக்கான ஆலோசனைகளை பார்க்கலாம். வாக்குகளை தெரிந்து கொள்ளலாம்.
 
நண்பர்களிடம் ஆலோசனை கேட்பது போலவே நீங்களும் நண்பர்களின் தடுமாற்றத்திற்கு யோசனை சொல்லலாம். டிவிட்டரில் செய்வது போல உங்களுக்கு ஆர்வம் உள்ள கேள்விகளை பின்தொடரலாம். பின்தொடரப்படும் கேள்விகளுக்கான சமீபத்திய யோசனைகளை உங்கள் பக்கத்திலேயே தெரிந்து கொள்ள முடியும்.
 
உண்மையிலேயே இந்த பின்தொடரல் சுவாரஸ்யமான விஷயம். உங்களை பாதித்த ஒரு கேள்விக்கு மற்றவர்கள் என்ன பதில் சொல்கின்றனர் என்று அறிய முடிவதும், ஈடுப்பாட்டை ஏற்படுத்தும் பிரச்ச்னை எப்படி முடிவுக்கு வருகீறது என்று தெரிந்து கொள்வதும் உயிரோட்டமானது தான்.ஆர்வத்தை உண்டாக்கிய ஒரு கேள்வி எத்தகைய விவாத்தை உண்டாக்கி அதற்கான் தீர்வு எப்படி கருக்கொள்கிறது என்பது புதிய வெளிச்சத்தை பாய்ச்சலாம்.
 
ஆனால் இப்போதைக்கு இத்தகைய தீவிர விவாதம் நடப்பதாக தெரியவில்லை. ஆஸ்க் மை மாபில் கேட்கப்படும் கேள்விகளில் பல விளையாட்டுத்தனமாக இருக்கின்றன. சில வில்லங்கமாகவும் இருக்கின்றன. கேள்விகளை சுற்றி இதயபூர்வமான விவாதம் நடப்பதாகவும் தெரியவில்லை.அறிமுக நிலையில் இருப்பதால் இவ்வாறு இருப்பாதாக கொள்ளலாம். இந்த தளத்திற்கு என்று மனம் திறந்து கேட்கவும் உள்ளன்போடு பதில் சொல்லக்கூடிய ஒரு துடிப்புள்ள சமூகமும் உருவானால் பல அற்புதங்கள் நிகழ வாய்ப்புள்ளது.
 
அதற்கான ஈர்ப்பு இந்த தளத்திடம் உள்ளது.ஆனால் அத்தகைய ஆதரவு கிடைக்கும் வரை இந்த தளம் தாக்குபிடிக்க வேண்டும். இணையதள வடிவில் மட்டும் அல்லாது செல்போன் செயலி வழி வழியிலும் இந்த சேவையை அணுகலாம்.
 

2 comments:

stalin wesley said...

எனக்கு ஒரு ரூ.பத்தாயிரம் வேணும் .............


நெருப்பு நரி உலாவியின் ஜாலங்கள்

stalin wesley said...

சார் கமெண்ட் பாக்ஸ்-ல வோர்ட் வேரிபிகேசன் எடுத்து விடுங்க .............


பகிர்வுக்கு நன்றி ...........



<a href="http://wesmob.blogspot.com/2011/09/face-book-gmail-twitter-orkut-multiple.html>பேஸ் புக் ,ஜிமெயில், டுவிட்டர் - ஒரே உலாவியில் ஒன்றுக்கும் மேற்பட்ட லாகின்</a>

Post a Comment