இணைய உலகில் மக்களால் அதிகளவு பயன்படுத்தப்படும் இன்டர்நெட் பிரவுசராக பயர்பொக்ஸ் இடம் பிடித்து வருகிறது.
இதன் வேகம், அடிக்கடி மேம்படுத்தப்படும் செயல்பாடு,
அதிகமான எண்ணிக்கையில் வேகம் தரும் எளிய ஆட் ஆன் தொகுப்புகள், ஓப்பன் சோர்ஸ் முறை எனப் பல அம்சங்கள் இதனைப் பெரும்பாலான மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளன.
இவை மட்டுமின்றி பயர்பொக்ஸ் பிரவுசரிலேயே பல பயன்தரும் செயல்பாடுகள் தரப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
1. தேடல்களை சுருக்குச் சொற்கள் மூலம் மேற்கொள்ள: பயர்பொக்ஸ் பிரவுசரின் அட்ரஸ் கட்டத்திலேயே சொற்களைக் கொடுத்து ஓர் இணைய தளத்தில் அந்த சொல் எங்கிருக்கிறது என்று தேடலாம்.
எடுத்துக்காட்டாக அமேஸான் டாட் காம்(Amazon.com) தளத்தில் டச்பேட்(TouchPad) என்ற சொல் எங்கெல்லாம் வருகிறது என்று தேட பயர்பொக்ஸ் பாரில் "amazon touchpad" என டைப் செய்து என்டர் தட்டினால் போதும்.
இதற்கான செட்டிங்ஸ் எப்படி அமைப்பது எனப் பார்ப்போம். முதலில் அந்த இணைய தளம் சென்று அதில் உள்ள சர்ச் பாக்ஸைக் கண்டறியவும். பின்னர் அந்த சர்ச் கட்டத்தில் ரைட் கிளிக் செய்திடவும்.
கிடைக்கும் மெனுவில் "Add Keyword for this search" என்றிருப்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதற்கான புக்மார்க் மற்றும் கீ வேர்ட் கேட்கப்படும். கீ வேர்ட் உருவாக்கி அதனை ஒரு புதிய போல்டரில் சேவ் செய்திடவும்.
இப்போது உங்கள் கீ வேர்ட் தயாராய் உள்ளது. இதனை மேலே கூறியபடி பயர்பொக்ஸ் அட்ரஸ் கட்டத்தில் கொடுத்து என்டர் செய்திட குறிப்பிட்ட தளத்தில் தரப்பட்டுள்ள சொற்கள் தேடிக் காட்டப்படும்.
2. பல தளங்களுடன் திறப்பு: வழக்கமாக நாம் அடிக்கடி கட்டாயமாக முதல் தளமாகப் பார்க்க விரும்பும் இணைய தளத்தினை நம் ஹோம் பேஜாக வைத்திருப்போம்.
உங்களுக்கு இன்னும் சில தளங்களும், பிரவுசர் திறந்திடும் போதே தேவை எனில் என்ன செய்வீர்கள்? பயர்பொக்ஸ் அதற்கான வழியினைக் கொண்டுள்ளது.
பிரவுசரை இயக்கி Options > General எனச் செல்லவும். பின்னர் ஹோம் பேஜ்(home page) பீல்டில் நீங்கள் ஒரே நேரத்தில் திறக்கப்பட வேண்டிய தளங்களின் முகவரிகளை டைப் செய்திடவும். ஒரு முகவரிக்கும் மற்றொன்றுக்கும் இடையே பைப் அடையாளம் டைப் செய்திடவும்.
3. ஆர்.எஸ்.எஸ். மேம்படுத்துதல்: நீங்கள் அடிக்கடி இணையதளம் ஒன்றைப் பார்வையிடுபவராக இருந்தால் குறிப்பாக செய்திகளுக்கான தளமாக இருந்தால் இதற்கான ஒரு புக்மார்க் தயார் செய்து அது தானாக செய்திகளை அப்டேட் செய்திடும் வகையில் அமைக்கலாம்.
பயர்பொக்ஸ் டூல்பாரில் ரைட் கிளிக் செய்திடவும். "Customize" என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் அந்த ஆர்.எஸ்.எஸ்.லோகோவின் மீது அழுத்தியவாறே இழுத்து வந்து டூல்பாரில் விடவும். இப்போது எந்த தளத்திலிருந்து செய்திகள் கிடைக்க விரும்புகிறீர்களோ, அங்கு செல்லவும். பின்னர் டூல்பாரில் உள்ள பட்டனை கிளிக் செய்திடவும்.
இதில் புக்மார்க் செய்த பெயரை என்டர் செய்திடவும். பின்னர் Add என்பதில் கிளிக் செய்திடவும். இனி செய்திகள் தாமாக அப்டேட் செய்யப்பட்டு உங்களுக்குக் கிடைக்கும்.
4. விரல் நுனியில் செட்டிங்ஸ்: இணைய உலாவிற்குத் தாங்கள் பயன்படுத்தும் பிரவுசர்களில் அனைவரும் நமக்கான செட்டிங்ஸ் சிலவற்றை ஏற்படுத்தியிருப்போம். இதனால் மற்ற கணணிகளில் பிரவுஸ் செய்திடுகையில் தடுமாற்றம் ஏற்படலாம். புக்மார்க்குகள் இருக்காது; சில தீம் செட்டிங்ஸ் கிடைக்காது.
பயர்பொக்ஸ் இதற்கான வழி ஒன்றைத் தருகிறது. இந்த பிரவுசர் செட்டிங்ஸ்களுடன் பயர்பொக்ஸ் பிரவுசரை, ஒரு யு.எஸ்.பி. பிளாஷ்ட்ரைவில் பதிந்து கொள்ளலாம். அந்த ட்ரைவினை புதிய கணணியில் இணைத்து இயக்கலாம். எந்த பிரச்னையுமின்றி வேகமாக பிரவுஸ் செய்திட இது உதவும்.
5. கீபோர்ட் ஷார்ட்கட் தொகுப்புகள்: பயர்பொக்ஸ் பிரவுசர் அனைத்து செயல்பாடுகளுக்கும் ஷார்ட்கட் கீ தொகுப்புகளை அனுமதிக்கிறது. இந்த ஷார்ட்கட் கீ தொகுப்புகள் அனைத்தும் முழுமையாக http://support.mozilla.com/en-US/kb/Keyboard%20shortcuts?s=keyboard+shortcuts&r=0&as=s என்ற முகவரியில் மொஸில்லா தந்துள்ளது. இவற்றைப் பதிந்து வைத்துப் படித்துப் பார்த்து பயன்படுத்தவும்.
0 comments:
Post a Comment