Channel 4 நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை: கோத்தபாய கோரிக்கை

கொழும்பு, ஜூலை.29: பொறுப்பற்ற விடியோ காட்சிகளை ஒளிபரப்புவது தொடர்பில் பிரிட்டன் அரசு சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சக செயலாளர் கோத்தபாய ராஜபட்ச கோரிக்கை விடுத்துள்ளார்.கடந்த புதன்கிழமை சேனல் 4 தொலைக்காட்சி, இலங்கையில் போர்க்குற்றம் என்ற தலைப்பில் புதிய விடியோ ஒன்றை  ஒளிபரப்பியது.அதில், இறுதிப்போரின் போது சரணடைந்தவர்களை கொல்லுமாறு அப்போதைய வன்னி கட்டளையதிகாரியாக இருந்த சவேந்திர சில்வாவுக்கு கோத்தபாய உத்தரவிட்டதாக காட்சிகள் இருந்தன.

இதற்காக சவேந்திர சில்வாவுடன் பணியில் இருந்த இரண்டு ராணுவ வீரர்களின் பேட்டியை சேனல் 4 ஒளிபரப்பியது.இது முற்றிலும் பொய்யான விடியோ என்று குறிப்பிட்டுள்ள கோத்தபாய, இறுதிப்போரின் போது என்ன நடந்தது என்று சவேந்திர சில்வா அனைவருக்கும் கூறுவார். எதிர்காலத்தில் என்ன செய்யப்போகிறார் என்றும் அவர் தெரிவிப்பார் என்று குறிப்பிட்டார்.
இலங்கையில் அப்போது ஐக்கிய நாடுகளின் உறைவிடப் பிரதிநிதியாக இருந்த நீல் பூஹ்னே, யாரும் சரணடைவது குறித்து தமக்கு அறிவிக்கவில்லை.இந்தநிலையில் போரில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை எவ்வாறு கூறமுடியும் என்றும் கோத்தபாய கேள்வி எழுப்பினார்.

முல்லைத்தீவு அரசு அதிபரின் தகவல்படி 3 லட்சம் பொதுமக்கள் பதிவுசெய்யப்பட்டிருந்தனர்.போர் முடிந்த போது 294 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்திருந்தனர். தமிழீழ விடுதலைப்புலிகளில் பலர் போரின் போது கனடா மற்றும் இந்தியாவுக்கு தப்பிச்சென்றனர்.தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்படைத் தளபதியாகவிருந்த சூசை மற்றும் தமிழ்செல்வனின் குடும்பங்கள் கடல்வழியாகத் தப்பிச்செல்லும் போது கைதுசெய்யப்பட்டனர்.

சூசை பல கடற்படையினரின் கொலைகளுக்கு பொறுப்பு என்ற அடிப்படையில் தாம், அவர்களை கொன்றிருக்கலாம். ஆனால் அவர்களின் குடும்பத்தினரை இலங்கை அரசாங்கம் இன்றும் பாதுகாக்கிறது.பிரபாகரனின் பெற்றோரை இலங்கை அரசாங்கம் உரியமுறையில் பராமரித்தது.சரணடைந்த 11,000 தற்கொலையாளிகள் மற்றும் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டனர்.தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினரான பெண் ஒருவரை, 200,000 பொதுமக்கள் மத்தியில் இருந்து படையினர் காப்பாற்றியதை முந்தைய விடியோ காட்சிகள் நிரூபித்துள்ளதாகவும் கோத்தபாய தெரிவித்தார். 

Source by : Dinamani 

0 comments:

Post a Comment