OMG உயிரணுக்களை பாதிக்கும் Laptop !

ஆடம் ஆஸ்பார்ன் (Adam Osborne) என்பவரால் 1981 ஆம் ஆண்டு மடிக் கணினி கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் மிக கனமாயிருந்து, தற்பொழுது ஒன்றிலிருந்து 1.50 கிலோவிற்குள் வெவ்வேறு மாடல்களில் கிடைக்கிறது.

இன்றைய கணினி யுகத்தில் அலுவலகம் செல்வோரும், கல்லூரி மாணவ மாணவிகளும், வியாபார இடங்களிலும் ஆண்களாலும், பெண்களாலும் கணினியும், மடிக் கணினியும் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. ஆண்களும், பெண்களும் மடிக் கணினியை மடியில் வைத்து தொடர்ந்து பல மணி நேரம், பல நாட்கள் பயன்படுத்துவதால் அவர்களையறியாமல் பாதிக்கப்படுகின்றனர்.

பெண்களை விட ஆண்கள் பெருமளவில் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. பொதுவாக ஆண்கள் உட்காரும்பொழுது கால்களை சற்று அகலமாக விரித்து உட்காருவது வழக்கம்.
இது அவர்களின் விதைப் பையையும், (Scrotum and Testicles) விதைக் காய்களையும் தகுந்த வெப்பத்தில் இருக்க உதவுகிறது. மடிக் கணினி உபயோகப்படுத்தும் போது கால்களை சற்று நெருக்கமாக வைத்து கணினியைத் தாங்கி பிடிப்பதால் கால்களுக்கிடையில் வெப்பம் அதிகமாக செல்கிறது.

இது விதைப்பையின் வெப்பத்தை வழக்கத்தைவிட சுமார் 2.7 டிகிரி சென்டிகிரேட் அதிகமாக்குகிறது. இதனால் குழந்தை பெறும் தகுதியுள்ள ஆண்களுக்கு உயிரணுக்களின் (Sperm Count) எண்ணிக்கை 10 வருடங்களில் மூன்றில் ஒரு பங்கு குறைய வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.

நீண்ட நாட்கள் மடிக் கணினியை மடியில் வைத்துப் பயன்படுத்துபவர்களுக்கு தொடையின் முன் நடுப்பகுதியில் தோலிலும் அதன் அடியிலும் மாற்றம் ஏற்படுகிறது.

மடிக் கணினி உபயோகிக்கும் போது இதன் அடிப்பாகத்தில் பேட்டரியினால் அல்லது மின்சாரத்தினால் இளஞ்சூடு உண்டாகிறது. இதனால் தோலுக்கு அடியில் உள்ள சிறு ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, தோல் சில நாட்களில் சிவந்தும், சிறு சிறு சிவந்த கோடுகளாகவும் நிற மாற்றத்துடன் காணப்படுகிறது.

இது வெளி நாடுகளில் மடிக் கணினி உபயோகப்படுத்தும், இளம் பெண்களுக்கு, குறிப்பாக நாகரிக அரை டிராயர் (Half Trouser) அணிந்து வெளியே செல்பவர்களுக்கு தோல் மாற்றம் மன வருத்தத்தைத் தருகிறது. இந்த நிற மாற்றத்துடன் கூடிய, சிவந்த தோற்றத்துடனான பாதிப்புக்கு Erythema Ab Igne அல்லது Toasted Skin Syndrome என்று பெயர்.

இது நீண்ட நாட்கள் மடிக் கணினி உபயோகத்தினால் விட்டு விட்டு ஏற்பட்ட இளஞ்சூட்டினால் வரலாம். வேறு சிலருக்கு வலி நிவாரணத்திற்கு உடலின் மற்ற பாகங்களில் நீண்ட நாட்கள் தரப்படும் வெந்நீர் ஒத்தடப் பைகளின் சூட்டினாலும் அந்தந்த பகுதிகளில் இத்தகைய தோல் மாற்றங்கள் வரலாம். இந்த பாதிப்பை பாதிக்கப்பட்டவரிடம் மருத்துவரின் விசாரிப்பினாலும், பரிட்சித்துப் பார்ப்பதினாலும் கண்டறியலாம்.

எனவே, இளம் வயது பள்ளி, கல்லூரி மாணவர்களும், வேலை மற்றும் தொழில் செய்யும் அனைத்து ஆண்களும் மடியில் கணினி வைத்து பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இளம் வயது பையன்களும், இளைஞர்களும், பெண்களும் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் மடிக் கணினியை தாழ்வான மேசைகளில் வைத்து உபயோகப்படுத்தலாம்.

ஆண்கள் மடிக் கணினியின் தவறான பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய உயிரணுக்கள் குறைவுப் பிரச்னையையும், ஆண், பெண் இருபாலார்க்கும் முன் தொடைப் பகுதியில் ஏற்படக்கூடிய சிகப்பு மற்றும் தோலில் மாற்றம் ஆகியவற்றையும் தவிர்க்க மடிக் கணினியை எச்சரிக்கையாகப் பயன்படுத்துவோம்


ஆபத்தில் உதவிய Facebook !

ஆபத்தான நேரத்தில் நெருக்கடிக்கு மத்தியில் இண்டர்நெட்  பேருதவியாக அமைந்து உயிர்காத்த  சம்பவங்கள் அநேகம் இருக்கின்றன.
இந்த வகையில் அமெரிக்காவில்  மாற்றுத் திறனாளி ஒருவர் தனது வீட்டில் தீ சூழ்ந்த நிலையில் உயிர் தப்பித்த பேஸ்புக் விளையாட்டு கைகொடுத்து இருக்கிறது. சமூக வலைப் பின்னல் தளங்களின் ராஜாவாக கருதப்படும் பேஸ்புக் சேவையை  பெரும்பாலும் இளைஞர் களே பயன்படுத்தி வந்தாலும்  பெரியவர்களும் இதில் இணைந்து வருகின்றனர்.

நட்பு வட்டாரத்தை பெருக்கிக்கொள்ள, கருத்து பரிமாற்றம் செய்ய என பேஸ்புக்கை பலவிதமாக பயன் படுத்திக்கொள்ளலாம்.
பேஸ்புக்கிலேயே விளையாடக் கூடிய விளை யாட்டுக்களும் பல இருக்கின்றன. மிகவும் பிரபலமாக இருக்கும் பாம் வில்லே  தவிர வேறு பல விளை யாட்டுக்களும் இருக்கின்றன. இந்த விளையாட்டுக்களில் ஒன்று தான் அமெரிக்காவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான பாப் சேம்பர்சின் உயிரை காப்பாற்றி இருக்கிறது.

சேம்பர்சுக்கு 51 வயதாகிறது. அவர் ஸ்போக்கனே எனும் சிறிய நகரில் வசித்து வருகிறார். தசை தொடர்பான நோயினால் பாதிக்கப்பட்டதால்  சேம்பர்சால் மற்றவர்களைப் போல தனது கை, கால்களை எல்லாம் எளிதாக அசைக்க முடியாது. தானாக நகர்ந்து செல்வது கூட அவருக்கு மிகவும் கடினமானது.

இத்தகைய பாதிப்பு இருந்தாலும் சேம்பர்ஸ் உற்சாகம் குறைந்து விடாமல் இருந்து வருகிறார். கம்ப்யூட்டர் பயன்பாட்டிலும் அவருக்கு ஆர்வம் அதிகம்.  அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட பிரத்யேக மவுஸ் சாதனத்தைக் கொண்டு அவர் கம்ப்யூட்டரை இயக்கி வருகிறார்.
பேஸ்புக்கிலும் உறுப்பினராக இருக்கும் அவர் பேஸ்புக் விளை யாட்டிலும் ஈடுபாடு கொண்டவராக இருக்கிறார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேஸ்புக் விளையாட்டில் லயத்திருப்பது அவரது வழக்கம். சமீபத்தில் இப்படித்தான் அவர் பேஸ்புக் விளையாட்டில் மூழ்கி இருந்தபோது திடீரென அவரது அறையில் தீப்பிடிக்க தொடங்கியது. அவரது மனைவி டோஸ்ட் சாதனத்தை அணைக்காமல் சென்று விட்டதின் காரணமாக தீ பிடித்துக் கொண்டது. தீ மெதுவாக  பரவத் தொடங்கியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டாலும் சேம்பர்சால் விலகிச்செல்லவும் முடியவில்லை.தொலைபேசிமூலமும் தொடர்புகொள்ள முடியவில்லை. தொலைபேசி அந்த அறையில் சற்று தொலைவில்இருந்ததால் அவரால் தொலைபேசியை பயன்படுத்த முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டது.

தீ பரவிக்கொண்டிருந்த நிலையில் சேம்பர்ஸ் அதன் நடுவே சிக்கிக் கொண்டது சோதனையிலும் சோதனை என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த நெருக்கடியிலும் அவர் நிலை குலையாமல்  தொழில்நுட்பத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து பேஸ்புக் மூலம் தனது நிலையை தெரிவித்தார். அவர் ஈடுபட்டிருந்த பேஸ்புக் விளையாட்டில் சக உறுப்பினர்களோடு அரட்டை அடிக்கும் வசதி உண்டு.


சேம்பர்ஸ் அந்த வசதியை பயன்படுத்தி தனது அறையில்  தீ பிடித்துக் கொண்டிருப்பதாகவும் தன்னால் நகர முடியாததால் யாராவது இது பற்றி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு கூறி தனது முகவரியையும் குறிப்பிட்டிருந்தார்.
சகல உறுப்பினர்கள் யாராவது இந்த செய்தியை படித்துப் பார்த்து விட்டு உதவிக்கு வருவார்கள் என்பது அவருடைய நம்பிக்கை.
அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. இண்டியானா நகரில் இருந்த ஒரு பெண்மணி மற்றும் டெக்சாஸ் நகரில் இருந்த  ஒருவர் இந்த செய்தியை பார்த்து விட்டு உடனடியாக அவசர உதவி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து ஸ்போக்னே நகர நிர்வாகம், சேம்பர்ஸ் வீட்டிற்கு தீயணைப்பு வீரர்களை அனுப்பி வைத்தது.
சேம்பர்ஸ் தான் ஆபத்தில் இருப்பதாக காலை 8.35 மணி அளவில் தகவல் தெரிவித்திருந்தார். அடுத்த 10வது நிமிடத்தில் தீயணைப்பு வீரர்கள் அவரது வீட்டிற்கு வந்து தீயை கட்டுப்படுத்தி அவரை காப்பாற்றினர்.
பேஸ்புக் உறுப்பினர்கள் மட்டும் சரியான நேரத்தில் உதவிக்கு வந்திருக்காவிட்டால் தன்னுடைய நிலை மிகவும் மோசமாகி இருக்கும் என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிடுகிறார்.
அவரது மனைவியும் கூட பேஸ்புக்கை மனதார பாராட்டி உள்ளார். பேஸ்புக் விளையாட்டின் மீது அவருக்கு மிகுந்த வெறுப்பு உண்டாம். காரணம் அந்த விளையாட்டில் மூழ்கிவிட்டால் சேம்பர்ஸ் எதைக் கேடடாலும் காதில் வாங்கிக்கொள்ள மாட்டாராம்.


இருப்பினும் அந்த விளையாட்டுத் தான் தனது கணவரின் உயிரை காப்பாற்றி இருப்பதால் இப்போது அந்த வெறுப்பு மறைந்து விட்டதாக அவர் கூறியுள்ளார்.
நவீன தொழில்நுட்பம் அன்றாட வாழ்க்கையில் நீக்கமற நிறைந்திருப்பதோடு ஆபத்து நேரத்தில் கை கொடுக்கிறது என்பதற்கான மற்றொரு உதாரணமாக  இந்த சம்பவம் அமைந்துள்ளது.



இணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்

இரட்டிப்பு ஆனந்தம் என்பார்களோ அப்படி ஒரு ஆனந்தத்தை புத்தக பிரியர்களுக்கு தரக்கூடிய இணையதளமாக ரீட்எனிபுக் தளத்தை சொல்லலாம்.பெய‌ருக்கேற்ப‌ எந்த‌ புத்த‌க‌த்தையும் ப‌டிக்க‌ வ‌ழி செய்கிற‌து இந்த‌ த‌ள‌ம்.அதிலும் மிக‌வும் சுல‌ப‌மாக‌,இபுக்காக‌. 

புத்த‌க‌ பிரிய‌ர்க‌ளுக்காக‌ என்று பிர‌த்யேக‌ இணைய‌த‌ள‌ங்க‌ள் ப‌ல‌ இருக்கின்ற‌ன‌.வெறும்னே புத்த‌க‌ங்க‌ளை ப‌ட்டிய‌லிடாமல் ர‌ச‌னையின் அடிப்ப‌டையில் ந‌ம‌க்கு பிடிக்க‌ கூடிய‌ புதிய‌ புத்த‌க‌ங்க‌ளை ப‌ரிந்துரைக்கும் அருமையான‌ த‌ள‌ங்க‌ளும் இருக்கின்ற‌ன‌.

அதே போல‌ இணைய‌த்தில் இபுக் வ‌டிவில் கிடைக்க‌ கூடிய‌ புத்த‌க‌ங்க‌ளை தேட‌ உத‌வும் த‌ள‌ங்க‌ளுமிருக்கின்ற‌ன‌.இல‌வ‌ச‌ இபுக்க‌ளை அடையாள‌ம் காட்டும் த‌ள‌ங்க‌ளையும் நீங்க‌ள் அறீந்திருக்க‌லாம்.
‘ரீட் எனி புக்’ த‌ள‌ம் இந்த‌ இர‌ண்டையுமே செய்கிற‌து.
இந்த‌ த‌ள‌த்தில் உங்க‌ளுக்கு பிடித்த‌மான‌ புத்த‌க‌த்தை தேர்வ செய்து அந்த‌ புத்த‌க‌த்தை அப்ப‌டியே இபுக்காக‌ ப‌டிக்க‌த்துவ‌ங்கி விட‌லாம்.

இத‌ற்காக‌ த‌னியே எந்த‌ சாப்ட்வேரையும் த‌ர‌விற‌க்க‌ம் செய்ய‌ வேண்டாம்.ஏன் ப‌டிக்க‌ப்போகும் புத்த‌க‌த்தை கூட‌ ட‌வுண்லோடு செய்ய‌ வேண்டாம்.புத்த‌க‌த்தை தேர்வு செய்த‌ பின் அதில் ஒரே ஒரு கிளிக் செய்தால் போதும் அந்த‌ புத்த‌க‌த்தை ப‌டிக்க‌த்துவ‌ங்கி விட‌லாம்.அத‌ற்கான‌ ரீட‌ர் அதே ப‌க்க‌த்தில் தோன்றுகிற‌து.என்வே பிர‌வுச‌ரை விட்டு வெளியே செல்ல‌வும் தேவையயில்லை.

ப‌க்க‌ங்க‌ளை திருப்புவ‌து போல‌ ஒவ்வொரு ப‌க்க‌மாக‌ கிளிக்செய்து ப‌டித்துக்கொண்டே இருக்க‌லாம்.தேவை என்றால் ரீடரை மட்ட்டும் பெரிதாகி படிக்கவும் வசதி உள்ளது. மாஜிகல் ரிய‌லிச‌ மேதை மார்குவேசின் ஒரு நூற்றாண்டு த‌னிமையில் துவ‌ங்கி எல்லா பிரிவுக‌ளிலும் புத்த‌க‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌.
புத்த‌க‌ங்க‌ள் எதிர்பார்க்க‌ கூடிய‌து போல‌ தனித்த‌னி த‌லைப்புக‌ளின் கீழ் தொகுக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.
ப‌ட்டிய‌லை கூட‌ பார்க்க‌ வேண்டாம் நமக்கு தேவையான‌ புத்த‌க‌த‌தை குறிப்பிட்டு தேட‌வும் முடியும்.அதே போல‌ ம‌ற்ற‌வ்ர்க‌ள் ப‌டிக்கும் புத்த‌க‌ங்க‌ளையும் ஒரு பார்வை பார்த்து எல்லோரும் ப‌டிப்ப‌தை ப‌டித்து பார்க்க‌லாம்.

ஒவ்வொரு புத்த‌க‌ம் ப‌ற்றீய‌ சுருக்க‌மான அறிமுக‌த்தோடு அவ‌ற்றின் வ‌கை குறிப்பிட‌ப்ப‌ட்டு அத்தியாய‌ம் அத்தியாமாக‌ ரிட‌ரில் புத‌த்க‌ம் விரிவ‌து புத்த‌க‌ பிரிய‌ர்க‌ளுக்கு உண‌மையிலேயே ப‌ர‌வ‌ச‌ம‌ன‌ அனுப‌வ‌ம்.ந‌ல்ல‌ புத்த‌க‌ம் என்றால் ஒரே மூச்சில் கூட‌ வாசித்து விட‌லாம்.புதிய‌ புத்த‌க‌ம் என்றால் எப்ப‌டி இருக்கிற‌து என் சில‌ ப‌க்க‌ங்க‌ளை புர‌ட்டி பார்க்க‌லாம்.

புத்த‌க‌ங்க‌ளை ட‌வுண்லோடு செய்வ‌தும் அவ‌ற்றின் கோப்பு அள‌வும் சோத‌னையாக‌ அமைய‌லாம் என்னும் போது ஒரே ப‌க்க‌த்திலேயே ஒரே கிளிக்கிலேயே புத்தக‌த்தை ப‌டிக்க‌த்துவ‌ங்கி விட‌லாம் என்ப‌து உண்மையிலேயே பாராட்ட‌ வேண்டிய‌ விஷ‌ய‌ம் தான்.
புத்தக‌ பிரிய‌ர்க‌ளை இந்த‌ த‌ள‌ம் நிச்ச‌ய‌ம் க‌வ‌ரும்.தங்க‌ள் அபிமான‌ த‌ள‌மாக‌ இத‌னை குறித்து கொள்ள‌லாம்.
அப்ப‌டியே இந்த‌ த‌ள‌த்தில் இன்னும் இட‌ம் பெறாத‌ புத்தக‌த்தை சேர்க்க‌ சொல்லி ப‌ரிந்துரைக்க‌லாம்.

http://www.readanybook.com/

விஜய் துரோகியா? - ஒரு ரசிகனின் குமுறல்!

விஜய் ராஜபக்ஷேவுக்கு எதிராக கையெழுத்திட மறுத்ததால் அவர் துரோகியா என்று சிலர் கேள்வி எழுப்பியிருந்தார்கள்! 
இது பற்றி நடிகர் விஜயின் தீவிர ரசிகர் ஒருவர் தனது உள்ளக் குமுறலை என்னிடம் கொட்டியிருந்தார்! அதில் ஒரு பகுதியை அப்படியே.. 
கடந்த காலத்தில் அதாவது காவலன் வந்த காலத்தில் அண்ணன் டாக்டர் விஜய் ஈழத்தமிழருக்கு ஆதரவா கொந்தளித்து குரல் கொடுத்தது உண்மைதான்! அப்போது கூட சிலர், விஜய் தனது சுயநலத்திற்காக அப்படிச்செய்கிறார் என அறிவுகெட்டதனமாக அண்ணனின் இதயசுத்தியை, நேர்மையைச் சந்தேகித்தார்கள்!  
அவர்கள் இப்போது வேலாயுதம் படம் ரிலீசாவதால் இந்த நேரத்தில் எதையாவது பண்ணினால் படம் இலங்கையில் தடை செய்யப்பட்டு விடுமென்பதால் அண்ணன் பம்முவதாகவும் கூறுகிறார்கள். சிரிப்புத்தான் வருகிறது இவர்களைப் பார்த்தால்! என்ன ஒரு அறியாமை!

அவர்களுக்காக நான் ஒன்றைக் கூறிக்கொள்கிறேன்!

அண்ணன் தனது இடைவிடாத நற்பணிகளுக்கு மத்தியிலும் இலங்கையை உலக வரைபடத்திலிருந்து தூக்கி விடுவதாக அண்ணன் விட்ட சவால் உங்களுக்கு நினைவிருக்கா?அண்ணனே மறந்திருந்தாலும் நாங்க மறக்கமாட்டோம்! அண்ணனின் அந்தப் பேச்சால் அண்ணனின் எத்தனை ரசிகர்கள் இலங்கையைவிட்டே அவசரமா வெளிநாடுகளுக்கு ஓடினார்கள், எத்தனை பேர் இன்னும் பீதியுடன் இங்கே வாழ்கிறார்கள் என்று தெரியுமா?

இந்த சம்பவத்திற்குப் பிறகு சர்வதேசமே அண்ணனின் நடவடிக்கைகளை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் இந்தக்கையெழுத்து எவ்வளவு தீவிரமான விளைவை ஏற்படுத்தும் என்பதை ஏன் இவர்கள் புரிந்த கொள்ள மறுக்கிறார்கள்? 

அவரது பேச்சில் பாதி புரியாததால் அதில் நியாயமிருப்பதாகவே தோன்றியது!

இந்த விஷயத்தில், 'சரியாகப் புரிந்துகொள்ள முடியாத கருத்துக்கள் பெரும்பாலும் நியாயமானவையாகவே இருக்கின்றன' என்ற ஜியோக்கியூட்ரசின் (கி.மு.781 - 827) வார்த்தைகளை நான் நம்புகிறேன்!

நான் சில பதிவுகளில் டாக்டர் விஜயை கலாய்த்ததாக வருத்தப்பட்டார்கள் சில நண்பர்கள்! இனி அப்படி நடந்து கொள்வதாக இல்லை - அதனால்தான் எனது கருத்தைச் சொல்லாமல் ஒரு ரசிகனின் குமுறலை பதிவு செய்திருக்கிறேன்! 

தமிழகத்தின் ஒரு பிரபல 'நடுநிலை' நாளிதழ்தான் இந்த விஷயத்தில் இப்படி விஜய்யைக் கோர்த்து விட்டதாகவும் சொல்கிறார்கள்! இதுவும் உண்மையாகவே இருக்கலாம்!

அதே நாளிதழ்தான் மூன்று வருஷத்துக்கு முதல் அஜித்தைக் கோர்த்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்!அந்த நேரத்தில் நம்ம நண்பர்களான புலம்பெயர் நாடுகளில் வாழும் விஜய் ரசிகர்கள் சிலர் உற்சாகமாக ஏகனைப் புறக்கணிப்போம்னு Facebook ல ஒரு Page கிறியேட் பண்ணி இருந்தார்கள்!  

புலம்பெயர் தமிழர் எல்லாரும் வெற்றிகரமாக புறக்கணித்ததால்,'எஸ்' ஆகிட்டாய்ங்க! நாமதான் தெரியாம போயி.. சோகன் ஆகிட்டோம். 

அந்தப் புறக்கணிப்பாலதான் அந்த அருமையான படம் ஊத்திக்கிச்சுன்னு இன்னும் சிலபேர் சீரியஸா நம்பிட்டிருக்காய்ங்க - இயக்குனர் ராஜூசுந்தரம் உட்பட!


அதே நேரம் இந்த சர்ச்சைக்கு தகுந்த பதில் சொல்வதற்காக எஸ்.ஏ. சந்திரசேகர் உட்கார்ந்து கடுமையாக யோசித்து வருவதாகவும், ஓரிரு நாட்களில் நல்லதொரு பதில் தருவார் என்றும் அவர் சொன்னார்! 

மேன்மை தங்கிய திரு.எஸ்.ஏ.சியின் அறிக்கைகள், கருத்துகள் என்றுமே பொருள் பொதிந்தவை! ஆழமாக சிந்திக்கத் தூண்டுபவை!

திமுக வின் படுதோல்விக்கு என்ன காரணம்? இதற்கான பதில் தேடி பத்திரிகையாளர்கள், பதிவர்கள், உடன்பிறப்புகள், ஏன் ஜெயலலிதா கூட தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தபோது எஸ்.ஏ.சி. அதற்கான காரணத்தை மிக எளிமையாக விளக்கினார். அதாகப்பட்டது,

'கடந்த தேர்தலில் புதிய வாக்காளர்களில் ஐம்பது வீதமானோர் விஜய் ரசிகர்கள்!'

மீதி ஐம்பது வீதம்? 

அவர்கள் எஸ்.ஏ.சி.யின் ரசிகர்கள் என்பதை அவர் சொல்லி நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை!    

தனது தாயாரின் வைர நகைகளை கேத் மிடில்டனுக்கு வழங்கிய வில்லியம்!!

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்-கேத் மிடில்டன் திருமணம் கடந்த ஏப்ரல் 29ந் திகதி கோலாகலமாக நடந்தது.

இதற்கு முன்னதாக திருமண நிச்சயதார்த்தத்தின் போது மறைந்த தனது தாயார் டயானாவின் மோதிரத்தை கேத்ரீனுக்கு வில்லியம் அணிவித்தார். அந்த மோதிரம் நீலக்கல் மற்றும் வைரம் பதிக்கப்பட்டது. இது உலக மக்களை மிகவும் கவர்ந்தது.

இந்த நிலையில் தற்போது மனைவி இளவரசி கேத்ரீனுக்கு தனது தாயார் டயானாவின் ஒரு ஜோடி வைர கம்மல்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இதுவும் வைரம் மற்றும் நீலக்கல் பதிக்கப்பட்டவை. 

இவை ஏற்கனவே அவர் வழங்கிய நிச்சயதார்த்த மோதிரத்துக்கு இணையாக உள்ளன. மோதிரம் மற்றும் கம்மல்கள் அனைத்தும் 18 காரட் வைரங்களால் ஆனவை. இவை இளவரசி டயானாவுக்கு மிகவும் பிடித்தமானவை. 

கடந்த 1980 முதல் 1990ம் ஆண்டுகளில் பல விதமான கம்மல்களை அவர் அணிந்து மகிழ்ந்தார். சமீபத்தில் கனடா மற்றும் அமெரிக்கா சென்ற போது இளவரசி கேத்ரீன் இந்த கம்மலை அணிந்து தான் சென்று இருந்தார். கடந்த 1983ம் ஆண்டு கனடா சென்ற டயானாவும் இதே கம்மலை தான் அணிந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் பிரபுதேவா வலையில் - சமீரா ரெட்டி!

டான்ஸ் டைரக்டர் பிரபுதேவாவின் பிரபாகரன் படபிடிப்பு கொல்கத்தாவில் நடந்து வருகிறதாம். இதற்காக நடிகை சமீரா ரெட்டி கொல்கத்தா சென்றுள்ளாராம். இதை அவரே தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பிரபுதேவா இயக்கத்தில் விஷால், சமீரா ரெட்டி நடிக்கும் படம் பிரபாகரன். தெலுங்கில் சூப்பர்ஹிட்டான சவுரியம் படத்தின் ரீமேக் தான் பிரபாகரன்.

இந்த படத்தின் ஒரு பாடல் காட்சி கொல்கத்தாவில் படமாக்கப்பட்டு வருகிறது. இது குறித்து படத்தின் நாயகி சமீரா ரெட்டி டுவிட்டரில் கூறியுள்ளதாவது,

கொல்கத்தாவில் உள்ள ஹவுரா பாலத்தில் பாடல் படபிடிப்பு. அருமையான தட்ப வெட்பம். இயக்குனர் பிரபுதேவாவின் படத்திற்காக டான்ஸ் ஆடுகிறேன் என்றார்.

நல்லா ஆடுங்க!



Channel 4 நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை: கோத்தபாய கோரிக்கை

கொழும்பு, ஜூலை.29: பொறுப்பற்ற விடியோ காட்சிகளை ஒளிபரப்புவது தொடர்பில் பிரிட்டன் அரசு சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சக செயலாளர் கோத்தபாய ராஜபட்ச கோரிக்கை விடுத்துள்ளார்.கடந்த புதன்கிழமை சேனல் 4 தொலைக்காட்சி, இலங்கையில் போர்க்குற்றம் என்ற தலைப்பில் புதிய விடியோ ஒன்றை  ஒளிபரப்பியது.அதில், இறுதிப்போரின் போது சரணடைந்தவர்களை கொல்லுமாறு அப்போதைய வன்னி கட்டளையதிகாரியாக இருந்த சவேந்திர சில்வாவுக்கு கோத்தபாய உத்தரவிட்டதாக காட்சிகள் இருந்தன.

இதற்காக சவேந்திர சில்வாவுடன் பணியில் இருந்த இரண்டு ராணுவ வீரர்களின் பேட்டியை சேனல் 4 ஒளிபரப்பியது.இது முற்றிலும் பொய்யான விடியோ என்று குறிப்பிட்டுள்ள கோத்தபாய, இறுதிப்போரின் போது என்ன நடந்தது என்று சவேந்திர சில்வா அனைவருக்கும் கூறுவார். எதிர்காலத்தில் என்ன செய்யப்போகிறார் என்றும் அவர் தெரிவிப்பார் என்று குறிப்பிட்டார்.
இலங்கையில் அப்போது ஐக்கிய நாடுகளின் உறைவிடப் பிரதிநிதியாக இருந்த நீல் பூஹ்னே, யாரும் சரணடைவது குறித்து தமக்கு அறிவிக்கவில்லை.இந்தநிலையில் போரில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை எவ்வாறு கூறமுடியும் என்றும் கோத்தபாய கேள்வி எழுப்பினார்.

முல்லைத்தீவு அரசு அதிபரின் தகவல்படி 3 லட்சம் பொதுமக்கள் பதிவுசெய்யப்பட்டிருந்தனர்.போர் முடிந்த போது 294 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்திருந்தனர். தமிழீழ விடுதலைப்புலிகளில் பலர் போரின் போது கனடா மற்றும் இந்தியாவுக்கு தப்பிச்சென்றனர்.தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்படைத் தளபதியாகவிருந்த சூசை மற்றும் தமிழ்செல்வனின் குடும்பங்கள் கடல்வழியாகத் தப்பிச்செல்லும் போது கைதுசெய்யப்பட்டனர்.

சூசை பல கடற்படையினரின் கொலைகளுக்கு பொறுப்பு என்ற அடிப்படையில் தாம், அவர்களை கொன்றிருக்கலாம். ஆனால் அவர்களின் குடும்பத்தினரை இலங்கை அரசாங்கம் இன்றும் பாதுகாக்கிறது.பிரபாகரனின் பெற்றோரை இலங்கை அரசாங்கம் உரியமுறையில் பராமரித்தது.சரணடைந்த 11,000 தற்கொலையாளிகள் மற்றும் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டனர்.தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினரான பெண் ஒருவரை, 200,000 பொதுமக்கள் மத்தியில் இருந்து படையினர் காப்பாற்றியதை முந்தைய விடியோ காட்சிகள் நிரூபித்துள்ளதாகவும் கோத்தபாய தெரிவித்தார். 

Source by : Dinamani