காதலை சொல்ல ஒரு I-phone செயலி

அவளிடமும் ஐபோன் இருந்தது.
என்னிடமும் ஐபோன் இருந்தது.
ஆகவே ஒரு செயலி மூலம் காதலை சொன்னேன்.

இப்படி புதுக்கவிதை போல யோசித்து காதலை ஹைடெக்காக சொல்லி வெற்றி பெற்றிருக்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னியைச்சேர்ந்த சாப்ட்வேர் நிபுணரான சபா இடேல்கனி.

கொஞ்சம் ஆச்சர்யமான காதல் கதை தான் இவருடையது.இடேல்கனி தன்னுடையா தோழியான மெலோடியுடன் மூன்றாண்டுகளாக படகி வந்தார்.பழகத்துவங்கிய ஆறாவது மாதமே மெலோடியை காத‌லிக்கவும் துவங்கிவிட்டார்.ஆனால் இந்த காதலை சொல்லாமலேயே பழகி வந்தார்.

மூன்று ஆண்டு நெருக்கமாக பழகிய பிறகு கடந்த நவம்பர் மாதம் மெலோடியிடம் மனம் திறந்து காதலை சொல்லி மணந்து கொள்ள சம்மதமா என‌ கேட்டுவிட தீர்மானித்தார்.
காதலை சொல்வது என முடிவு செய்தவுடன் எப்படி சொவது என்னும் அடுத்த கேள்வி பிறந்தது.காதலை சொல்வதில் அவருக்கு எந்த தயக்கமும் இருக்கவில்லை.இருப்பினும் கொஞ்சம் புதுமையான முறையில் காதலி வெளீப்படுத்த நினைத்தார்.காதலி மெலோடியை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி காதல் சொன்ன கணத்தை மறக்க முடியாத தருணமாக மாற்ற வேண்டும் என நினைத்தார்.

தன‌க்கு முன்னர் பலர் புதுமையான வகைகளில் காதலை வெளிப்படித்தி காதலியின் கவனத்தை மட்டும் அல்லாமல் உலகின் கவத்தையும் ஈர்த்திருப்பதை அவர் படித்திருக்கிறார்.விமானத்தில் பறந்த படி காதலை சொன்ன காதலர்களை எல்லாம் நினைத்து பார்த்த இடேல்கனி தானும் அதே போல முற்றிலும் புதுமையாக காதலியின் மனதை கவர வேண்டும் என விரும்பினார்.

இப்படி தீவிராமாக யோசித்துக்கொண்டிருந்த போது தான் அவருக்கு ஐபோன் நினைவுக்கு வந்தது.அவரும் ஒரு ஐபோன் பிரியர்.காதலி மெலோடியும் ஐபோன் பிரியை.அது மட்டும் அல்ல மெலோடி வீடியோ கேம் ஆடுவதிலும் விருப்பம் மிக்கவர்.சுவாரஸ்யமான கேம் கிடைத்துவிட்டால் நாள் முழ்வதும் மெலோடி அதிலேயே மூழ்கி விடுவார்.
ஐபோனில் விளையாடக்கூடிய வீடியோ கேம்களை பலர் செயலிகளாக உருவாக்கியிருப்பதை அறிந்திருந்த இடேல்கனி தானும் ஒரு செயலி மூலமே காதலியிடம் மனதில் உள்ளதை சொன்னால் என்ன என்னும் ஐடியா மின்னல் கீற்று போல தோன்றியது.

உடனே இதற்கான செயலியை உருவாக்கித்தரக்கூடியவர்களை இணையத்தின் மூலம் தேடினார்.முதலில் ஒருவர் 750 டாலருக்கு காதலை சொல்லும் செயலியை வடிவமைத்து தருவதாக தெரிவித்தார்.ஆனால் இடேல்கனியோ அதைவிட் இருமடங்கு தொகை தருவதற்கு தயாராக் இருந்தார்.காரணம் எந்த தாமதமும் இல்லாமல் செயலி குறித்த நேரத்தில் கையில் கிடைக்க வேண்டும் என்பதற்காக விலையை பற்றி அவர் கவலைப்படவில்லை.இறுதியில் டெக்சாசை சேர்ந்த ஒருவர் இதற்கு ஒப்புக்கொண்டு சொன்னபடி குறித்த நேரத்தில் காதல் செயலியை உருவாக்கி கொடுத்துவிட்டார்.

ஐந்தே நாட்களில் செய்லி கைக்கு வந்து சேர்ந்துவிட இடேல்கனி குறிப்பிட்ட தினத்தன்று காதலியின் ஐபோனில் அந்த செயலியை பதிவேற்றி பயன்படுத்தி பார்க்க சொன்னார்.காதலி மெலோடியும் புதிய வீடியோ கேமை விளையாடும் சுவாரஸ்யத்தோடு அந்த செயலி காட்ட்சிய வழிகளை பின்பற்றத்துவங்கினார்.
புதையல் தேடிச்செல்லும் விளையாட்டு போல அந்த விளையாட்டு உருவாக்கப்பட்டிருந்து.வரைபடம் ஒன்றில் பல்வேறு இடங்கள் சுட்டிகாட்டப்பட்டு அடுத்த கட்டமாக எங்கே செல்ல வேண்டும் என்ற குறிப்பும் தோன்றயவாறு அந்த விளையாட்டு முன்னேறியது.மெலோடி அந்த வழியை பின்பற்றியவாறு தனது காரில் ஒவ்வொரு இடமாக சென்று கொண்டிருந்தார்.

அந்த இடங்கள் எல்லாமே அவர்கள் காதலர்களாக சுற்றிப்பார்த்த இடங்கள் என்பது அவருக்கு மெல்ல புரிந்த நிலையில் அவருக்குள் ஒருவித எதிர்பார்ப்பு உண்டானது.இதனிடையே ஒவ்வொரு கட்டத்திலும் அவரது அனுபவங்கள் புகைப்ப‌டங்களாக அவருடைய பேஸ்புக் பக்கத்திலும் இடம்பெற்றன.இந்த வகையில் நண்பர்களும் அவரது பயணத்தை பார்க்க முடிந்தது.
சிட்னி நகரில் உள்ள ஓட்டல்கள் ,பூங்காக்கள்,ரெயில் நிலையங்கள் ஆகியவை வழியே அழைத்து சென்ற பிறகு அந்த செயலி மெலோடியை கடைசியாக அவரது வீட்டிற்கே அழைத்து சென்றது.இந்த பயணத்தின் நடுவே அவருக்கு சில பொருட்களும் கிடைத்திருந்தன.வீட்டுக்கு வந்ததும் அந்த பொருட்களை ப்யன்படுத்தி தேடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்.அப்போது அவரது படுக்கை அறையில் கரடி பொம்மை ஒன்று இருந்தது.மூன்று ஆண்டுகளுக்கு முன் இடேல்கனி பரிசாக தந்த பொம்மை அது.
மேலோடியிடம் சின்ன கத்திரியும் வந்து சேர்ந்திருந்தது.உடனே அந்த கத்திரியால் பொம்மையின் மையப்பகுதியில் க‌த்திரித்து பிரித்துப்பார்த்தார்.அப்படியே பரவசத்தில் ஆழ்ந்துவிட்டார்.

பொம்மைக்குள் என்னை மணந்து கொள்ள விருப்பமா என்று கேட்டு காதலன் இடேகனி எழுதிய சீட்டு இருந்ததே பரவசத்திற்கு காரணம்.மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே இடேல்கனி அந்த சீட்டை வைத்து பொம்மையை பரிசளித்தை நினைத்து அவர் மேலும் நெகிழ்ந்து போனார்.
இந்த தகவலை இடேல்கனி புதுமையான முறையில் தெரிவித்ததும் அவரது மக்ழிச்சியை இரட்டிப்பாக்கியது.

முகமெல்லாம் மகிழ்ச்சி பொங்க ,கண்களில் ஆனந்த கண்ணிர் வழிய திருமண‌த்திற்கு ஒப்புக்கொள்வதாக தெரிவித்தார்.
செல்போனில் செயல்படக்கூடிய செயலிகள் எந்த எந்த வகையில் எல்லாம் கைகொடுக்கும் என்பதற்கான மெற்றொரு சுவாரஸ்யமான உதாரணம் இது.

0 comments:

Post a Comment