சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய இங்கிலாந்து கப்பலில் 240 தொன் வெள்ளி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1940ஆம் ஆண்டு டிசம்பரில் எஸ்.எஸ்.கெய்ர்சப்பா என்ற இங்கிலாந்து கப்பல் இந்தியாவிலிருந்து புறப்பட்டு இங்கிலாந்தின் லிவர்பூல் நகருக்கு சென்றது. கப்பலில் 240 தொன் வெள்ளி, இரும்பு மற்றும் தேயிலை ஆகியவை ஏற்றப்பட்டிருந்தன.கப்பல் 1941, பெப்ரவரி 17ல் அயர்லாந்து நாட்டின் தென்மேற்கு பகுதிக்கு 300 மைல் தொலைவில் வந்த பொழுது பருவநிலை மற்றும் எரிபொருள் இல்லாமை ஆகியவற்றால் தத்தளித்து கொண்டிருந்தது. அது 2ஆம் உலக போர் நடைபெற்று கொண்டிருந்த சமயம்.
அதனை நடுக்கடலில் வைத்து ஜெர்மனி நாட்டின் நீர்மூழ்கி கப்பலான யு101 தாக்கி மூழ்கடித்தது. இதில் ஒருவரை தவிர கப்பலில் இருந்த 85 பேர் கொல்லப்பட்டனர்.
தற்போது இந்த கப்பல் அட்லாண்டிக் கடற்படுகையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் 155 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ஸ் மதிப்பிலான வெள்ளி இருப்பது தெரிய வந்துள்ளது.
0 comments:
Post a Comment