ரொம்ப ரொம்ப சிறிய புகைப்பட கருவி கண்டுபிடிப்பு !

 உலகின் முதலாவது மிகச் சிறிய விற்பனைக்கான புகைப்படக்கருவியினை அமெரிக்க நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது.


வெறும் 26 மில்லி மீற்றர் அளவான இக்கருவியின் மூலம் 2 மெகா பிக்ஸல் வரையான புகைப்படத்தினை எடுக்க முடியும். 
 
மேலும் இதன் மூலம் வீடியோ பதிவும் மேற்கொள்ள முடியும்.
 
இதன் நிறை 26 கிராம்களே ஆகும். இதனை அமெரிக்காவைச் சேர்ந்த ஹமாசர் ஸ்கிலிமெர் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதன் விலை 99.95 அமெரிக்க டொலர்களாகும்.உருவத்தில் சிறிதெனினும் செயற்பாட்டில் இக்கருவி பெரிய புகைப்படக்கருவிகளுக்கு சமமானதெனவும், சந்தைக்கு வரும் போது பெரும் வரவேற்பைப் பெறுமெனவும் இதனை உருவாக்கியுள்ள நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
இதே நேரம் கடந்த மே மாதம் இஸ்ரேலைச் சேர்ந்த மெடிகஸ் நிறுவனம் 0.99 மில்லி மீற்றர் அளவிலான புகைப்படக்கருவி ஒன்றை அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.



0 comments:

Post a Comment