500,000 Facebook கணக்குகளைத் திருடிய கில்லாடி கைது

‘Spam king’ என்று பிரபல்யமாக அழைக்கப்பட்ட நபர் ஒருவரை குடீஐ கைதுசெய்துள்ளது.

2008 நவம்பரிற்கும் 2009 மார்ச்சிற்குமிடையில் 500,000 மின்னஞ்சல்களைக் களவாடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தான்.

நண்பர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற 27 மில்லியன் ஒன்லைன் செய்திகளை இந்நபர் பயன்படுத்தியிருந்தார்.

செய்திகளுக்குள் உள்ள இணைப்பு முகவரிகளைத் (link) தெரிவுசெய்தால் ஒரு வழிகாட்டி தோன்றி அது ஒருவரது முழுப்பெயர், மின்னஞ்சல் முகவரி போன்றவற்றைக் கேட்கும் ஓர் ஏமாற்று இணையத்தளத்திற்குள் அழைத்துச்செல்லும்.இறுதியில் அவர்களை அது மீண்டும் தங்களது பழைய தளத்திற்கே அழைத்துச்செல்லும். இதன்மூலம் வலஸ் குறிப்பிடத்தக்க இலாபத்தை அடைந்துள்ளான்.குற்றச்சாட்டின்படி, Facebook இன் மின்னஞ்சல் filter  களில் காணப்படும் பலவீனங்களில் தான் இத்திட்டம் தங்கியிருந்தது என்பது தெரியவந்தது.

இத்திட்டத்தினை முழுமையாக்க, இரண்டு Facebook கணக்குகளிற்கு இடையில் வலஸ் முதலில் தனது களவாடல் திறமையைப் பரிசோதித்துப் பார்த்திருக்கின்றான்.‘David Frederix’ இணையத்தளத்திலும் அதன் சட்டரீதியான நண்பனான ‘Sanford Masterwb Wallace’ இலும் போலியான Facebook  கணக்குகளைப் பயன்படுத்தியிருந்தான்.

இதனை அவன் Facebook  இன் வடிகட்டல் பொறியமைப்பிற்குள் நுழைந்து செல்லக் கூடியவாறு பல மின்னஞ்சல் செய்திகளை விதவிதமாக அனுப்பிப் பரிசோதித்தான்.இந்த வடிகட்டிகளுக்குள் அவன் நுழைந்ததும் அதனை ஏற்றுக்கொண்ட Facebook பயனாளர்களின் கணக்கிற்குள் ஒரு தன்னியக்கப் பதிவுச்செயற்பாட்டை மேற்கொண்டான்.

இதனால் அந்தப் பயனாளரின் நண்பர்களது பட்டியலைப் பதிந்து பின்னர் அவர்கள் ஒவ்வொருவரதும் Facebook பக்கங்களுக்கும் ஒரு செய்தியை அனுப்பினான்.வலஸ் தற்போது முழுவதுமாக 11 ஏமாற்று வேலைகளுக்காகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளான்.2009 ஒக்ரோபரில், ஒரு சமூக வலைத்தளத்திற்கு 711 மில்லியன் டொலர்கள் செலுத்துமாறு வலசிற்கு அபராதம் விதிக்கப்பட்டது.ஆனால் இதனை வலஸ் செலுத்துவானென அந்நிறுவனம் எதிர்பார்க்கவில்லை.ஆனால் நீதிபதி அவருக்கு Facebook இற்குள் செல்லக்கக்கூடாது என்ற சட்டத்தினை விதித்திருந்தார்.

வலஸ் 1990களில் தான் ஒரு மின்னஞ்சல் திருடனாக வெளியுலகிற்கு அறிமுகமாகினான்.

அத்துடன் 2008 இல் MySpace  இனால் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் 100,000 டொலரிற்குப் பிணையில் வெளிவந்தான்.குறித்த நபருக்கு ஒவ்வொரு குற்றங்களுக்கும் 250,000 டொலர் தண்டப்பணமும் 3 வருடச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.அத்துடன் ஒரு பாதுகாப்பான சர்வதேசக் கணினிக்குச் சேதம் விளைவித்ததற்கான 3 குற்றங்களுக்கும் 10 வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.வலசின் கைதை ifij Facebook  இணையத்தளம் வரவேற்றுள்ளது.

Want Money ? just Click and register

1 comments:

Anonymous said...

good post

Post a Comment