பெண்களின் மார்பகங்களை கடிக்கும் கிறிஸ் பூதங்கள்! (Sri Lanka)

இலங்கையின் கிறிஸ் பூதங்கள் குறித்து ரொய்ட்டர் செய்தி நிறுவனம் இன்று செய்தி பிரசுரித்து உள்ளது.கிறிஸ் பூதங்களின் இரவு நேர அட்டகாசங்களால் நாடு பூராவும் பதற்றம் நிலவுகின்றது என இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.கிறிஸ் பூதங்கள் ஏற்படுத்திய குழப்பங்களால் இவ்வாரம் குறைந்தது மூன்று மரணங்கள் நேர்ந்து உள்ளன.பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். ஆண்கள் ஆயுதங்களுடன் காவல் காக்கின்றனர்.
 
கள்வர்கள் ஜட்டி மாத்திரம் அணிந்து கொண்டு உடல் முழுவதும் தாரைப் பூசிக் கொண்டு இரவு நேரங்களில் களவுக்கு போன காலம் இருந்தது.எவரும் அடையாளம் காணக் கூடாது என்பதற்காகவே உடல் முழுவதும் தார் பூசிக் கொண்டார்கள். இத்திருடர்கள்தான் கிறிஸ் பூதங்கள் என்று முதலில் அழைக்கப்பட்டனர்.

ஆனால் தற்போது ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கின்ற கிறிஸ் பூதங்கள் பெண்களை பயமுறுத்துகின்றனர். பெண்கள் மீது தாக்குதல்கள் நடத்துகின்றனர். பெண்களின் கழுத்து, மார்பக முலைகள் ஆகியவற்றின் மீது பாய்ந்து கடிக்கின்றனர்.

இப்பூதங்கள் குறித்து ஏராளமான முறைப்பாடுகள் பொலிஸாருக்கு மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. ஆனால் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்காமல் சும்மா இருக்கின்றனர்.பொதுமக்களால் இரு இடங்களில் பிடித்துக் கொடுக்கப்பட்ட பூதங்களை விடுதலை செய்து இருக்கின்றார்கள்.


கிறிஸ் பூதங்களின் நடவடிக்கைகளுக்கு பொலிஸார் உதவி, ஒத்தாசைகள் வழங்குகின்றனர் என்கிற சந்தேகத்தில் பொதுமக்கள் பொலிஸ் நிலையங்களை முற்றுகையிட்ட சம்பவங்களும் இடம்பெற்று உள்ளன.


கிறிஸ் பூதம் ஒருவரை பொலிஸார் விடுவித்தனர் என்கிற சந்தேகத்தில் கிழக்கு மாகாணத்தின் ஓட்டமாவடி மக்கள் பொலிஸ் நிலையம் மீது செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதல்களில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் உட்பட அறுவர் காயப்பட்டு இருக்கின்றார்கள்.

கிறிஸ் பூதங்கள் என்று பொதுமக்களால் அப்புத்தளைத் தோட்டத்தில் அடையாளம் காணப்பட்ட இருவரை சில ஆட்கள் கடந்த புதன்கிழமை அடித்துக் கொன்று இருக்கின்றார்கள்.கிறிஸ் பூதங்களை தேடி காட்டுப் பகுதியில் அலைந்து திரிந்த 22 வயது இளைஞன் ஒருவர் காட்டுப் பன்றிகளுக்கு வைக்கப்பட்டு இருந்த மின்சாரப் பொறியில் தவறுதலாக சிக்கி உயிர் இழந்து உள்ளார்.

கிறிஸ் பூதங்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் சுமார் 30 இடம்பெற்று உள்ளன.

பெருந்தோட்டப் பிரதேசங்கள், கிழக்கு மாகாண கரையோர பிரதேசங்கள் ஆகியவற்றிலேயே கிறிஸ் பூதங்களில் ஊடுருவல்கள் அதிகம் இடம்பெற்று வருகின்றன.

கிறிஸ் பூதங்கள் என்கிற சந்தேகத்தில் கடந்த மாதம் 47 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள்.


பொதுமக்கள் வர்ணிக்கின்றபடியாக கிறிஸ் பூதங்கள் என்று உண்மையில் யாரும் கிடையாது, திருடுதல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற சிலர் கைவரிசைகள் காட்டுகின்றார்கள்,

மனச் சம நிலை பாதிக்கப்பட்ட சிலரும் கிறிஸ் பூதங்களாக வேடம் போடுகின்றார்கள் என்று பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்து உள்ளார்.


இலங்கையர்கள் மத்தியில் பேய்கள், பிசாசுகள், ஆவிகள் குறித்த நம்பிக்கைகள் காலம் காலமாக நிலவி வருகின்றன. சில கிராமங்களில் இந்நம்பிக்கைகள் இன்னமும் நீடித்து வருகின்றன.நோய்களை குணப்படுத்துதல், எதிரிகளை பழிவாங்குதல் போன்ற நடவடிக்கைகளை பேய்கள், பிசாசுகள், ஆவிகள் போன்றவற்றின் உதவிகளுடன் செய்யலாம் என்று நம்பப்படுகின்றது.



0 comments:

Post a Comment