செல்போனில் பண பரிவர்த்னை - இன்று தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியினால் நமது வாழ்க்கைமுறையும், வேலையும் மிக எளிமையகியுள்ளது என்றால் அது மிகை ஆகாது. அதே நேரம் அவையால் விளையும் ஆபத்துகள் கற்பனைக்கு எட்டாதவை.
இன்று வங்கியின் பண பரிவர்த்தினை மற்றும் பண பரி மாற்றத்தினை வீட்டில் இருந்தோ அல்லது நாம் இருக்கும் இடத்தில் இருந்தோ கைப்பேசியின் (செல்போன்) மூலம் செய்யும் அளவிற்கு விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வளர்ந்திருக்கிறது. அதே சமயம் இதனால் விளையும் அபாயங்களை நாம் அறியாதது நம் அறியமையே.
இந்த பரிவர்த்தினை ஸ்மார்ட்போன் என்று அழைக்கப்படும் நவீன ரக கைப்பேசியின் மூலம் செய்யப்படுகிறது. இவ்வகையான கைப்பேசிகள் இயங்கு தளங்களின் (Operatin System) அடிப்படையில் இயங்குகின்றன. இது போன்ற பண மாற்றத்தின் போது நாம் உபயோகிக்கும் கடவுச்சொல் (பாஸ் வோர்ட்) எனும் ரகசிய குறியீடுகளை (வைரஸ்) எனும் கணினி நஞ்சுகாலாள் திருடப் படுகின்றன. இதனால் நம் வங்கியின் பணத்தை இழக்க நேரிடும்.
இந்த தற்கால வைரஸ் ஜித்மோ (Zitmo) என்று அழைக்கப்படுகிறது. இவை மென்பொருள் தயாரிப்பாளர்களுக்கு பெரிய சவாலாக திகழ்கின்றன. இந்த வகையான வைரஸ்கள் இணைய தளங்களிலிருந்து தரவிருக்கம் செய்யும்போது கைப்பேசியினுள் வந்துவிடுகின்றன. இவை உள் நுழைந்தவுடன் இயங்கு தளத்தின் கட்டுப்பாட்டினை இவைகளின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருகின்றன. மற்ற நேரங்களில் அமைதியாகவே உள்ளன, உபயோகிப்பாளர் வங்கியின் இணையத்திற்கு சென்றவுடன் இவை வேலை செய்யகின்றன.
சந்தையில் இன்று மிகவும் விற்பணையாகும் ஆன்றாய்டு இயங்குதளம் கொண்ட கைப்பேசிகள் இது போன்ற வைரஸ்களால் எளிதாக பாதிககப்படுகின்றன என்பது அறிவியல் வல்லுநர்களின் கருத்து. அது மட்டும் இன்றி ஆப்பிள் போன்ற விலை உயர்ந்த போன்களையும் இவை விட்டு வைக்கவில்லை. இது பற்றி முன்னணி வங்கியின் மேலாளர் பேசுகையில், வ்ங்கியால் முடிந்த அளவிற்கு பாதுகாப்பினை வழங்கி வருகிறது. உபயோகிப்பாளர் தங்கள் பணத்தின் மீது கவனம் கொண்டு கடவுச்சொல்லை யாரலும் கனிக்க முடியாதவாறு உபயோகிக்க வேண்டும், (Public Wi-FI) எனப்படும் பொதுவான பிணையத்தினை தவிர்க்கவும். அவ்வப்போது மென்பொருளினை மேம்படுத்தி (Update) உபயோகிக்கவும்.
0 comments:
Post a Comment