Photoshop Tutorials - ஒரே நிமிடத்தில் சூரியோதயம்

Photoshop Examples
புகைப்படங்களை கலைநயம் மிக்க படைப்பாக மாற்ற போட்டோஷாப் பல வகைகளில் நமக்கு உதவி புரிகிறது.அந்த வகையில் இன்று பார்க்கப்போவது சூரியோதயம்.ஒரே நிமிடத்தில் முடிந்து விடக்கூடிய மிக எளிமையான படைப்பு.




மேலே இரண்டு படங்கள் உள்ளது. இதில் உதாரணமாக படம் ஒன்று நமக்கு பிடித்த படம்.ஆனால் படம் இரண்டில் உள்ளது போல் சூரியோதயம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தால் கவலையே பட வேண்டாம்.ஒரே நிமிடத்தில் அதை செய்து விடலாம்.அதை எப்படி என்பதை பார்ப்போம்.
போட்டோஷாப்பில் இரண்டு படங்களையும் திறந்து கொள்ளுங்கள்.

படங்களை திறந்து கொண்டவுடன் Image - Adjustment - Match Color ஐ Click செய்யுங்கள். வரும் விண்டோவில்  Luminance-100, Color Intensity-100, Fade-50 என மதிப்பு கொடுங்கள். fade ன் மதிப்பை உங்கள் விருப்பதுக்கு கூட்டிக்குறைத்துக்கொள்ளலாம்.கீழே Source என்பதில் படம்-2 ஐ தேர்வு செய்யுங்கள்.அதாவது நமக்கு தேவையான கலர் உள்ள படம்.இபோழுது OK செய்யவும்.



Ok தந்தவுடன் நமக்கு கிடைத்த படம்.கீழே பாருங்கள்.இதில் Fade ன் மதிப்பு 25 தந்துள்ளேன்.
 







0 comments:

Post a Comment