HTC ChaCha மற்றும் LG Gelato - ஒரு ஒப்பீடு

எச்டிசி சச்சாவை ஒரு பேஸ்புக் மொபைல் என்று சொல்லலாம். ஏனெனில் இதில் உள்ள ஒரு பட்டனை அழுத்தியவுடன் நாம் பேஸ்புக்கில் எளிதாக நுழைந்து விடலாம். ஆனால் எல்ஜி கிலட்டோவில் பேஸ்புக் வசதி இல்லாவிட்டாலும் பல சமூக வலைதளங்களுக்குள் செல்லும் வசதிகளை வழங்குகிறது.

சோஷியல் நெட்வொர்க்கிங்கை எளிதாக செய்ய வேண்டும் என்பதற்காகவே எச்டிசி சச்சா தொடுதிரை வசதியையும் கிவெர்ட்டி கீபோர்டும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், பிரத்யேக பட்டன் மூலம் வீடியோ தொகுப்பை பேஸ்புக்கில் அப்லோட் செய்யலாம். 

ஆனால் எல்ஜி கிலட்டோவை பற்றி அதிகாரப்பூர்வமான தகவல்கள் இல்லையென்றாலும் அதைப் பற்றி ஏராளமான தகவல்கள் இணையதளத்தில் வருகின்றன. இதன்படி, எல்ஜி கிலட்டோ ஒரு ஆண்ட்ராய்டு மொபைலாக இருக்கும் என தெரிகிறது. மேலும் இது வேரிஸான் வயர்லஸ் நெட்வார்க்கைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எச்டிசி சச்சா 2G/3G நெட்வொர்க் சப்போர்ட்டுடன் ஆன்ட்ராய்டு ஜிஞ்சர்பிரீடு ஓஎஸ் வி2.3ஐ கொண்டிருக்கிறது. மேலும் இது 114.4 X 64.6 X 10.7எம்எம் பார் டைமன்சனுடன் 120 கிராம் எடையுடன் உள்ளது. அதே நேரத்தில் எல்ஜி கிலட்டோ 4.5 X 2.3 X 58 டைமன்சனைக் கொண்டிருக்கிறது.

மேலும் இது 3.2 இன்ச் அளவு டிஎப்டி கப்பாசிட்டிவ் தொடுதிரையுடன் 320 X 240 பிக்ஸல் ரிசலூஷனைக் கொண்டிருக்கிறது. ஆனால் எச்டிசி சச்சா 2.6 இஞ்ச் டிஎப்டி தொடுதிரையுடன் 256கே வண்ணங்களைக் கொண்டுள்ளது. மேலும் இது சக்தி வாய்ந்த 600 மெகாஹெர்ட்ஸ் ப்ராஸஸரையும் கொண்டிருக்கிறது.

எச்டிசி சச்சா ஆட்டோபோக்கஸ், எல்இடி ப்ளாஷ் கொண்ட ஆற்றல் வாய்ந்த 5 மெகா பிக்ஸல் கேமராவைப் பெற்றிருக்கிறது. மேலும் முகப்பு விஜிஏ கேமராவையும் கொண்டிருப்பதால் லைவ் சாட்டிங் செய்ய மிகவும் எளிதாக இருக்கும்.

அதே போல் எல்ஜி கிலட்டோவும் ஆட்டோபோக்கஸ் மற்றும் 2048 X 1536 பிக்ஸல் கொண்ட 3.2 மெகா கேமராவைக் கொண்டுள்ளது. மேலும் இதன் கேம் காடர் 3எக்ஸ் சூம் வசதியைக் கொண்டிருப்பதால் படங்களை எடிட் செய்வது எளிதாக இருக்கும்.

தொடர்பு வசதிகளைப் பார்த்தால் எச்டிசி சச்சா நவீன ப்ளூடூத் வி2.1 மற்றும் எ2டிபியைக் கொண்டிருக்கிறது. எல்ஜி கிலட்டோ மேற்சொன்ன அதே வசதிகளுடன் மைக்ரோ யுஎஸ்பி வசதியையும் கொண்டுள்ளது. மேலும் இது 802.11 பி/ஜி/என் வைபை வசதியையும் பெற்றிருக்கிறது. இரண்டு மொபைல்களுமே ஆன்லைன் வசதிக்காக இடிஜிஇ சப்போர்ட்டுடன் ஜிபிஆர்எஸ் கொண்டுள்ளன.

எச்டிசி சச்சா ஏற்கனவே ரூ.14,999க்கு சந்தையில் கிடைக்கிறது. ஆனாம் எல்ஜி கிலட்டோவின் விலை பற்றி இன்னும் தகவல்கள் வெளிவரவில்லை.


English summary
HTC ChaCha comes with a single touch to Facebook button. LG Gelato meanwhile is not Facebook addicted, but still offers variant services in social networking and demonstrates new attitudes of refined wireless communication. The phone will feature an android OS v2.3 Gingerbread with 2G/3G network supports. The design of the phone is predicted as a bar with dimensions 114.4 X 64.6 X 10.7 mm and weighs about 120 gram. LG Gelato at the same time is a 4.5 X 2.3 X 58.The phone will have a TFT Capacitive touch screen and has a size of 3.2 inch and with a resolution of 320 X 240 pixels. HTC ChaCha has a 5 Mega Pixel camera in its rear with a 2592 X 1944 pixels included with an autofocus LED flash. It has a VGA camera in the front enabling Live Chatting option. The camera in LG Gelato is 3.2 Mega pixels, with a resolution of 2048 X 1536 pixels. The autofocus feature is present here too. HTC ChaCha is already available in all the leading mobile shops with an estimated price tag of Rs 14999/-.The price details of LG Gelato is not revealed yet.

1 comments:

ஸ்ரீதர் said...

மிகவும் பயனுள்ள பதிவு நண்பரே!எனது வலைத்தளத்துக்கு ஒரு முறை வந்து போங்கள்.பிடித்திருந்தால் உங்கள் வாசக நண்பர்களிடம் அறிமுகப்படுத்துங்கள்!

Post a Comment