Blackberry upcoming product |
அதில் ஒன்று, பிளாக்பெர்ரி ப்ளேபுக். சகல தகவல் பரிமாற்ற வசதிகள் மட்டுமல்ல, அவற்றை வாடிக்கையாளர்கள் எளிதாக பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு வடிவமைத்து வாடிக்கையாளர்களை கட்டிபோட்டு வைத்துள்ளது பிளாக்பெர்ரி.
எனினும், ப்ளேபுக் டேப்லெட்டில் சில குறைகள் இருப்பதை கண்டுபிடித்த அந்த நிறுவனம், அவற்றை களைந்து புதிய ப்ளேபுக் வெர்ஷனை விரைவில் வெளியிட உள்ளதாக வதந்திகள் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
புதிதாக வரும் ப்ளேபுக்-2 வெர்ஷன் டேப்லெட் முந்தைய ப்ளேபுக்கைவிட அசத்தலான அம்சங்களுடன் வரும் என்று வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. அதிக துல்லியத்துடன் கூடிய 10 இஞ்ச் ஸ்கிரீன், கறுப்பு, வெள்ளை பேனல்கள் மற்றும் க்யூஎன்எக்ஸ் அப்டேட்டுன் வரும் புதிய ப்ளேபேக் மார்க்கெட்டில் சூறாவளியை கிளப்பும் என தெரிகிறது.
தவிர, இடையூறு இல்லா இன்டர்நெட் பிரவுசிங்கையும், எளிதாக அப்ளிகேஷன்கள் மற்றும் ஐகான்களை தேர்வு செய்யும் விதத்திலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முந்தைய ப்ளேபுக்கை விட ப்ளேபுக்-2 விலையில் அதிக வேறுபாடு கொண்டிருக்காது என்றும் கருதப்படுகிறது.
0 comments:
Post a Comment